Published:Updated:

`வயது மூப்பு; தீராத வலி; மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த மூதாட்டி பலி!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீக்குளித்து தற்கொலை
தீக்குளித்து தற்கொலை ( விகடன் )

தீராத வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகைப் பகுதியைச் சேர்ந்தவர் ராணி (70). திருமணமான சில வருடங்களிலேயே கருத்து வேறுபாட்டின் காரணமாக ராணியின் கணவர் அவரைப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, ராணி தனது தம்பி வெங்கடேசன் (69) என்பவரது வீட்டில் தங்கி, வேலைக்குச் சென்று வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணிக்கு ஏற்பட்ட விபத்து ஒன்றில், அவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அந்த சிகிச்சையின்போது மருத்துவர்கள் அவரின் காலில் இரும்புத் தகடு வைத்து அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராணிக்குக் கால் பகுதியில் இன்னும் அதிகமாக வலி ஏற்பட்டிருக்கிறது. அதனால், ராணி நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். வலி தாங்க முடியாமல் மாதக்கணக்கில் அவதிப்பட்டு வந்த ராணி, கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மன உளைச்சல்
மன உளைச்சல்
representational image
மது அருந்துவதற்கு பணம் தர மறுத்ததால் பாட்டிக்கு நிகழ்ந்த விபரீதம்; போலீஸ் விசாரணையில் கைதான பேரன்!

இந்த நிலையில், வயது மூப்பின் காரணமாகவும், தீராத வலியாலும் மனமுடைந்த ராணி நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி வைத்து தீ வைத்துக் கொண்டார். அதில், உடல் முழுவதும் தீ பரவி அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். பூட்டப்பட்ட அறையில் மூதாட்டி தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டதால், அக்கம் பக்கத்தினருக்கு எதுவும் தெரியவில்லை. பின்னர், நீண்ட நேரம் கழித்து வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய வெங்கடேசன் கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்ததாலும், கருகிய துர்நாற்றம் அதிகமாக வீசியதாலும், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்திருக்கிறார்.

திருநின்றவூர் காவல் நிலையம்
திருநின்றவூர் காவல் நிலையம்

அங்கு, ராணி உடல் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ந்து போனவர், உடனடியாகத் திருநின்றவூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, மூதாட்டி தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு