Published:Updated:

`கன்டெய்னர் லாரி; முன்னும் பின்னும் கார்கள்!'- ரகசியக் கண்காணிப்பால் சிக்கிய 700 கிலோ கஞ்சா

கன்டெய்னர்
கன்டெய்னர்

கோடியக்கரை கடத்தல் தொழிலில் மையமாக விளங்குகிறது. இங்கிருந்து இலங்கைக்குக் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் கடத்திச் செல்வதும், இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வருவதும் வழக்கமாய் நடைபெறுகின்றன.

மதுரையிலிருந்து கன்டெய்னர் லாரியில் 700 கிலோ கஞ்சாவைக் கடத்தி வந்த கும்பலை, மத்திய போதை தடுப்பு போலீஸார் மடக்கிக் கைது செய்திருப்பது நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

700 கிலோ கஞ்சா
700 கிலோ கஞ்சா

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையிலிருந்து முப்பது நிமிட நேரத்தில் இலங்கை சென்று விடலாம். எனவே, கோடியக்கரை கடத்தல் தொழிலில் மையமாக விளங்குகிறது. இங்கிருந்து இலங்கைக்குக் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் கடத்திச் செல்வதும், இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வருவதும் வழக்கமாய் நடைபெறுகின்றன.

இந்நிலையில் நேற்றிரவு மதுரையிலிருந்து கன்டெய்னர் லாரி ஒன்று கோடியக்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரிக்கு முன்னும் பின்னும் இரண்டு கார்களில் கடத்தல்காரர்கள் பாதுகாப்பாக வந்துள்ளனர். இதை ரகசியமாகக் கண்காணித்து வந்த மத்திய போதை தடுப்பு போலீஸார் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் லாரியை மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த 700 கிலோ கொண்ட 350 கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றினர்.

கன்டெய்னர் லாரி மற்றும் இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட வேதாரண்யத்தைச் சேர்ந்த செல்வராஜ், ஐயப்பன், பரமானந்தம், சென்னையைச் சேர்ந்த ரமணன் தவமணி ஆகிய ஐவரைக் கைது செய்துள்ளனர். தப்பிச்சென்ற மூவரைத் தேடிவருகிறார்கள்.

கடத்தி வந்த கும்பல்
கடத்தி வந்த கும்பல்

இந்தக் கடத்தலுக்கு முதல்நாளே சில அதிகாரிகளுக்குப் பணம் கைமாறியதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது. பெரிய அளவில் போதை பொருள் சிக்கிய விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

அடுத்த கட்டுரைக்கு