Published:Updated:

சென்னை: 6 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - 71 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

முதியவர் சுப்பையா

6 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 71 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது.

சென்னை: 6 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - 71 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

6 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 71 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது.

Published:Updated:
முதியவர் சுப்பையா

சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 6 வயது சிறுமி அந்தப் பகுதியிலுள்ள கடைக்குத் தின்பண்டம் வாங்கச் சென்றார். அப்போது கடையின் உரிமையாளரான சுப்பையா (71) என்பவர் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது குறித்து சிறுமி, அவரின் அம்மாவிடம் தகவல் தெரிவித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் அம்மா, கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.

சிறுமிக்குப் பாலியல் தொல்லை
சிறுமிக்குப் பாலியல் தொல்லை

சிறுமி அளித்த தகவலின்படி சுப்பையாவை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. கிண்டி அனைத்து மகளிர் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும் வழக்கின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்துவந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த 11.04.2022-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில் முதியவர் சுப்பையா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 366-ன் கீழ் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் போக்சோ சட்டப் பிரிவுகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5, 000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் ஓராண்டுச் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். அதனால் முதியவர் சுப்பையாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டணையும் 6,000 ரூபாயும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த போலீஸாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism