Published:Updated:

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

Published:Updated:
##~##

லக அளவில் கறுப்புப் பணம் அதிகம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இடம்... நம் இந்தியாவுக்குத் தான்! 

ஊழல் மூலம் சம்பாதித்த அரசியல்வாதிகள், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் மூலம் பணம் பண்ணிய தீவிரவாதிகள், வரி ஏய்ப்பு செய்யும் பெரும் தொழில் அதிபர்கள் ஆகிய மூன்று வகையினரை மையம் கொண்டுதான் சுற்றுகிறது, இந்த கறுப்புப் பணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1983-ம் ஆண்டு நம் நாட்டில்

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

36,768 கோடி மதிப்பில் கறுப்புப் பணம் இருந்தது. இன்றோ,

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

75 லட்சம் கோடி என்கிறார்கள், வருமான வரித் துறை அதிகாரிகள். நம் நாட்டின் மொத்த உள் நாட்டு

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

உற்பத்தியில், 5.1 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை கறுப்புப் பணத்தின் ஆதிக்கம் இருக்கிறது என்று மதிப்பிட்டு இருக்கிறார்கள்.

இப்படிச் சேர்க்கப்படும் பணம், சுவிட்சர் லாந்தில் உள்ள வங்கி களில் டெபாசிட்செய்யப் படுகின்றன. அங்கு இருக்கும் 408 வங்கிகளுக்கான கிளை கள் உலகம் முழுவதும் உள்ளன. இந்த வங்கிகளில் பெயர் அடிப்படையில் இல்லாமல், எண் அடிப் படையிலேயே கணக்கு துவங்கப்படும். ஓர் எண் ணுக்கு உரிய நபரை, அந்த வங்கிகளின் உயர் அதிகாரிகள் மட்டுமே அறிவார்கள்.

யூதர்களின் வங்கிக் கணக்குகளைப் பெற்று அவர்களை அழிக்கும் முயற்சியில் அன்றைய நாஜிப் படை ஈடுபட் டதால், சுவிஸ் நாடாளுமன்றம் 1934-ல் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. அதன்படி, அந்த வங்கியில் கணக்குவைத்து இருப்பவர்களைத் தவிர, வேறு யாருக்கும் எந்தத் தகவல்களையும் தர மாட்டார்கள்.

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, சுவிஸ் வங்கிகளில் கணக்குவைத்து இருப்பவர்களின் பட்டி யலைக் கேட்டது. இதேபோன்று ஜெர்மனி உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகள் முயற்சி செய்தும், எதுவும் நடக்கவில்லை. இப்போது சுவிஸ் வங்கிகளில் கணக்குவைத்து இருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டது விக்கிலீக்ஸ் இணையதளம்.

இப்போது, அமெரிக்காவும் ஜெர்மனி யும் அந்தப் பட்டியலை வாங்குவதில் மிகத் தீவிரமாக இருக்கின்றன. நம் மத்திய அரசோ, தீவிரமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான், 'மத்திய நேரடி வரிகள் வாரியக் கூட்டம், இரட்டை வரி தடுப்புச் சட்டம்’ எனப் பல கண்துடைப்பு நாடகங்களை அரங் கேற்றுகிறது.

வரி ஏய்ப்பு செய்வதை, இன்று வரையில் சிவில் குற்றமாகவே கையாள்கிறார்கள். அதனால் பிடிபடும்போது, வரி மற்றும் அபராதத் தொகை மட்டும் செலுத்திவிட்டு எளிதாகத் தப்பித்துவிடுகிறார்கள். அதனால், வரி ஏய்ப்பு செய்வதை கிரிமினல் குற்றமாக அறிவிக்கலாம். மேலும்,

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

ஒரு நாட்டுக் குடிமகன் இன்னொரு நாட்டில் சம்பாதிக்கிறார் என்றால், அந்த வருமானத் துக்கு அவரின் தாய்நாடு வரி விதிக்குமா? அல்லது அவர் பணியாற்றுகின்ற நாடு வரி விதிக்குமா என்கிற குழப்பமும் இருக்கிறது.

கறுப்புப் பணம் குறித்து ஆடிட்டர் எம்.ஆர்.வெங்கடேஷிடம் கேட்டபோது, ''முன்பு வரி கட்ட வேண்டுமே என்பதற்காக, வருமானத்தை மறைத்தார்கள். இன்று வருமானம் வந்த விதத்தையே மறைப்பதற்காக, வரி ஏய்ப்பு செய்கிறார்கள். 'நான் கஞ்சா விற்கிறேன். அதன் மூலம் வந்த வருமானத்துக்கு வரி செலுத்துகிறேன்’ என்று யாராவது சொல்ல முடியுமா? திரையரங்குகளில்

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

40 டிக்கெட்டை

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

70-க்கு விற்பனை செய்கிறார்கள். மீதம்

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

30 எந்தக் கணக்கில் வரும்? கஞ்சா, விபசாரம், ஆயுதக் கடத்தல் என மற்றவர்களின் ரத்தத்தை உறிஞ்சி சம்பாதிக்கும் பணத்தை, இன்று 'சிவப்புப் பணம்’ என்கிறார்கள்.

கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, 1961-ம் ஆண்டு 'மத்திய நேரடி வரிகள் வாரியம்’ ஏற்படுத்தப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. இப்போது அறிமுகமாகும் இரட்டை வரித் தடுப்புச் சட்ட ஒப்பந்தம் மூலமும் வெளிநாட்டு வங்கிகளில் கணக்குவைத்து கறுப்புப் பணத்தை சேமிப்பவர்களின் முழுத் தகவல்களையும் பெற முடியாது. 'டேக்ஸ் இன்ஃபர்மேஷன் எக்ஸ்சேஞ்ச் அக்ரி மென்ட்’ மட்டுமே நம்மிடம் இப்போது இருக்கும் ஒரே ஆயுதம். இதன் மூலம், கறுப்புப் பணம் வைத்து இருப்பவர்களின் தொலைபேசி உரையாடல்கள்,கணக்கு வழக்குகள், வியாபாரங்கள், வரி ஏய்ப்புகள் போன்றவற்றை ஆதாரங்களுடன் வெளிநாட்டு வங்கிகளிடம் கொடுத்து, அங்கு கணக்குவைத்து இருப்பவர்களின் தகவல்களைத் திரட்டி நடவடிக்கை எடுக்க முடியும். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளத் தவறும் நாட்டுடன் இருக்கும் மற்ற ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிடுவோம் என்று அறிவிக்க வேண்டும். அப்படிச் செய்வது ஒன்றுதான், இப்போதைக்கு இருக்கும் ஒரே தீர்வு!'' என்றார்.

அடுத்த உண்ணாவிரதம், யார்... எங்கே... எப்போ?

- ந.வினோத் குமார்

 கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

* பணத்தை சந்தையில் குறைத்து, வங்கிக் கணக்குகள் வழியே வர்த்தகப் பரிமாற்றங்கள் செய்ய வழி ஏற்படுத்த வேண்டும்.

* எளிமையான வரி அமைப்பினைக் கொண்டுவருதல் வேண்டும்.

* முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.

* வெளிநாட்டு வங்கியில் வரி கட்டாத பணத்தை டெபாசிட் செய்வதைத் தேசத் துரோகக் குற்றமாக அறிவிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை வைத்து வெளிநாட்டு வங்கிகளில் கணக்குவைத்து இருப்பவர்களின் விவரங்களை அந்த நாட்டு நீதிமன்றங்களின் ஒத்துழைப் போடு பெறவும், அந்தப் பணத்தை நம் நாட்டுக்குக் கொண்டுவரவும் முடியும்.

எந்தெந்த நாடுகள்... எவ்வளவு கறுப்புப் பணம்?

இந்தியா -

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

75 லட்சம் கோடி

ரஷ்யா -

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

25 லட்சம் கோடி

பிரிட்டன் -

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

20 லட்சம் கோடி

உக்ரைன் -

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

5 லட்சம் கோடி

சீனா -

கறுப்புப் பணம் தெரியும்! சிவப்புப் பணம் தெரியுமா?

4.8 லட்சம் கோடி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism