Published:Updated:

சின்னக்குத்தூசி பெயரால் பெரிய அறக்கட்டளை!

சின்னக்குத்தூசி பெயரால் பெரிய அறக்கட்டளை!

சின்னக்குத்தூசி பெயரால் பெரிய அறக்கட்டளை!

சின்னக்குத்தூசி பெயரால் பெரிய அறக்கட்டளை!

Published:Updated:
##~##

திராவிட இயக்கத்தின் குரலாக எழுதியும் வாழ்ந்தும் வந்த மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி தியாகராஜன் மறைந்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. இறுதி ஊர்வலத்தோடு அவர் நினைவுகளைப் புதைத்துவிடாமல், நண்பர்கள், சீடர்கள் ஒன்றிணைந்து, அவர் நினைவாக அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்கள். 

சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் கடந்த 15-ம் தேதியன்று, அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சின்னக்குத்தூசி பெயரால் பெரிய அறக்கட்டளை!

சின்னக்குத்தூசியின் நெருங்கிய நண்பரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவருமான பழ.நெடுமாறன் தலைமை வகித்து, மறைந்த நண்பரின் நினைவுகளை நெகிழ்ச்சியோடு பேச, அரங்கத்தில் கனத்த அமைதி.

''காமராஜரின் 'நவசக்தி’ பத்திரிகையில் தலையங்க ஆசிரியராக குத்தூசி இருந்தபோது, முக்கியமான விஷயங்களைப்பற்றி தலைவருடன் விவாதிப்பார். அப்படிப் பேசியதை மறுநாள் தலையங்கமாகப் பார்க்கும் காமராஜர், 'எப்படி தியாகராஜன், நான் சாதாரணமாகச் சொன்னதை மிகவும் சிறப்பான வார்த்தைகளில் வடித்துத் தருகிறீர்கள்?’ என்று பாராட்டியதை நேரில் பார்த்து இருக்கிறேன்...'' என்றார்.

''குத்தூசி தன் வாழ்நாள் முழுவதும் எழுதுகோலுக்கு விசுவாசமாக இருந்தார். ஆனால், எதற்காகவும் யாரிடமும் எதையும் விட்டுத்தந்தது இல்லை!'' என்று ரத்தினச் சுருக்கமாகப் பேசினார், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் துணைச் செயலாளரும் எழுத்தாளருமான சி.மகேந்திரன்.

சின்னக்குத்தூசி பெயரால் பெரிய அறக்கட்டளை!

''தலைக்கறி சாப்பிட்டிருக்கீங்களா சார் என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன். 'இல்லை’ என்றார். 'வாழ்க்கையின் பெரிய சந்தோஷத்தை இழந்துவிட்டீர்களே...’ என்று நான் கிண்டலாகச் சொன்னேன். 'எல்லா சந்தோஷங்களையும் இழந்ததுதானே என்னுடைய வாழ்க்கை’ என்று குத்தூசி சொன்னார்...'' என்று திருச்சி செல்வேந்திரன் பேசியபோது, பார்வையாளர்கள் பலருக்கு கண்ணீர்!

'சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை’யின் தலைமைப் பொறுப்பை நக்கீரன் கோபால் வகிக்கிறார். தீபம் அ.நா.பாலகிருஷ்ணன், எழுத்தாளர்

க.திருநாவுக்கரசு, 'தேசிய முரசு’ கோபண்ணா, மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் போன்றவர்களும் அறக்கட்டளையில் செயல்படுவார்கள். கடைசி வரை குத்தூசி வாழ்ந்த விடுதி முகவரியில்தான் அறக்கட்டளை யும் செயல்படும் என்பது, சென்டிமென்ட் டச்!

இந்த அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுடன்

சின்னக்குத்தூசி பெயரால் பெரிய அறக்கட்டளை!

50 ஆயிரமும், முற்போக்கான சிறந்த கட்டுரை படைப் போருக்கு  விருதுடன்

சின்னக்குத்தூசி பெயரால் பெரிய அறக்கட்டளை!

25 ஆயிரம் பரிசும் வழங்கப்பட உள்ளது.

'வளரும் தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கவே விரும்புகிறேன்’ என்று சொன்ன சின்னக்குத்தூசியின் செயல்பாடுகள் இன்னமும் தொடர்கிறது!

- இரா. தமிழ்க்கனல்

படங்கள்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism