Published:Updated:

வக்கீல் மகனைக் கொன்றது இன்ஸ்பெக்டரா?

கால் நகம் பிடுங்கப்பட்டு... இடது கை நசுக்கப்பட்டு...

வக்கீல் மகனைக் கொன்றது இன்ஸ்பெக்டரா?

கால் நகம் பிடுங்கப்பட்டு... இடது கை நசுக்கப்பட்டு...

Published:Updated:
##~##

'மனித உரிமை விஷயங்களுக் காக சளைக்காமல் வாதாடு பவர் என்று சென்னை உயர்நீதிமன்ற வட்டாரத்தில் அடையாளம் சொல்லப்படும் வழக்கறி ஞர்களில் ஒருவர் சங்கரசுப்பு.  அவரது  இளைய மகனான வழக்கறிஞர் சதீஷ் குமார் கடந்த 7-ம் தேதி காணாமல் போனார். 

முதலில் திருமங்கலம் ஸ்டேஷன், சென்னை கமிஷனர் ஆபீஸ் என அடுத் தடுத்து புகார் கொடுத்த சங்கரசுப்பு, இறுதியாக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்து தேடுதல் வேட் டையை சுறுசுறுப்பாக்கினார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி ஐ.சி.எஃப். ஏரிக்கரையில் சதீஷ்குமார் சடலமாகக் கிடக்க... கிடுகிடுக்கத் தொடங்கியது சென்னை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சதீஷ் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் பூசி மெழுக... 'இது காவல் துறையால் நிகழ்த்தப்​பட்ட திட்டமிட்ட படுகொலை. ரியாசுதீன், கண்ணன் ஆகிய இரண்டு இன்ஸ்பெக்டர்கள், கூலிப்

வக்கீல் மகனைக் கொன்றது இன்ஸ்பெக்டரா?

படையை ஏவி, சதீஷ்குமாரை கொலை செய்துவிட்டனர்!’ என்று கொந்தளித்தது வழக்கறிஞர்கள் வட்டாரம். சூட்டோடு சூடாக சங்கரசுப்பு தரப்பில் இருந்து, 'சாவில் சந்தேகம் இருக்கிறது. சி.பி.ஐ. விசாரணை வேண்டும்!’ என உயர் நீதிமன்​றத்தில் ஓர் அவசர மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிரேதப் பரிசோதனை செய்ய மூவர்கொண்ட மருத்துவர் குழுவை அமைத்து உத்தரவிட்டது. சங்கரசுப்பு, ஹேபி​யஸ் கார்பஸ் மனுவில் ஒரு காரணத்தை வெளிப்​படையாகச் சொன்னார். ''சில மாதங்களுக்கு முன்பு அருண்குமார் என்பவரை 'இல்லீகல் கஸ்டடி’யில் வைத்த வழக்கை ஏற்று நடத்தினேன். இந்த விவகாரத்தில் திருமுல்லைவாயல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரியாசுதீன் மற்றும் கண்ணன் ஆகியோ​ருக்கு

வக்கீல் மகனைக் கொன்றது இன்ஸ்பெக்டரா?

25 ஆயிரம் அபராதம் விதித்த உயர் நீதிமன்றம், 'இந்த விவகாரத்தை திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்யவும்...’ என உத்தரவு வழங்கியது.

வக்கீல் மகனைக் கொன்றது இன்ஸ்பெக்டரா?

இதைத் தொடர்ந்து, பல வழிகளிலும் என்னை அணுகி வழக்கில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அவர்கள் கூறினர். இன்ஸ்பெக்டர் ரியாசுதீனின் வீடு இருக்கும் ஐ.சி.எஃப் ஏரிப் பகுதியில்தான், என் மகனின் பைக் மற்றும் செல்போன் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவர் என் மகனைக் கொலை செய்து ஏரியில் வீசி இருக்கலாம் என சந்தேகப்படுகிறேன். எனவே, ஐ.சி.எஃப் வடக்கு ஏரியில் தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிட வேண்டும்...'' என்று கேட்டிருந்தார்.

'என் வாழ்க்கையை வீணடிக்​காதீங்க. எனக்கும் குடும்பம் இருக்கு... உங்களுக்கும் இருக்கு. அதை மட்டும் ஞாபகத்துல வெச்சுக்கங்க!’ என்று இன்ஸ்பெக்டர் ரியாசுதீன், ஏற்கெனவே வழக்கறிஞர் சங்கரசுப்புவை மிரட்டி உள்ளாராம்.

இந்த நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவில், 'இது திட்டமிட்ட படுகொலை’ என வெட்ட வெளிச்சமாக... காவல் துறைக்கு எதிராக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டது.

வக்கீல் மகனைக் கொன்றது இன்ஸ்பெக்டரா?

கடந்த 15-ம் தேதி காலை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. 8 மணிக்கே 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்​களும், சமூக ஆர்வலர்களும் வளாகத்தில் குவிந் தனர். 100-க்கும் மேற் பட்ட போலீஸாரும் ஆங்காங்கே அரண் அமைத்து பாது காப்புப் பணியில் ஈடுபட்டனர். கிட்டத் தட்ட மூன்று மணி நேரம் 'திக்... திக்...’ டென்ஷன்!

11.30 மணிக்கு பிரேதப் பரிசோதனை முடிய... பத்திரிகையாளர்களிடம் பேசினார்

வக்கீல் மகனைக் கொன்றது இன்ஸ்பெக்டரா?

டாக்டர் பிருத்விராஜ். ''சதீஷ்குமாரின் கால் நகங்கள் பிடுங்கப்பட்டு உள்ளன. அதே போல, இடது கை சுண்டு விரலில் காயம் உள்ளது. மேலும், ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அவர் நீரில் விழுந்த சிறிது நேரத்தில் செருப்பு மேலே வந்துவிடும். ஆனால், சதீஷ்குமார் காலில் செருப்பு அப்படியே சேர்ந்து இருக்கிறது. இறந்துபோய் நீண்ட நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் சடலத்தைத் தூக்கிப் போடப்பட்டதற்கான அடையாளங்கள் தெளிவாகத் தெரிவதால், இது திட்டமிட்ட படுகொலையே!'' என்று தெரிவித்தார். உடனே, திரண்டு இருந்த வழக்கறிஞர்கள் மத்தியில் காவல் துறைக்கு எதிரான கொதிப்பு இன்னும் அதிக​ரித்​தது.

சதீஷ்குமாரின் சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி யதும்,அந்த வாகனத்தின் முன்னே அணி​வகுத்த வழக் கறிஞர்கள் படை, 'வீர வணக்கம்... வீர வணக்கம்... சதீஷ்குமாருக்கு வீர வணக்கம். கைது செய்... கைது செய்... காவல் துறை ரவுடிகளைக் கைது செய்!’ என்று உரக்கக் குரல் எழுப்பினர். போலீஸாரோ தலையைக் கீழே போட்டுக்கொண்டு, கையைப் பிசைந்தபடி அமைதி காத்தனர். அதன் பிறகு, சதீஷ்குமாரின் சடலம் அண்ணா நகர் தங்கம் காலனியில் உள்ள சங்கரசுப்புவின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 'தமிழர் நீதிக் கட்சி’யின் சுப.இளவரசன், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இறுதிச் சடங்குக்காக சதீஷ்குமாரின் சடலம் வில்லிவாக்கம் சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழி நெடுக போலீஸுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் காதைப் பிளந்தன. சதீஷ்குமார் உடல் புதைக்கப்பட்ட அதே இடத்தில், அவசரக் கூட்டம் ஒன்றும் நடந்தது. பால் கனகராஜ், பிரபாகர் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பலரும், 'இது வழக்கறிஞர்கள் தொழிலுக்கு விடப்பட்ட சவால். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை நாம் ஓயக் கூடாது. உடனடியாக ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பு நடத்துவோம். நடவடிக்கை இல்லை என்றால், தொடர் போராட்டம் நடத்துவோம்!’ என்று பொங்கினர். இன்னும் சிலரோ, 'ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்று எல்லோரும் சொன்னார்கள். இந்த ஆட்சியில் போலீஸ்காரங்களே ரவுடிகள் ஆகிட்டாங்களே... அரசு என்ன நடவடிக்கை எடுக்குதுன்னு பார்ப்போம்?’ என்றும் சாடினார்கள்.

வக்கீல் மகனைக் கொன்றது இன்ஸ்பெக்டரா?

புகாருக்கு உள்ளாகி இருக்கும் இன்ஸ்பெக்டர்களில் ஒருவரான இன்ஸ்​பெக்டர் ரியாசுதீனிடம் பேசினோம். ''வழக்கறிஞர் சங்கரசுப்புக்கு எத்தனை பையன்கள் என்றே எனக்குத் தெரியாது. எனக்கும் சதீஷ்குமார் மரணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ராஜமங்கலத்தைச் சேர்ந்த அருண்குமார், வழிப்பறிக் கும்பலின் தலைவன். ஆவடி போலீஸ்தான் அவனைக் கைது செய்தது. அந்த வட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில், மொத்தம் மூன்று இன்ஸ்பெக்டர்களுக்கு அப்போது சம்மன் வந்தது. நாங்களும் ஆஜரானோம்.

சங்கரசுப்பு எவ்வளவு பெரிய வழக்கறிஞர்... அவருக்கு எவ்வளவோ இயக்கங்கள் சப்போர்ட் இருக்கு. அவரைப்போய் நான் மிரட்டுவேனா? அப்படி நான் மிரட்டி இருந்தால், உடனே என் மேல் அடுக்கடுக்காக வழக்குப் போட்டு ஒரு வழி பண்ணி இருப்பார். இந்த விவகாரத்தில், ஏன் என் பேரை இழுத்து விடுறாங்கன்னு எனக்கே தெரியலை. காவல் துறைக்கு எதிராக நடத்தப்படுற சதியாதான் இந்தக் கொலை விவகாரத்தைப் பார்க்கிறேன். உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படணும் என்பதே என் விருப்பம்...'' என்றார்!

காவல் துறைக்கு எதிரான இந்த வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, காக்கிச் சட்டையின் கௌரவமும், கறுப்பு கோட்டின் பாதுகாப்பும் காற்றில் பறக்காமல் தடுக்க முடியும்!

வக்கீல் மகனைக் கொன்றது இன்ஸ்பெக்டரா?

- தி.கோபிவிஜய்

படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism