Published:Updated:

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பெண்கள்..

பர்ஸைப் பதம் பார்க்கும் பலே எஸ்.எம்.எஸ்-கள்!

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பெண்கள்..

பர்ஸைப் பதம் பார்க்கும் பலே எஸ்.எம்.எஸ்-கள்!

Published:Updated:
##~##

'அழகுப் பெண்களுடன் கொஞ்சி மகிழ ஆசையா?’... 'இளமையான இல்லத்தரசிகளுடன் இனிய பொழுதைக் கழிக்க விருப்பம் என்றால், எங்களை அழைக்கவும்...’ - இப்படிக் கிளுகிளுப்பூட்டும் எஸ்.எம்.எஸ். எந்த நேரத்திலும் உங்கள் மொபைலுக்கு வரலாம். சபலப்பட்டு அந்த எண்களுக்குப் பேசினால், குறைந்தபட்சம்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பெண்கள்..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

50 ஆயிரமாவது காலியாகிவிடும், ஜாக்கிரதை. இதில் சிக்கிப் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லவும் முடியாமல் மெள்ளவும் முடியாமல் பலர் தவிக்க,  பெயர், விவரம் வேண்டாம் என்ற நிபந்தனைகளுடன் நம்மிடம் ஒருவர் பேசினார்! 

சென்னை டைடல் பார்க்கில் லகரங்களில் சம்பாதிக்கும் இளைஞர் அவர். சொந்த ஊர் கரூர். ''போன வாரம் என் மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், 'அழகிய ஹை கிளாஸ் பெண்களுடன் என்ஜாய் செய்யலாம். நம்பிக்கையான இடம். தொடர்புக்கு, நாடாஷா - 095607 18428’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. முதலில் நான் அதை அலட்சியம் செய்துவிட்டேன். ஆனால், தொடர்ந்து அந்த

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பெண்கள்..

எஸ்.எம்.எஸ். வரவே அந்த எண்ணுக்குப் பேசினேன். எதிர்முனையில் சோனாலி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிய ஒரு பெண், 'எங்கள் நண்பர்கள் அமைப்பு நாடு முழுவதும் கிளைகளைக்கொண்டது. இதில் உறுப்பினராகச் சேருபவர்களுக்கு மட்டுமே இந்த சேவை(!) கிடைக்கும். எங்களிடம் அனைத்து முக்கியமான நகரங்களிலும் ஏராளமான கல்லூரி மாணவிகள், நர்ஸ்கள், டாக்டர்கள், வசதியான இல்லத்தரசிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்​கள். அவர்களும் சரியான துணை கிடைக்காமல் ஏக்கத்தில் இருப்பவர்கள்தான். எனவே, நீங்கள் உறுப்பினரானால், அவர்களுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கலாம்’ என்றார்.

நானும் உறுப்பினராக சம்மதித்தேன். அதற்கு அவர், 'முதலில்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பெண்கள்..

20,000 டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கான வங்கி கணக்கு எண் எஸ்.எம்.எஸ். செய்யப்படும்’ என்று சொன்னார். அடுத்து வந்த எஸ்.எம்.எஸ்-ல் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் சேமிப்பு கணக்கு எண் 037801509604 - பெயர் மிஸ்.ரிங்கு’ என்று வந்தது. மீண்டும் நான் சோனாலியிடம் தொடர்புகொண்டு, 'நான் உங்களை எப்படி நம்புவது?’ என்று கேட்டேன். அவர், 'இந்தத் தொழில் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே செயல்படுகிறது. உங்களுடன் உல்லாசமாக இருக்கப்போகும் பெண்ணை பேசச் சொல்கிறேன். நம்பிக்கை ஏற்பட்டால் மட்டும் பணம் போடுங்கள்’ என்றார்.

தொடர்ந்து வந்த அழைப்பில், அனு வர்மா என்பவர் பேசினார். சென்னையில் டாக்டராக இருப்பதாக

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பெண்கள்..

அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், 'வெளியே எங்கேயும் தங்க வேண்டாம். எனது பங்களாவிலேயே பொழுதைக் கழிக்கலாம்’ என்றார். எனக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டவுடன், அந்த வங்கி எண்ணில்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பெண்கள்..

20,000 டெபாசிட் செய்துவிட்டு அனுவர்மாவிடம் பேசினேன். அவர், 'நீங்கள் 'பி’ கிளாஸுக்குப் பணம் செலுத்தி இருக்கிறீர்கள். நான், 'ஏ’ கிளாஸ். என்னுடன் பழக

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பெண்கள்..

32,000 கட்டவேண்டும். நான் உங்களுக்காக எனது அடையாறு வீட்டில் தயாராக இருக்கிறேன். பணம் வங்கிக் கணக்கில் சேர்ந்தவுடன் முகவரி தருகிறேன்’ என்றார்.

நானும் உடனே எனது வங்கி கணக்கில் இருந்து

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பெண்கள்..

12,000 இ டிரான்ஸ்ஃபர் செய்தேன். அடுத்து அந்த எண்ணைத் தொடர்புகொண்டபோது அவர் மொபைலை எடுக்கவே இல்லை. மறுநாளும் மொபைலை எடுக்கவில்லை. மூன்றாம் நாள் நான் தொடர்புகொண்டபோது, 'என் மாமனார் இறந்துவிட்டதால் துக்க நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது’ என்றார். அதன் பின்பு கூப்பிட்டபோதும் தட்டிக் கழித்தவர், பின்பு மொபைலை நிரந்தரமாக அணைத்துவிட்டார்...'' என்றார்!

இவர் மட்டும் அல்ல... சென்னை, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் தினமும் நூற்றுக்​கணக்​கான சபலப் பேர்வழிகள் இந்த கும்பலிடம் ஏமாறுகிறார்கள். கோவையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான ராமசுப்ரமணியன் என்பவர் இந்த மோசடி குறித்து, தமிழக முதல்வருக்கும் காவல் துறைக்கும் புகார் அனுப்பி இருக்கிறார். அவரிடம் பேசினோம். ''சில மாதங்களுக்கு முன்பு எனது நண்பர்கள் சிலருக்கு இதுபோன்ற எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில்கள் வந்தன. அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க எண்ணி, அவர்களின் 97692 10461, 90041 96271 ஆகிய எண்களில் தொடர்புகொண்டோம்.

மிகவும் செக்ஸியாகப் பேசியவர்கள், 'மிகவும் நம்பகமான இடம்; போலீஸ் தொல்லை கிடையாது. இல்லத்தரசிகளின் வீட்டுக்கே செல்லலாம். கல்லூரிப் பெண்கள் என்றாலும்கூட, எங்கள்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பெண்கள்..

உறுப்பினர்களின் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறோம். அங்கு நீங்கள் ஜாலியாக இருக்கலாம்’ என்று பேசினார்கள். அவர்கள் பேசியதைப் பதிவு செய்துகொண்டோம். தொடர்ந்து அந்த கும்பல் பற்றிய விவரங்களை கடந்த டிசம்பர் மாதமே அப்போதைய கோவை ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், கமிஷனர் சைலேந்திரபாபு ஆகியோருக்கு அனுப்பினேன். மேலும், இந்த மோசடி கும்பல்கள், தமிழ் நாளிதழ் ஒன்றிலும், 'மை இண்டியன் கேர்ள். மனதை கவரும் அழகிகளின் காதல் நிறைந்த பேச்சுகள்’ என்று நிறைய மொபைல் எண்களைக் கொடுத்து விளம்பரம் செய்து இருந்தார்கள். அதையும் போலீஸிடம் குறிப்பிட்டேன். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

அதனால், அம்மா ஆட்சிக்கு வந்த பின்பு நடவடிக்கை எடுப்பார்கள் என்று கடந்த வாரம் முதல்வரின் தனிப் பிரிவுக்கு இதைப் புகாராக அனுப்பி இருக்கிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் என்னிடம் பேசி, அந்தக் கும்பல் அனுப்பிய மெயில்கள் எந்த ஐ.பி. எண்ணில் இருந்து வந்தது என்பதைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டனர். அந்த எண்ணையும் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளேன்...'' என்றார்!

இது குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் சுதாகரிடம் பேசினோம். ''இதுபோன்ற சம்பவங்கள் குறித்துக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், புகாராக எதுவும் வரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐ.டி-களுடன் வந்து புகார் கொடுத்தால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அந்த மோசடி கும்பல் இந்தியாவுக்குள் இருந்து செயல்படுவதாகத்தான் தெரிகிறது. அதனால், கண்டிப்பாகப் பிடித்துவிடலாம்...'' என்றார்.

இன்னும் பலர் ஏமாறும் முன்னர்... அதிரடிகள் அரங்கேறட்டும்!

- டி.எல்.சஞ்சீவிகுமார், படம்: வி.ராஜேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism