Published:Updated:

கங்கையைக் காக்க உயிர்விட்ட சாது!

நிகமானந்தாவுக்கு விஷ ஊசியா?

கங்கையைக் காக்க உயிர்விட்ட சாது!

நிகமானந்தாவுக்கு விஷ ஊசியா?

Published:Updated:
##~##

ற்போதைய உண்ணாவிரதப் போராட்ட சீஸனில்... ஹரித்துவாரில் ஒரு சாது, மீடியா வெளிச்சமே படாமல் பரிதாப மரணம் அடைந்து இருப்பது பெரும் சோகம். கங்கையைக் காக்க

கங்கையைக் காக்க உயிர்விட்ட சாது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய இவரது மரணத்தில் வேறு பல சர்ச்சைகளும் முளைத்துள்ளன! 

இந்துக்களின் புனித நகரமான ஹரித்துவாரை ஒட்டி ஓடும் கங்கையின் கரையில் நடக்கும் கும்ப மேளா மிகவும் பிரசித்தி. இங்கு அரசு அனுமதி பெற்றுக் கற்களை உடைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதை 'ஹிமாலயன் ஸ்டோன் கிரஷர்’ என்ற நிறுவனம் செய்து வருகி றது. சட்டவிரோதமாக சில கல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன.

''இந்தக் கல் குவாரிகளால் கங்கை நதிக்கு ஆபத்து ஏற்படுகிறது!'' என்று ஹரித்துவாரின் சாதுக்கள் அவ்வப்போது போராட்டக் குரல் எழுப்பி வந்தனர். நிரந்தரத் தீர்வு எதுவும் காணப்படாத நிலையில், ஜக்ஜீத்பூர் கிராமத்தில் 'மட்ரி சதன்’ எனும் ஆசிரம சாதுவான சுவாமி நிகமானந்தா, கடந்த பிப்ரவரி 19-ல் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.

கங்கையைக் காக்க உயிர்விட்ட சாது!

'கங்கைக் கரையின் கும்பமேளா பகுதியை மேலும் விரிவு படுத்த வேண்டும். இங்குள்ள கல் குவாரியை அகற்ற வேண்டும்...’ என்பன போன்ற முக்கியக் கோரிக்கைகளுடன் தனது ஆசிரமத்திலேயே நிகமானந்தா உண்ணாவிரதம் இருக்க... உத்தரகாண்ட்டை ஆளும் பி.ஜே.பி. அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. மீடியாக்களிலும் பெரி தாகச் செய்திகள் வெளியாகவில்லை. காரணம், இதே கோரிக்கைக்காக 1998-ல் 73 நாட்களும் 2010-ல் 68 நாட்களும் உண்ணாவிரதம் இருந்தவர்தான் இவர். ஆனால், இந்த முறை உண்ணாவிரதம் அவரது உயிரையே காவு வாங்கிவிட்டது!

உண்ணாவிரதத்தின் 68-வது நாள், அதாவது கடந்த ஏப்ரல் 27-ம் தேதி நிகமானந்தாவுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. உடனே ஹரித்துவார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இருந்து  வேறு ஒரு மருத்துவ மனைக்கு மாற்றித் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும், மே 2-ம் தேதி கோமா நிலைக்குப் போனார். நிலைமை கவலைக்கிடமாகி, கடந்த 13-ம் தேதி மதியம் அவர் உயிர் பிரிந்தது.

கங்கையைக் காக்க உயிர்விட்ட சாது!

நிகமானந்தாவின் மரணம் மேலும் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ''இந்த மரணத்துக்குக் கல் குவாரி மாஃபியாதான் காரணம். அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதும் ஊசியில் 'ஆர்க்னோ

கங்கையைக் காக்க உயிர்விட்ட சாது!

பாஸ்பேட்’ என்ற மருந்து செலுத்தப்பட்டு உள்ளதை அவரது ரத்த பரிசோதனை அறிக்கை காட்டுகிறது. மே-30 அன்று ஊசி போட்ட நர்ஸை அதன் பிறகு பார்க்க முடியவில்லை. அதன் பிறகுதான் அவர் கோமாவுக்குப் போனார். இந்த சந்தேகங்களைக் குறிப்பிட்டு, மருத்துவமனையின் தலைமை அதிகாரி பி.கே.பட்நாகர் மற்றும் ஹிமாலயன் ஸ்டோன் நிறுவன உரிமையாளர் கியானேஷ் குமார் ஆகியோர் மீது மே 11-ல் போலீஸில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நிகமானந்தாவின் உடலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் பரிசோதனை நடத்தி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!'' என்கிறார், நிகமானந்தாவின் மட்ரி சதன் ஆசிரமத்தின் புதிய தலைவர் சுவாமி சிவானந்தா.

இந்தப் புகார் பற்றி ஹரித்துவார் மாவட்டக் கலெக்டரான  மீனாட்சிசுந்தரத்திடம் கேட்டோம். ''நிகமானந்தாவின் முக்கிய உடல் உறுப்புகள் பரிசோ தனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அந்த அறிக்கை வந்த பின்தான் இறப்புக்கான காரணம் தெரியும். இப்போது மருத்துவமனை தலைமை அதிகாரி மீது புகார் தந்து உள்ளதை வைத்து மட்டும் யாரையும் கைது செய்ய முடியாது. தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது!'' என்றார்.

நிகமானந்தா இறந்த மருத்துவமனையில் தான், சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய பாபா ராம்தேவும் அனுமதிக் கப்பட்டார். அவரைப் பார்த்துச் சென்ற பி.ஜே.பி. தலைகள், அடுத்த அறையில் இருந்த நிகமானந்தாவைக் கண்டு கொள்ளவில்லை.

ஹரித்துவார் சாதுக்கள் சிலர், ''குவாரிகளின் உரிமையாளர்கள் ஆளும் அரசையே ஆட்டிவைக்கும் சக்தி களாக உள்ளனர். உண்ணாவிரதம் தொடங்கிய சில நாட்களிலேயே, ஹிமால யன் நிறுவனத்தின் குவாரியை நிறுத்த அரசு உத்தரவு இட்டது. ஆனால், வேண்டும் என்றே குவாரிகளுக்கு சாதகமான சில ஓட்டைகளுடன் அந்த உத்தரவைப் போடவே, ஹிமாலயன் நிறுவனத்தினர் உயர் நீதிமன்றத்தில் தடை பெற்றுவிட்டனர். எனவே, உயர் நீதிமன்றத்தை எதிர்த்துத் தொடரும் உண்ணாவிரதத்தால் பயன் எதுவும் இல்லை என்பதை நிகமானந்தாவுக்கு எடுத்துக் கூற ஆசிரமத்தினர் தவறிவிட்டனர். இப்போது, 'உத்தரகண்ட் அரசு போட்ட உத்தரவு செல்லும்’ என உயர் நீதிமன்ற

பெஞ்ச் மே 27-ல் தீர்ப்பு தந்துவிட்டது. ஆனால், அதைக் கேட்கத்தான் அவர் உயிரோடு இல்லை...'' என்றனர் சோகமாக.  

இந்த மரணத்தைக் கண்டுகொள்ளாத பி.ஜே.பி. அரசை எதிர்த்துக் கடுமையாக விமர்சித்து, அதை அரசியலாக்கி வருகிறது காங்கிரஸ்!

- ஆர்.ஷஃபிமுன்னா

படங்கள்: சிவாங் அகர்வால்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism