Published:Updated:

அழகிரிக்கும் தா.கிருஷ்ணனுக்கும்... ஸ்டாலினுக்கும் அண்ணாநகர் ரமேஷுக்கும்...

இடி இறக்கும் இளங்கோவன்

அழகிரிக்கும் தா.கிருஷ்ணனுக்கும்... ஸ்டாலினுக்கும் அண்ணாநகர் ரமேஷுக்கும்...

இடி இறக்கும் இளங்கோவன்

Published:Updated:
##~##

விமர்சனம் செய்வது என முடிவு செய்துவிட்டால், அது கருணா​நிதியோ... ஜெயலலிதா​வோ... பிரித்து மேய்ந்துவிடுவார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இப்போது கருணா​நிதியையும் அவர் குடும்பத்​தாரையும், உண்டு... இல்லை என ஆக்கிக்கொண்டு இருக்கிறார்! 

''ஊழலுக்கு எதிராக உண்ணாவிரம் இருக்கும்பாபா ராம்தேவை கடுமையாக விமர்சனம் செய்கி றீர்களே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒரு விஷயத்தை நல்லாப் புரிஞ்சுக்கோங்க. ஊழல், திருட்டுத்தனம், சமூக விரோதச் செயல்கள் போன்றவற்றைக் குறைக்கலாமே தவிர, முழுமையாக ஒழிக்க முடியாது. மனித குலம் இருக்கும் வரை இது எல்லாமே நிச்சயமாக இருக்கும். எந்த விஷயத்தைப்பற்றி நாம் பேசுறோமோ... அதுல முதலில் நாம யோக்கியனா இருக்கணும். கறுப்புப் பணத்தைப்பத்தி வாய் கிழியப் பேசும் பாபா ராம்தேவ், தன்னை சந்திக்க வரும் பக்தர்களிடம் ஒரு லட்சம், இரண்டு லட்சம்னு வாங்கிட்டு இருக்காரே... அதுக்கு

அழகிரிக்கும் தா.கிருஷ்ணனுக்கும்... ஸ்டாலினுக்கும் அண்ணாநகர் ரமேஷுக்கும்...

எல்லாம் முறையான கணக்கு வெச்சிருக்காரா? 'படிக்கிறது ராமாயணம். இடிக்கிறது பெருமாள் கோயில்’னு எங்க ஊர்ப் பக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க. பாபா ராம்தேவ் பண்றதும் அப்படித்தான். உண்ணாவிரதம் இருப்பதால் உடலுக்கு நல்லது. மத்தபடி, இவங்க நினைக்கிறது எதுவும் நடக்காது.''

''கருணாநிதி சொன்ன 'கூடா நட்பு கேடாய் முடியும்’  என்பது காங்கிரஸைப் பார்த்துதானா?''

''யாரை நினைச்சு சொன்னாரோ, அதை நேரடியா சொல்ல வேண்டியதுதானே?  கருணாநிதிக்கு எதுக்கு இந்தக் கோழைத்தனம்? காங்கிரஸைத் தாக்கணும்னு நினைச்சா, நேரடியாத் தாக்குங்க. மோதணும்னு நினைச்சீங்கன்னா, நேரடியா மோதிப் பாருங்க. உயர் நிலை செயல் திட்டக் குழு, பொதுக்குழுன்னுபூச்சாண்டி காட்டுற வேலை வேண்டாம். காங்கிர​ஸைத் தாக்குவதற்கு ராமதாஸை ஒரு பக்கம் ஏவிவிடுறீங்க. இன்னொரு பக்கம், திருமாவளவனை ஏவிவிடுறீங்க. 'கூட்டணியில் இருந்துகொண்டே மிரட்டி ஸீட் வாங்கிய கட்சிதான் தோல்விக்குக் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன்...’ என உடன்பிறப்புக்குக் கடிதம் எழுதுறீங்க. இதுக்கு என்ன அர்த்தம்?

'கூடா நட்பு’ என்பது அழகிரிக்கும், கொலை செய்யப்​பட்ட தா.கிருஷ்ணனுக்கும் இருந்ததா? ஸ்டாலினுக்கும், அண்ணாநகர் ரமேஷ§க்கும் இருந்ததா? ராசாவுக்கும், கனிமொழிக்கும் இருந்ததா? ராசாவுக்கும், செத்துப்போன சாதிக்பாட்சாவுக்கும் இருந்ததா? இதைத்தான் கூடா நட்பு என்று கருணாநிதி சொல்கிறாரா? எதைச் செஞ்சாலும், அதை தைரியமா செய்யணும். தைரியமாப் பேசணும். கருணாநிதிக்கு எப்பவுமே தைரியம் கிடையாது!''

''தங்கபாலு ராஜினாமாவைக் காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லையே?''

''தங்கபாலுவின் சேவை தமிழ்நாட்டுக்கு இன்னும் தேவை என காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது போலிருக்கிறது. சீக்கிரமே அவரது ராஜினாமாவை ஏற்கும் என எல்லோருமே நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்து இருக்கிறோம்.''

''அ.தி.மு.க. ஆட்சி பற்றி..?''

''அ.தி.மு.க. ஆட்சியின் ஆரம்பம் மிகவும் நன்றாக இருக்கிறது. பொறுப்புக்கு வந்தஒரு மாதத்தில் சட்டம் - ஒழுங்கை மிகச் சிறப்பாக வைத்திருக்கிறார் ஜெயலலிதா. தமிழகத்தில் குற்றங்கள் வெகுவாகக் குறைந்து இருக்கின்றன. கொலை, கொள்ளைச் செயல்களில் ஈடுபடுபவர்​களும், நிலங்களை அபகரிப்பவர்களும் அடங்கி ஒடுங்கி இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகள் முடியும் வரை இதே கட்டுக்கோப்புடன் ஜெயலலிதா ஆட்சி நடத்த வேண்டும். கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரிடம் சில குறைகள் இருந்தன. இப்போது அந்தக் குறைகளை எல்லாம் களைந்துவிட்டுச் சிறப்பான முதல்வராகச் செயல்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நான் ஜெயலலிதாவுக்கு ஆதரவானவன் என்றோ, எதிர்ப்​பானவன் என்றோ நினைக்க வேண்டாம். யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன். யார் தப்பு செய்தாலும் தட்டிக்கேட்பேன். அது என் பிறவிக் குணம்!''

''நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்பெக்ட்ரம் விவ​காரம் காங்கிரஸைப் பாதிக்குமா?''

''ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் காங்கிரஸுக்​கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அப்படி காங்கிரஸ் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தால்... அது அஸ்ஸாமிலும், மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் எதிரொலித்து இருக்குமே!

இது தி.மு.க. செய்த ஊழல்; தி.மு.க-வினால் மட்டுமே செய்ய முடிந்த ஊழல். அது மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது. நடந்து முடிந்த தேர்தலில் ஓட்டுக்கு

அழகிரிக்கும் தா.கிருஷ்ணனுக்கும்... ஸ்டாலினுக்கும் அண்ணாநகர் ரமேஷுக்கும்...

1,000 முதல்

அழகிரிக்கும் தா.கிருஷ்ணனுக்கும்... ஸ்டாலினுக்கும் அண்ணாநகர் ரமேஷுக்கும்...

2,000 வரை தி.மு.க. வாரி இறைத்தபோதே, இது ஸ்பெக்ட்ரம் பணம் என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள். அதனால்தான் பணத்தை வாங்கினாலும் தி.மு.க-வுக்கு ஓட்டு போடவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வோடு கூட்டணி வேண்டாம் என நானும் ராகுல் காந்தியும் சொல்லிப் பார்த்தோம். தி.மு.க-வுடன் கூட்டணிவைத்த காரணத்தால்தான், தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!''

''தி.மு.க-வுடன் கூட்டணி தொடருமா?''

''தொடராது, தொடரவும் கூடாது என்பது​தான் என் விருப்பமும், தமிழகத்தில் உள்ள உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமும். நல்லவர்கள் நினைப்பது நிச்சயமாக நடக்கும். ஆனால் கொஞ்சம் தாமதமாக நடக்கும். அவ்வளவுதான்!''

- கே.ராஜாதிருவேங்கடம்

படம்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism