Published:Updated:

''கரஸ்பான்டென்ட் எல்லாரும் கல்வியாளர்களா?

தொடரும் சமச்சீர்க் குழப்பங்கள்!

''கரஸ்பான்டென்ட் எல்லாரும் கல்வியாளர்களா?

தொடரும் சமச்சீர்க் குழப்பங்கள்!

Published:Updated:
##~##

மச்சீர் கல்வி பற்றி ஆராய்ந்து முத்துக்குமரன் குழு தயார் செய்த அறிக்கையை, முந்தைய அரசு முழுமையாகச் செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக சட்டம் ஒன்றும் இயற்றப்பட்டது. இப்போது புதிய அரசு அந்தச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதை எதிர்த்து சில கல்வியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, அதற்கு இடைக்காலத் தடைவிதித்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. கடந்த 15-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கி, அதில் பாடத் திட்டத்தின் தரம், மற்றும் பாட நூலின் தரம் ஆகியவைபற்றி ஆராய குழு ஒன்றை நியமிக்கச் சொல்லி அரசுக்கு ஆணையிட்டது. அரசும் ஒரு குழுவை நியமித்தது. அதில் கல்வியாளர்கள் என்று இரண்டு தனியார் பள்ளிக் கல்வி நிறுவன முதலாளிகளான, டி.ஏ.வி. பள்ளியின் நிறுவனர் மற்றும் செயலர் ஜெயதேவ், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியின் முதல்வர் ராஜலட்சுமி

''கரஸ்பான்டென்ட் எல்லாரும் கல்வியாளர்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒய்.ஜி.பார்த்தசாரதி ஆகியோரை நியமித்து இருப்பதுதான் இப்போது பிரச்னை. 'கல்வியாளர்கள் என்ற போர்வையில் பள்ளி நிர்வாகிகளை நியமித்துள்ளார்கள்!’ என்ற வருத்தம் பலருக்கும் இருக்கிறது! 

இதுபற்றி முதுபெரும் கல்வியாளரான எஸ்.எஸ்.ராஜகோபாலன்,

''மற்றவர்களை வீழ்த்துவதற்காகத்தான், இன்று மதிப் பெண்கள் பின்னால் மாணவர்களை ஓடச் செய்கின்றன தனியார் பள்ளிகள். மூட்டை மூட்டையாகப் புத்தகங்களைக் கொடுத்துவிட்டால் போதும்... அதுதான் சிறந்த கல்வி என்று நினைக்கிறார்கள். உண்மையில், இது ஒரு மாணவனின் இயல்பான அறிவையும் மழுங்கடித்து விடும். அதிகமான கட்டணம் வசூலித்தால், அது நல்ல பள்ளி என்று மக்கள் நம்பி வருவார்கள் என்கிற எண்ணம்தான், இன்று பலரையும் கல்வி நிறுவனங்கள் தொடங்கவைக்கிறது.

1964-ல் முழுமையான இலவசக் கல்வி ஏற்படுத்தப் பட்டது. 1978-ம் ஆண்டு வரை அது தொடர்ந்தது.

''கரஸ்பான்டென்ட் எல்லாரும் கல்வியாளர்களா?

அன்றைக்கு 98 சதவிகிதம் பேர் தாய்மொழியில்தான் கற்றார்கள். 1978-ம் ஆண்டில்தான் கட்டணக் கல்வி வந்தது. இன்று வரையிலும், பணம்வைத்து இருப்பவர் கள் மட்டுமே படிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில்தான் இரண்டு தனியார் பள்ளி முதலாளிகளைக் கல்வியாளர்களாக நியமித்திருக்கிறது அரசு.

சமச்சீர் கல்வி தொடர்பான குழு ஒன்றில் நானும் இருந்து இருக்கிறேன். அப்போது மெட்ரிக் பள்ளி முதல்வர் களும் உறுப்பினர்களாக இருந்தனர். நான் சொன்ன எந்த ஒரு கருத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 'சரி, நீங்களாவது ஒரு பாடத் திட்டத்தை முன் வையுங்கள், நாம் அனைவரும் அதைப் பின்பற்றலாம்’ என்று சொன்னேன். அதையும் கேட்காமல், வேறுபட்ட பாடத் திட்டம்தான் வேண்டும் என்று பிடிவாத மாக இருந்தார்கள். வேறுபட்ட பாடத் திட்டம் இருந்தால்தானே, அந்தத் தனியார் பள்ளிகளின் வியாபாரம் பாதிக்காமல் இருக்கும்?'' என்று விரக்தியோடு சொல்கிறார் ராஜகோபால்.

என்ன சொல்கிறார் முத்துக்குமரன்?

''பாடத் திட்டத்தின் தரம் மற்றும் பாட நூல்களின் தரம் ஆகியவற்றை ஆராய் வதற்குத்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி முக்கியமான சிலவற்றை சொல்கிறேன்.

• தரமான பாடத் திட்டத்தில் உலக அளவில் பொது அறிவுடன், நமது நாடு, மாநிலம், பகுதி விவரங்களையும், அறிவையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

• பள்ளியில் சேரும்போது கொச்சையாகப் பேசும் குழந்தைகளைப் படிப்படியாக தவறின்றித் தாய்மொழி யில் பேசக் கற்றுத் தருவதும், ஐந்தாவது ஆண்டுப் படிப்பை முடிக்கும்போது, தாய்மொழியில் நல்ல முறையில் பேச, படிக்க எழுதக் கற்றுத்தருவதும் ஆசிரியரின் கடமை.

• கலைகள் வழியாக மற்ற பாடங்களைக் கற்க வும், கற்பிக்கவும் முடியும். நமது பாரம்பரியக் கைத் தொழில்கள், உள்ளூரிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தும் உள்ளூர்த் தொழில்நுட்பம், இவற்றின் மூலம் மாணவரின் படைப் பாற்றலை வளர்க்க முடியும். நுண்கலைகளான ஓவியம், இசை, வாய்ப்பாட்டு, நடனம், கிராமிய நடனம் போன்றவற்றையும், மர வேலை, நெசவு வேலை, தையல் போன்ற கைத்தொழில்களையும் கற்பிக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சிப் பாடத் திட்டத்தில் கலைகள் கற்பித்தலும், கலைகள் மூலம் கற்பித்தலும் ஒரு பகுதியாகச் சேர்க்க வேண்டும்.

•  சமச்சீர்க் கல்வி முறை வெற்றி பெற, பாட நூல்களின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கு, பாட நூல்கள் மூலப் பகுதியுடன் ஒரு சில வினா விடைகளும், பயிற்சி வினாக்களும் மட்டுமே அடங்கியதாக இருப்பது நலம். பாட நூல்களை எழுத ஆசிரியர்களை நியமிக்காமல், தரமான கையெழுத்துப் பிரதிகளை வரவேற்று, அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து வெளியிட வேண்டும். பாட நூல் நிறுவனம் அல்லது பள்ளிக் கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட, ஒன்றுக்கு மேற்பட்ட பாட நூல்கள் ஒவ்வொரு பாடத் திட்டத்துக்கும் இருப்பதும், எந்த நூலைப் பயன்படுத்துவது என்பதைப் பள்ளிகளே தீர்மானிக்கவும் ஊக்குவிக்க வேண்டும். அல்லது மாவட்ட அளவில் தீர்மானிப்பதும் பொருத்தமாக அமையும். 10-ம் வகுப்பைப் பொறுத்த வரை, பொதுத் தேர்வுக்கு மொழிப் பாடங்களுக்கு ஒரே ஒரு மூலப் பகுதி மட்டும் அடங்கிய பாட நூலை, வெளியிட வேண்டும். மற்ற பாடங்களுக்குப் பாட நூல் நிறுவனம் அல்லது பள்ளிக் கல்வி வாரியம் ஒப்புதல் அளித்த பாட நூல்கள் பயன்படுத்த வேண்டும்.

இவை எல்லாம் நான் சமச்சீர் கல்வி பற்றிய குழுவில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட ஆய்வு முடிவுகள். இவற்றின்படி, இந்தப் புதிய குழு ஆராயுமா என்பதுதான் இப்போது கேள்வி!

1964-ல் கோத்தாரி கமிஷன் கல்வி சார்ந்த தீர்மானங் களைக் கொண்டுவந்தது. அதை 1978-ம் ஆண்டில்தான் செயல்படுத்தினார்கள். அது போலத்தான் இதுவும். மற்றபடி, இந்தக் குழு எந்த வகையான முடிவைக் கொண்டுவரப்போகிறது என்பதை அறிய, உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்!'' என்றார் முத்துக் குமரன்.

மாணவர்களின் நிம்மதிக்கு அரசாங்கம்தான் விரைவில் வழிகாட்ட வேண்டும்!

- ந.வினோத் குமார்

படம்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism