Published:Updated:

தாவூத் பெயரைச் சொல்லி மிரட்டல்; கடனைத் திருப்பிக் கேட்ட பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபர்

போலீஸ்

கடனைத் திருப்பிக் கேட்ட பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த தொழிலதிபர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

தாவூத் பெயரைச் சொல்லி மிரட்டல்; கடனைத் திருப்பிக் கேட்ட பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபர்

கடனைத் திருப்பிக் கேட்ட பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த தொழிலதிபர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
போலீஸ்

மும்பை அந்தேரியைச் சேர்ந்தவர் சுக்ராம் (75). தொழிலதிபரான இவர் 35 வயது பெண் ஒருவரிடம் ரூ.2 கோடி கடன் வாங்கியிருக்கிறார். இந்தக் கடனை அந்தப் பெண் திருப்பிக் கேட்டபோது, திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துவந்திருக்கிறார். இதனால் அந்தப் பெண் பணத்தைக் கொடுக்கவில்லையெனில் போலீஸில் புகார் செய்வேன் என்று அந்தத் தொழிலதிபரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து இது குறித்துப் பேச வருமாறு அந்தப் பெண்ணை அந்தேரி ஜூகுவில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு தொழிலதிபர் சுக்ராம் அழைத்திருக்கிறார். அங்கு அந்தப் பெண்ணை மிரட்டி தொழிலதிபர் சுக்ராம் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும், `இது குறித்து வெளியில் சொன்னால் தாவூத் இப்ராஹிமிடம் சொல்லி, உன்னைக் கொலைசெய்துவிடுவேன்!' என்றும் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் போலீஸில் புகார் செய்யாமல் இருந்தார். இந்த நிலையில் அந்தப் பெண்னுக்கு தாவூத் இப்ராஹிம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் போன் செய்து, தொழிலதிபர் மீது புகார் செய்யக் கூடாது என்றும், அப்படிப் புகார் செய்தால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தான். இதையடுத்து மேலும் தாமதித்தால் சரியாக இருக்காது என்று கருதிய அந்தப் பெண், இது குறித்து அம்போலி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். இந்த வழக்கு பின்னர் எம்.ஐ.டி.சி போலீஸுக்கு மாற்றப்பட்டது. தொழிலதிபருக்கு எந்த வகையில் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism