Published:Updated:

''பரோலில் வரக்கூட உரிமை இல்லையா?''

வெடிக்கிறார்

''பரோலில் வரக்கூட உரிமை இல்லையா?''

வெடிக்கிறார்

Published:Updated:
##~##

ராஜீவ் படுகொலை மர்மங்கள்பற்றிப் பரவலாக மீண்டும் பேச்சு எழ... பதில் கிடைக்காத பல கேள்விகளுக்கு விடை கேட்டுப் பலரும் மேடைகளில் முழங்கத் தொடங்கி இருக்கிறார்கள். இது ஒரு புறம் என்றால், 'இந்தக் கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வருபவர்களின் சட்ட உரிமைகள் நசுக்கப்படுகின்றன’ என்று குமுறுகிறார்கள் மனித உரிமை ஆர்​வலர்கள்! 

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நால்வரில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த'தடா’ ரவிச்சந்திரனும் ஒருவர். மதுரை மத்திய சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ரவிச்சந்திரன், நீண்ட சிறைவாசத்தால் உரிமைகள் மறுக்கப்பட்ட தனது பாதிப்புகளை, மனக் குமுறல்களைக் கொட்ட... தனது வழக்கறிஞர் மூலமாக அவர் நமக்கு அளித்த சிறைப் பேட்டி இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆயுள் தண்டனை என்பது நடைமுறையில் 14 ஆண்டுகள்தான். சட்டம், சிறை விதிகளுக்கு

''பரோலில் வரக்கூட உரிமை இல்லையா?''

அப்பாற்பட்டு அரசியலும் கலந்து இருப்பதால், நாங்கள் இன்னும் சிறைக் கொட்டடியில் உழல்கிறோம். தண்டனைக் குறைப்பு என்ற சலுகையை அரசு எமக்கு மறுத்தாலும், 20 ஆண்டுகள் முடிந்த பிறகாவது, எங்களை விடுதலை செய்ய வேண்டும். ஆகவே, பதவி ஏற்றுள்ள புதிய அரசு, எமது விடுதலையை நேர்மையான முறையில் பரிசீலிக்க வேண்டும். நீண்ட காலமாகச் சிறைக்குள் இருந்தும், மனச் சிதைவு ஏற்படாமல் எம்மைத்

''பரோலில் வரக்கூட உரிமை இல்லையா?''

தற்காத்துக்கொண்டதே பெரிய சாதனை. கைதான முதல் நாளில் இருந்து இன்று வரை பல்வேறு மன அழுத்தங்களையும், உடல் அளவிலான துன்பங்களையும் எதிர்கொண்டு வருகிறோம்.  

கடந்து போன 7,300 நாட்களின் ஒவ்வொரு மணித் துளியும், இனி வரும் நாட்களிலும், கொலையாளி முத்திரையுடன், அரசின் இரும்புப் பிடியின் கீழ் வாழ்வதன் துயரத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாது. ஏனென்றால், ராஜீவ் கொலைக்காக சிறை​வாசம் அனுபவிக்கும் ஏழு பேரும், இந்தக் கொலைக்குக் காரணம் அல்ல என்பதுதான் வேதனையான வேடிக்கை!

நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்​தில் உறுப்பினராக இருந்தவன்தான். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றியவன்தான். அதற்காக, ராஜீவ் கொலைக்கு என்னைப் பொறுப்பாளி ஆக்குவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? வழக்கில், '41 பேர் மீது கூட்டுச் சதி’ என சி.பி.ஐ. கூறியது. விடுதலைப் புலிகளின் தலைமைக்​கும், சிவராசனுக்கும் இடையே நடைபெற்ற வயர்லெஸ் உரையாடல் எனக் கூறி, சி.பி.ஐ. ஒரு சான்று ஆவணத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்தது. அதில், 'சதித் திட்டம் குறித்து, இயக்கத்திலேயே, மூன்று நான்கு பேரைத் தவிர மூத்த தலைவர்​களுக்குக்கூட எதுவும் தெரியாது’ எனக் குறிப்பிடப்பட்டது. இது, எவ்வளவு பெரிய முரண்பாடு?! நான்கு பேர் எங்கே, 41 பேர் எங்கே? தவிர, விடுதலைப் புலிகளின் ரகசியம் காக்கும் திறன் உலகம் அறிந்த ஒன்று. 'இவ்வளவு பெரிய திட்டத்தை, 41 பேருடன் கலந்து ஆலோசித்து இருப்பார்கள்’ என்று சி.பி.ஐ-யால் எப்படித்தான் கற்பனை செய்ய முடிந்ததோ? நான் குறிப்பிட விரும்புவது, நாங்கள் ஏழு பேரும் இன்னமும் தண்டனை அனுபவிப்பது, செய்த குற்றத்துக்காக அல்ல, கூட்டுச் சதியின் பங்காளிகள் என்ற அனுமானத்துக்காகவே!

ஆயுள் சிறைவாசிகள் அவ்வப்போது சாதாரண விடுப்பிலும், அவசர விடுப்பிலும் பரோலில் வெளியே வரலாம். இதற்கெனத் தனித்தனியான விதிமுறைகள் உள்ளன. விடுப்பு விதி 20-ன்படி, விடுதலைக்குப் பிறகு எதிர்கால வாழ்க்கைக்கும், குடும்பத்தினரின் வாழ்நிலைக்குமான ஏற்பாடுகளைச் செய்வதற்கும், குழந்தைகளைப் பள்ளி கல்லூரிகளில் சேர்ப்பதற்கும், வீடு கட்டுவதற்கும், பழுதுகளைச் சரிசெய்யவும், பிள்ளைகள், சகோதரன், சகோதரிகளின் திருமணங்களில் கலந்துகொள்ளவும், பாகப் பிரிவினை உள்பட குடும்பப் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கவும், அறுவடை போன்ற விவசாயப் பணிகளைச் செய்யவும், பிற அசாதாரண காரணங்​களுக்காகவும் சாதாரண விடுப்பு எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆனால், நாங்கள் மட்டும் இந்த விஷ​யத்தில் பாரபட்சமாக நடத்தப்​படுகிறோம். கொடிய குற்றவாளிகள்கூட வருடத்துக்கு நான்கு அல்லது ஐந்து முறை, 45-ல் இருந்து 60 நாட்கள் வரை பரோல் விடுமுறையில் செல்கிறார்கள். என் தந்தை புற்றுநோயால் மரணப் படுக்கையில் இருந்தபோதுகூட, அரசாங்கம் மனிதாபிமானம் இல்லாமல் பரோல் தர மறுத்தது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, உயர் காவலுடன்கூடிய ஆறு நாள் விடுப்பு கிடைத்தது. என் அப்பா இறந்தபோது, மூன்று நாட்கள்தான் பரோல் கிடைத்தது.

அதன் பிறகு, எட்டு ஆண்டுகளாக பரோல் கேட்டு, அரசிடம் போராடி வருகிறேன். கடைசியாகச் சென்ற வருடம் ஜூலை மாதத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு விண்ணப்பம் அனுப்பினேன். அதற்குப் பதில் வரவே இல்லை. மூத்தவன் என்ற முறையில், வயதான என் தாயாரின் உடல்நலப் பிரச்னைகள், வீடு, விவசாயம் உள்பட்ட பல்வேறு பிரச்னைகளைப் பார்க்க பரோல் விடுப்பில் வெளிவர வேண்டி இருக்கிறது. இப்போதைய அரசிடம் இதுபற்றி மீண்டும் விண்ணப்பம் செய்து இருக்கிறேன்!'' என்கிறார் ரவிச்சந்திரன், எதிர்பார்ப்போடு.

புதிய அரசாவது, மனிதாபிமான  நடவடிக்கை எடுக்கட்டும்!

- இரா.தமிழ்க்கனல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism