Published:Updated:

மணல் அதிபர் இப்போதும் ஆறுமுகசாமியா?

முதல்வர்கள் மாறலாம்..

மணல் அதிபர் இப்போதும் ஆறுமுகசாமியா?

முதல்வர்கள் மாறலாம்..

Published:Updated:
##~##
மணல் அதிபர் இப்போதும் ஆறுமுகசாமியா?

'பணம் கொழிக்கும் துறைகள்’ என டாப் ஃபைவ் லிஸ்ட் எடுத் தால், டாஸ்மாக்குக்கு அடுத்து நிச்சயம் மணல் இருக்கும். கடந்த தி.மு.க. ஆட்சிக்குக் கெட்ட பெயர் உண்டாக்கியதில் மணல் கொள்ளைக்கு முக்கியப் பங்கு உண்டு. இப்போது, அ.தி.மு.க. ஆட்சியிலும் அதுவே தொடர்கிறது என்று புகார்கள்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்தோம். ''தி.மு.க. ஆட்சியில் ஆற்றில் இரண்டு யூனிட் மணல் அள்ள பொதுப் பணித் துறைக்கு

மணல் அதிபர் இப்போதும் ஆறுமுகசாமியா?

650 செலுத்துவோம். இப்போதும் அதே தொகைதான். ஆனால், மணல் அள்ளுவதற்கான பாயின்ட்டுகளைக் குறைத்துவிட்டனர். ஒரு லோடு நிரப்ப நாலு நாட்கள் லாரி வரிசையில் நிற்க வேண்டும். இதனால், லாரி வாடகை அதிகமாகிவிடும். அதனால்தான், இன்று இரண்டு யூனிட் மணல்

மணல் அதிபர் இப்போதும் ஆறுமுகசாமியா?

12,000-க்கு விற்க வேண்டிய நிலைமை. இதுவே ஆற்றில் டிமாண்ட் இல்லாமல் மணல் கிடைத்தால்,

மணல் அதிபர் இப்போதும் ஆறுமுகசாமியா?

6,000-க்குத் தாராளமாகக் கொடுக்க முடியும்.

மணல் அதிபர் இப்போதும் ஆறுமுகசாமியா?

கடந்த ஆட்சியில் மணல் அள்ளும் உரிமம் கோவையைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்பவருக்குக் கொடுத்தனர். அ.தி.மு.க-வும், அதே ஆறுமுகசாமிக்குதான் உரிமத்தைக் கொடுத்திருக்கிறார்களாம். இவர்,

மணல் அதிபர் இப்போதும் ஆறுமுகசாமியா?

கடந்த ஆட்சியில் செய்த மாதிரியே, மணலைக் கொண்டுவந்து ஆற்றங்கரை ஓரத்தில் கொட்டிவைத்துவிட்டு அதிக விலைக்கு விற்காமல் தடுக்கணும். தமிழ்நாடு முழுக்க 65 இடங்களில் மணல் அள்ள புரபோசல் கொடுத்து உள்ளனர். ஆனால், 30 இடங்களில் மட்டும்தான் மணல் அள்ளுகிறார்கள். அதை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய முதல்வர் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறார் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. அதே நேரத்தில், எங்களோட கஷ்ட நஷ்டங்களையும் புரிந்து இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்...'' என்றார்.

விவரம் அறிந்த சிலரோ, ''இதற்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சி இருந்தபோதும், ஆறுமுகசாமியோட ஆதிக்கம்தான் இருந்தது. தி.மு.க. ஆட்சி வந்ததும் அவர் என்ன செய்வாரோன்னு எல்லோரும் எதிர்பார்த்தாங்க. கொஞ்சமும் தாமதிக்காமல், தி.மு.க. பக்கம் போனாரு. இப்போ அ.தி.மு.க-வுக்கே வந்துட்டாரு. இப்போதும் பல இடங்களில் தி.மு.க. ஆட்களோட சேர்ந்துதான்  மணல் கொள்ளை நடந்துட்டு இருக்கு. அவங்களுக்கு வேண்டப் பட்ட லாரிகளை நடுவில் நுழைத்து மணல் வெளியில் போகுது. இது எல்லாம் முதல்வரோட கவனத்துக்குப் போகுதான்னு தெரியலை...'' என்கிறார்கள்.

பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத் திடம் பேசினோம். ''மணல் அள்ளும் பாயின்ட்டுகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கூடிய சீக்கிரமே தடை இன்றி மணல் கிடைக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் மணல் கொள்ளை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எல்லா இடங்களிலுமே பொதுப்பணித் துறை மூலமாகவே மணல் எடுக்கப்பட்டு வருகிறது. ஆறுமுகசாமி என்பவருக்கு மணல் அள்ளுவதற்கு எந்த உரிமமும் வழங்கப்படவில்லை. ஆற்றில் எவ்வளவு ஆழம் அள்ளலாம் என சில விதிமுறைகள் இருக்கின்றன. அதற்கு உட்பட்டுத்தான் மணல் அள்ளப்படுகிறது. மணலை ஸ்டாக் வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார் உறுதியோடு.

அமைச்சர் இப்படிச் சொன்னாலும், மணல் விவகாரத்தில் நடக்கும் தவறுகளை முதல்வர் நேரடி யாகத் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். கண்டு கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், அது அவர் ஆட்சிக்கே ஆபத்தாகலாம்!

என்ன செய்ய வேண்டும் ஜெ.? 

மணல் அதிபர் இப்போதும் ஆறுமுகசாமியா?

'தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளக் கூடாது’ எனத் தொடர்ந்து போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் பேசினோம். ''நமக்குப் பக்கத்தில் இருக்கும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆற்றில் மணல் அள்ளக் கூடாது என சட்டமே இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் இன்னும் பொக்லைன் மூலம் மணல் அள்ளுகிறார்கள். இது வேதனையான விஷயம். 'ஒரு கன அடி மணல் உருவாக 200 வருடங்கள் ஆகும்’ என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். தண்ணீரைத் தனக்குள் சேகரித்துவைக்கும் தன்மைகொண்டது மணல். அந்த மணலைக் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டிக்கொண்டே போவதால், நிலத்தடி நீரும் குறைந்துகொண்டே போகிறது. ஒரு காலத்தில் பாலாற்றில் ஊற்றுக் கால்வாய் உண்டு. எந்த இடத்தில் பறித்தாலும் தண்ணீர் வரும். இன்று பாலாற்றில் கிணறு வெட்டினால்கூட தண்ணீர் வராது. தி.மு.க. ஆட்சியில் மணல் கொள்ளை அதிக அளவில் நடந்தது என்பதை மறுக்க முடியாது. அது அ.தி.மு.க. ஆட்சியிலும் தொடரக் கூடாது என்பதே எனது வேண்டுகோள். தமிழ்நாடு முழுக்க ஸ்டாக் வைத்திருக்கும் மணலை வெளியில் கொண்டுவந்தாலே, மாநிலத்தில் இன்னும் இரண்டு வருடங்களுக்கு மணல் தேவை இருக்காது. இந்த மணலை முறையாக ரிலீஸ் செய்ய அரசு உத்தரவிட வேண்டும். அதுவரை ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்கவே கூடாது. அதற்குப் பிறகும்கூட பொக்லைனைப் பயன்படுத்தி மணல் அள்ளுவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும். மணல் எல்லோருக்குமே அவசியத் தேவை என்பதை மறுக்க முடியாது. அதற்காக ஆற்று வளத்தைச் சீரழித்துவிடக் கூடாது!'' என்கிறார் நல்லகண்ணு. 

- கே.ராஜாதிருவேங்கடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism