Published:Updated:

''யாரு தப்பு பண்ணினாலும், பழி என்மேல தான்!''

மிரண்டுகிடக்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள்!

##~##

முதல்வராகப் பொறுப்​பேற்று 50 நாட்கள்கூட முடியாத நிலையில்... எட்டு மாவட்ட செயலாளர்களைத்தூக்கி வீசி இருக்கிறார் ஜெயல​லிதா. விசாரித்தால், 'கருணா​​நிதிக்கு எப்போதும் சீனியாரிட்டி முக்கியம். ஆனால், ஜெயலலிதாவுக்கு சின்சியாரிட்டிதான் முக்கியம்’ என்கிறார்கள்! 

மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். ''தி.மு.க-வில் பெரிய பதவியில் இருக்கிறவர் எவ்வளவு பெரிய தப்பு பண்ணினாலும், யாரும் கேட்க மாட்டாங்க. ஆனா, எங்க கட்சியில் ஒருத்தன் நாலு பேரு பார்க்கிற மாதிரி சத்தமாக் கத்திப் பேசினான்னு தலைமைக்குப் புகார் போனாலே போதும்... பதவியைவிட்டுத் தூக்கிடுவாங்க. அம்மா பதவியேற்றதும் எங்களை எல்லாம் கண்காணிக்க எப்படி தனியா ஒரு டீம் போட்டாங்களோ, அதைப்போலவே மாவட்டச் செயலாளர்களின் நடவடிக்கைகளைக் கவனிக்கவும் உத்தரவு போட்டாங்க. அமைச்சரவைக் கூட்டத்திலும், 'ஆளும் கட்சி ஆகிட்டோம்கிற மிதப்பில், நம்ம கட்சி மாவட்டச் செயலாளர்கள் யாராவது ஆட்டம் போடுறாங்களான்னு நீங்களும்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''யாரு தப்பு பண்ணினாலும், பழி என்மேல தான்!''

கவனிங்க. யாராவது தப்பு பண்றது தெரிஞ்சா, உடனடியா என் கவனத்துக்குக் கொண்டுவாங்க. யாரு தப்பு செஞ்சாலும், பழி என் மேல்தான் விழும்கிறதை மனசுல வெச்சு நடந்துக்கோங்க’னு அம்மா சொல்லி அனுப்பினாங்க. அப்படி பிரச்னைகளுக்கு உள்ளான மாவட்டச் செயலாளர்களோட பதவிகள்தான் இப்ப காலி ஆகியிருக்கு!'' என்றார்.

பதவிகள் பறிக்கப்பட்டதற்கான பின்னணிபற்றி கார்டன் வட்டாரத் தொடர்பில் இருக்கும் சிலரிடம் விசாரித்தோம். ''விருதுநகர் மாவட்டச் செயலாளரான கே.கே.சிவசாமி தேர்தல் சமயத்தில் சரியா வேலை செய்யவில்லை என்பது புகார். உளவுத் துறையும் அதை உறுதி

செய்ய... பதவி காலி. நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையா, மாவட்டத்தில் 16 டாஸ்மாக் பார்களை தி.மு.க-வைச் சேர்ந்த நபர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததா ஒரு ஆதாரம் அம்மாவுக்கு வர... முத்தையாவுக்குப் பதவி போச்சு. 'ஒரு மாவட்டத்துக்கு எதுக்கு இரண்டு மூன்று மாவட்ட செயலாளர்கள்?’னு அமைச்சர் ஒருத்தர்கிட்ட அம்மா கேட்க... அவரும், 'ஆமாம்மா, தேவை இல்ல. ஒருத்தர் போதும்’னார். 'அப்போ தூக்கிடுங்க. இனி நெல்லை மாவட்டச் செயலாளர் மட்டும்தான். மாநகர் மாவட்டச் செயலாளர் தேவை இல்லைன்னு சொல்லிட்டாங்க!

சேலத்திலும் இதே மாதிரிதான். 'கிழக்கு, மேற்கு எல்லாம் வேண்டாம். மாநகர் ஒருத்தர், புறநகர் ஒருத்தர்னு போதும். கிழக்கு மாவட்டத்தில் இருக்கும் எஸ்.கே.செல்வத்தைத் தூக்கிட்டு மொத்தப் பொறுப்பையும் எடப்பாடி பழனிசாமிக்குக் கொடுத்துடலாம். செல்வத்துக்கு வேறு எதாவது செய்யலாம்’னு அம்மா சொன்னாங்க...' என்றவர்கள், மற்ற மாற்றங்களைப் பற்றியும் தொடர்ந்தனர்.

''யாரு தப்பு பண்ணினாலும், பழி என்மேல தான்!''

''சின்னம்மாவின் சொந்தக்காரரான ராவண​னுக்கும் நீலகிரி மாவட்டச் செயலாளர் செல்வராஜுக்கும் சில பிரச்னைகள். சின்னம்மா மூலமா இந்த விஷயம் அம்மாவோட கவனத்துக்கு வந்தது. உடனே அங்கேயும் ஆக்ஷன். புதுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ-வான நெடுஞ்செழியனுக்கும், மாவட்டச் செயலாளர் கருப்பையாவுக்கும் தேர்தலுக்கு முன்பு இருந்தே பிரச்னை. தேர்தல் நேரத்தில் சரியா வேலை செய்யவில்லை என்று கருப்பையா மீது புகார்.

''யாரு தப்பு பண்ணினாலும், பழி என்மேல தான்!''

இதைப் போலவே காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ-வும் சிவகங்கை மாவட்டச் செயலாள​ருமான சோழன் சித.பழனிசாமி, அமைச்சராக இருக்கும் கோகுல இந்திராவைப்பற்றி வெளிப்படையாகவே சில விஷயங்களைப் பேசியதாகச் சொல்றாங்க. காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் கோகுல இந்திராதான் பொறுப்பாளர். இரண்டு மாவட்டச் செயலாளர்களின் பிரச்னைகளையும் கோகுல இந்திராதான் அம்மாவோட கவனத்துக்குக் கொண்டுவந்தாங்க. உடனே நடவடிக்கை எடுத்துட்டாங்க.

மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த செல்லூர் ராஜு, தன் ஆதரவாளர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் பார் ஒதுக்கீடு செஞ்சதாகவும் அவரது ஆதரவாளர்கள் ரேஷன் கடைகளில் அத்துமீறி நுழைந்து பிரச்னை செய்வதாகவும் போலீஸ் ரிப்போர்ட் வைக்கப்பட்டது. திருச்சிப் புறநகர் மாவட்டச் செயலாளர் சுப்பு என்கிற சுப்ரமணி மீது எம்.எல்.ஏ. ஸீட் வாங்கித் தருவதாகச் சொல்லி சிலரிடம் பணம் வாங்கியதாக புகார். உளவுத் துறை ரிப்போர்ட்டும் திருப்தியாக இல்லாததால், அவரை நீக்கிட்டாங்க. இது எட்டோடு நிற்கப்போவது இல்லை. புகார்கள் வரும்பட்சத்தில், அம்மாவோட ஆக்ஷன் தொடரும்...'' என்று முடித்தனர்.

ஜெயலலிதாவின் இந்த அதிரடியால் அரண்​டு கிடக்கிறார்கள் ஆளும் கட்சி நிர்வாகிகள்!

- கே.ராஜாதிருவேங்கடம்,

படம்: சு.குமரேசன்