Published:Updated:

ஆ.ராசா உறவினர்களைக் குடையும் அதிகாரிகள்

பணம் வந்த வழி எது...?

##~##

.ராசாவின் மனைவி பரமேஸ்வரியும், ஆ.ராசாவின் சகோ​தரர் ஆ.ராமச்​சந்தி​ரனும், திருச்சி வருமான வரித் துறை விசாரணைக்காக ஆஜரான தகவல்​களை, கடந்த இதழில் வெளியிட்டு இருந்தோம். நாம் சொல்லி இருந்தபடியே  ஜூன் 29-ம் தேதி ஆ.ராசாவின் அண்ணன் கலியபெருமாளும், அக்காள் கமலாவின் கணவரான அரங்கராஜனும் விசாரணைக்கு ஆஜரானார்கள். மதியம் 12 மணிக்கு அவர்களிடம் ஆரம்பித்த விசாரணை, இரவு 7 மணி வரை நீடித்தது. 

கலியபெருமாள், பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராக இருக்கிறார். ராசாவின் சொந்த ஊரான சத்திரமனை வேலூரில் வசித்து வருகிறார். ராசாவின் பெற்​றோரான ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளையின் நிர்வாகி இவர். பெரம்பலூரில் சிவகாமம் மோட்டார்ஸ் என்ற பெயரில் ஹீரோ ஹோண்டா ஷோரூம், சிவகாமம்ஏஜென்சீஸ் என்ற பெயரில் ஐ.டி.சி புராடக்ட்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆ.ராசா உறவினர்களைக் குடையும் அதிகாரிகள்

ஏஜென்ஸி, அரியலூரிலும் சிவகாமம் டிரேடர்ஸ் என்ற பெயரில் ஏஜென்ஸி நடத்தி வருகிறார்.  ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளையின் டைரக்டர்களில் ஒருவராக இருக்கிறார் அரங்கராஜன். பெரம்பலூர் மாவட்ட ஏரியாக்களில் கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஒரு பக்கம் ரியஸ் எஸ்டேட் பிசினஸில் கலக்கிக்கொண்டு இருக்க... இவரும் தனி ரூட்டில் ரியல் எஸ்டேட் பிசினஸில் தீவிரமாக ஈடுபட்டார்.

விசாரணை குறித்த விவரம் அறிந்த வட்டாரத்தில் பேசியபோது, ''சி.பி.ஐ. ரெய்டின்போது சிவகாமம் ஏஜென்சியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, கலியபெருமாளிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அரங்கராஜனிடம் வருமானத்தை மீறி அவர் பெயரில் இருக்கும் சொத்துகள் தொடர்பாகத்தான் கேள்விகள் கேட்கப்பட்டன. ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்குவதற்கான பணம் எப்படிக் கிடைத்தது? யார் கொடுத்தது? யாரிடம் விற்கப்பட்டது? எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். மௌனத்தையும் மழுப்பலையுமே பெரும்பாலான கேள்விகளுக்கு இருவரும் பதிலாகக் கொடுத்தார்கள்...'' என்றார்கள்.

மீதம் உள்ள ஆ.ராசாவின் உறவினர்களையும், திருச்சி வருமான வரித் துறை வட்டாரத்தில் விரைவில் எதிர்பார்க்கலாம்!

- ஆர்.லோகநாதன், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்