Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இறக்கும் முன் ரசிலா கூறியது இதுதான்' - சொல்கிறார் உறவினர்

ரசிலா

பூனே இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 25 வயதான ரசிலா, ஜனவரி 29-ம் தேதி தன் அலுவலக கேபினில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

அவரது கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்தது நாம் அறிந்ததே. ஆனால் இறக்கும் முன் ரசிலா என்ன சொன்னார் என்பதை பற்றி முதல் முறையாக வாய் திறந்திருக்கிறார் ரசிலாவின் உறவினரான அஞ்சலி நந்தகுமார். இதோ ரசிலாவின் இறுதி உரையாடல்...


 “நான் இன்று சமர்ப்பிக்கும் வேலையைப் பொறுத்துதான், நான் பெங்களூருக்கு பணியிடமாற்றம் பெறுவதற்கான சாத்தியங்கள் நிறுவனத்திடமிருந்து பிப்ரவரி முதல் வாரத்தில் கிடைக்குமா என்பது தெரியும்”, என கூறிய சில நிமிடங்களிலே,  'என் அறைக்குள் யாரோ நுழைவதுபோல் தெரிகிறது. நான் சற்று நேரத்திற்குப்பின் அழைக்கிறேன்”, என்று அவசர அவசரமாக அலைபேசியைத் துண்டித்திருக்கிறார். இவைதான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள்!

அதன்பின், இரவு 8:30 மணியளவில், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு இருந்த அவரின் உயிரற்ற உடல் மட்டுமே அவரது பணியறையில் காணப்பட்டது.

மேலும், ரசிலாவுக்கு ஞாயிறுக்கிழமை அன்று அலுவலகத்தில் தனியாக வேலை செய்வதில் உடன்பாடில்லை. அவரது மேலதிகாரிக்கு, அவர் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே, தன்னை அதிக நேரம் வேலை வாங்குவதாக தனது குடும்பத்தாரிடம் அவ்வப்போது புலம்பி இருக்கிறார்.

கொலையான ரசிலாவின் கடைசி நிமிடங்கள் போராட்டமாக கழிந்தது என்பதை நிருபிக்கும் விதமாக இருக்கிறது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட். 

’கொலையாளி அவரை ஏதோ ஒரு பொருளை வைத்து தாக்கியிருக்கிறார். அவரது இடது தோள்பட்டையில் பல் கடித்த காயங்கள் இருக்கின்றன. முகத்திலும் மார்பிலும் இருக்கும் காயங்களை பரிசோதித்ததில், அவர் கொலையாளியுடன் மிகவும் போராடி இருக்கிறார். அப்போது அவர் கழுத்தை நெரிக்கப்பட்டு, வாய் மற்றும் மூக்கு வழியாக ரத்தம் சிதறியிருக்கிறது" என்றிருக்கிறார்கள். இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், காவல்துறை அதிகாரிகள், கொலை நடந்த இடத்திற்கு, பரிசோதனை வல்லுநர்களை அழைத்து செல்லவும் இல்லை; சாட்சியங்களுக்காக கொலையாளியையும் பரிசோதிக்க விடவில்லை என்பதுதான்.

கொலைக்கு அடுத்த நாள், சாய்கியா பாபின் என்ற காவலாளியை காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். ’நான் ரசிலாவை உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தேன். அதற்கு அவர் என்னை மிகவும் கடிந்துகொண்டார். அதனால்தான் கொன்றேன்’, என வாக்குமூலம் அளித்திருக்கிறார் பாபின். ஆனால், பணியிடத்தில், ரசிலா அவரால் மட்டுமே துன்புறத்தப்படவில்லை என்பதுதான் உண்மை!

மேலதிகாரியின் காழ்ப்புணர்ச்சி...

”என்னுடைய டீம் லஞ்ச் டயத்தில் கலந்துகொள்ள மறுத்துவிட்டேன். அன்றிலிருத்து, என் மீது அதிகப்படியான வேலைப்பளுவை சுமத்தினார் என் மேலதிகாரி. நான் கேட்ட பணியிடமாற்றமும் நிலுவையில் இருக்கிறது. அதற்கு நான் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை முடித்தாக வேண்டும்’, என்று தான் இறப்பதற்கு மூன்று நாட்கள்முன் அவர் தனது தந்தை ராஜூவிடம் வருந்தியிருக்கிறார்.

ரசிலாவின் சகோதரர் லய்ஜின் குமாரும் ரசிலா தன்னிடமும் இப்படிப்பட்ட வருத்தங்களை பகிர்ந்து கொண்டதை தற்போது தெரிவித்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன் தான், ரசிலாவுக்கும் அவரது மேலதிகாரிக்கும், பணியிட மாற்றம் குறித்து வாக்குவாதம் நடந்தாகவும் கூறுகிறார். அதற்கு அந்த மேலதிகாரி ரசிலாவிடம், ‘உனக்கு வெகுவிரைவில் பாடம் கற்பிக்கிறேன்’, என்று மிரட்டியிருப்பதாக கூறுகிறார். மேலும், ரசிலா கொலையானதையும் மிக தாமதமாகவே காவல்துறை தங்களுக்கு தகவல் தந்ததாக கூறியிருக்கிறார். 

ரசிலாவின் பதினாறாம் காரியம் முடிந்ததும் அவர் மேலதிகாரி மீது புகார் கொடுக்க எண்ணியிருக்கிறார்களாம் அவர் குடும்பத்தினர்.

 

- ஷோபனா ரூபாக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement