Published:Updated:

சிவகங்கை: கொலைக்காக கும்பல் சேர்த்த பெண் ரவுடி! - அதிர்ச்சி கொடுத்த அதிகாலை ரெய்டு

ரவுடி
களின் ஆயுதங்கள்
ரவுடி களின் ஆயுதங்கள்

லோடு முருகன் தற்போது சிறையில் உள்ள நிலையில் அவர் மனைவி காளீஸ்வரியின் திட்டத்தோடு செந்தில்பாண்டியை கொல்ல திட்டம் போட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த மாங்குடி புதுக்குளம் கண்மாய்ப் பகுதியில் பெண் ரவுடி காளீஸ்வரி தலைமையிலான இருபதுக்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல் முகாமிட்டுள்ளது. அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டும் குவாரிகளில் செலவுக்குப் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.

ரவுடிகளின் ஆயுதங்கள்
ரவுடிகளின் ஆயுதங்கள்

இதுகுறித்து தகவல் அறிந்து, மானாமதுரை டி.எஸ்.பி ராஜேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் எஸ்.ஐ-க்கள் பாலமுருகன், ராஜ்குமார், மாரிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த டீம் இன்று இன்று அதிகாலை அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளது. அப்போது அங்கிருந்த பெண் ரவுடி தலைமையிலான எட்டுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்த 23 கிலோ கஞ்சா, 7 வாள்கள், 3 வீச்சு அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் 5 செல்போன்கள், 8 இரு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

`கொரோனா பணியிலும் ஒருதலைக் காதல்!' - சென்னை மாநகராட்சி இன்ஜினீயரை சிக்க வைத்த மாணவி

இவர்களில் சிலர் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட (பொறுப்பு) காவல்துறை எஸ்.பி வருண் குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார்.

ரெளடியின் ஆயுதங்கள்
ரெளடியின் ஆயுதங்கள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், "தற்போது சிக்கியுள்ள கும்பல் மிகப்பெரிய அளவில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல். செந்தில்பாண்டி என்ற ரவுடி கும்பலுக்கும் எதிர்த் தரப்பான லோடுமுருகனின் ஆள்களுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. லோடு முருகன் தற்போது சிறையில் உள்ள நிலையில் அவர் மனைவி காளீஸ்வரியின் திட்டத்தோடு செந்தில்பாண்டியை கொல்ல திட்டம் போட்டுள்ளனர். இவர்களுடன் லோடு முருகனின் சிறை நண்பர் நவீன்நாகராஜ், நாகப்பன் உள்ளிட்டோர் காளீஸ்வரியின் உதவியால் கும்பலாகச் சேர்ந்துள்ளனர். பல நாள்களாக போலீஸுக்குத் தெரியாமல் சுற்றிவந்தனர்.

`ஒரு ரிமாண்ட்டைக்கூட ஒழுங்கா செய்ய முடியல..!' -கால்முறிவிலும் காவலர்களை வசைபாடிய `கஞ்சா' மணி

தற்போது பிடிபட்ட லோடு முருகன் தரப்பிற்கும் செந்தில்பாண்டி தரப்பிற்கும் முன்பகை உள்ளது. இரண்டு தரப்பிலும் தொடர்ந்து மாத்தி, மாத்தி கொலைகள் நடந்துள்ளன. தங்களது திட்டத்தை நிறைவேற்ற இப்படி கூடாரம் அமைத்து சமைத்து சாப்பிட்டு சுற்றிவருகின்றனர். இவர்களின் வழிச்செலவுக்கும் மற்ற செலவுக்கும் கஞ்சா வியாபாரம் செய்கின்றனர்.

எஸ்.பி வருண் குமார்
எஸ்.பி வருண் குமார்

மேலும் அதிக பணம் தேவைப்படும்போது ஆயுதங்களைக் காட்டி பெரிய இடத்து ஆள்களை மிரட்டி பணம் சம்பாதித்து வந்தனர்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு