Published:Updated:

8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைசெய்த 60 வயது முதியவர்; வழக்கு பதியப்பட்டதால் தற்கொலைக்கு முயற்சி

பாலியல் வன்கொடுமை ( Representational Image )

உத்தரப்பிரதேசத்தில், 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது முதியவர், போலீஸாரின் வழக்கு பதிவால் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைசெய்த 60 வயது முதியவர்; வழக்கு பதியப்பட்டதால் தற்கொலைக்கு முயற்சி

உத்தரப்பிரதேசத்தில், 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது முதியவர், போலீஸாரின் வழக்கு பதிவால் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் 60 வயது முதியவர் ஒருவர் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பியாரேலால் என்றழைக்கப்படும் 60 வயது முதியவர், 8 வயது சிறுமியை நேற்று தன் வீட்டுக்கு அழைத்துவந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பின்னர் அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்ற சிறுமி, நடந்ததைப் பற்றிக் குடும்பத்தாரிடம் கூறியிருக்கிறார். அதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் போலீஸில் புகாரளிக்க, பியாரேலால் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

தன்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டதை அறிந்த பியாரேலால் வீட்டிலேயே விஷம் அருந்தியிருக்கிறார். போலீஸார் அவரை கைதுசெய்ய அவரின் வீட்டுக்குச் சென்றபோது, பியாரேலால் மயக்கத்தில் தரையில் விழுந்துகிடந்திருக்கிறார். இதைக் கண்ட போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீஸ்
போலீஸ்

பின்னர் இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி சூரஜ் பிரகாஷ் சர்மா, ``நேற்று மாலை பியாரேலால் தன் வீட்டில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தார். அதோடு, சிறுமியின் அந்தரங்க உறுப்பில் மெழுகுவத்தியைச் சொருகியிருக்கிறார். குடும்பத்தினரின் புகாரின்பேரில் அவர்மீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும், விஷம் அருந்திய பியாரேலால் தற்போது அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.