Published:Updated:

''எங்களுக்குத் தேவை அங்கீகாரம்!''

குலாம் நபிக்கு எதிராக ஓரினச் சேர்க்கையாளர்கள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

த்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் சமீபத்தில், ஜில்லா பரிஷத் தலைவர்கள் மற்றும் மாநகர மேயர்கள் கலந்துகொண்ட மாநாட்டில், ''ஓரினச் சேர்க்கை என்பது ஒரு நோய். அது இயற்கைக்குப் புறம்பானது. மேலை நாடுகளில் இருந்து இறக்குமதியான கலாசாரம்!'' என்று பேச... இது நாடு முழுவதிலும் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களிடம் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது! 

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகைக்கு முன்பாக ஒன்று திரண்டவர்கள், குலாம் நபி ஆசாத்துக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பி, 'அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அவர்களிடம் பேசினோம். ''இடது கைப் பழக்கம் என்பது இயற்கையாக அமைவது, அது போலத்தான் ஓரினச் சேர்க்கையும். இதை மட்டும் சமூகம் வேறு மாதிரி பார்ப்பது ஏன்? ஓரினச் சேர்க்கைக்கும், மன நலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

''எங்களுக்குத் தேவை அங்கீகாரம்!''

உச்ச நீதிமன்றமே, ஓரினச் சேர்க்கையை அங்கீகரித்து, அரசியல் சட்டப் பிரிவு 377-ஏ சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. ஏற்கெனவே, எங்களில் பலரை வீட்டுக்குள் சேர்க்க மாட்டார்கள். இப்போதுதான் மிகச் சிறிய அளவில் விழிப்பு உணர்வு ஏற்பட்டு, எங்களுக்கான அங்கீகாரம் கிடைத்து வருகிறது. இன்னும் எத்தனையோ குடும்பங்களில் தவறான வழிகாட்டுதலின் பேரில், இதை நோய் என்று புரிந்துகொண்டு எலெக்ட்ரிக் ஷாக் மூலம் குணப்படுத்துகிறேன் என்று சித்ரவதை செய்கின்றனர். இந்த நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சு இன்னும் சிக்கலை அதிகரிக்கும் என்பதே எங்களது அச்சம். அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டம் அங்கீகரிக்கிறது. உலகம் எங்கேயோ போய்க்கொண்டு இருக்கையில், அமைச்சரின் பேச்சு இந்தியாவை 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துப் போகும்!'' என்கிறார்கள்.

இது மேலை நாட்டுக் கலாசாரம் என்பதையும் மறுக்கிறார்கள். ''பழங்கால ஓவியங்களிலும், சிற்பங்களிலும், நாட்டியங்களிலும் இல்லாததா இது? காலங்காலமாக எல்லா நாடுகளிலும், எல்லா ஊர்களிலும் உள்ளதுதான். இதை மேல்நாட்டு இறக்குமதி என்று சொல்வது வரலாற்றுரீதியாகவே தவறு!'' என்கிறார்கள்.

''சட்டம் சொல்லிவிட்டாலும் சமூகம் இன்னும் எங்களை அங்கீகரிக்கவில்லை. அந்தக் காரணத் தினாலேயே, முகம் மறைத்து வாழ வேண்டி இருக்கிறது. சமூக பயம் எங்களை முகம் மறைக்கச் செய்கிறதே ஒழிய, அது எங்கள் குற்ற உணர்வு அல்ல..'' என்றார் ஒருவர்.

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே போன்ற நகரங்களிலும் அமைச்சரின் ராஜினாமாவைக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அடுத்த கட்டமாக நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி, மத்திய அரசிடம் அறிக்கையாக அளிக்கவும் முடிவு செய்து உள்ளனர்.

- கவின்மலர்

படங்கள்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு