Published:Updated:

உ.பி-யில் 10 மணி நேரத்துக்குப் பிறகு ஐஎஸ் தீவிரவாதி சுட்டுக்கொலை!

Vikatan Correspondent
உ.பி-யில் 10 மணி நேரத்துக்குப் பிறகு ஐஎஸ் தீவிரவாதி சுட்டுக்கொலை!
உ.பி-யில் 10 மணி நேரத்துக்குப் பிறகு ஐஎஸ் தீவிரவாதி சுட்டுக்கொலை!
உ.பி-யில் 10 மணி நேரத்துக்குப் பிறகு ஐஎஸ் தீவிரவாதி சுட்டுக்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள தாகூர்கஞ்ச் குடியிருப்புப் பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியை, சுமார் 10 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து உத்தரப்பிரதேச கூடுதல் காவல்துறைத் தலைவர் தல்ஜீத் சௌத்ரி கூறுகையில், 'நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன' என்றார்.

தீவிரவாதத் தடுப்பு அமைப்பின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கூறுகையில், 'ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி தாகூர்கஞ்ச் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறையிடம் இருந்து வந்த தகவலை அடுத்து, இந்த நடவடிகை மேற்கொள்ளப்பட்டது' என்றார்.

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி, மத்தியப் பிரதேசத்தில் நேற்று நடந்த ரயில் கவிழ்ப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்' என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.