Published:Updated:

சுர்ர்ர்ர்ர்ர்ர்ருனு ஏறுது!

டாஸ்மாக் திடுக்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ந்த ஒரு பொருளுக்கும் விலை உயர்வை அமல்படுத்தும்போது, அரசு முன்கூட்டியே அறிவிப்பு செய்வது வழக்கம். ஆனால், இதுவரை இல்லாத புதுமை டாஸ்மாக் சரக்கு விலை உயர்வில் நடந்துள்ளது. ஆம், மது பானங்களின் விலை உயர்வை திடுதிடுவென்று போன் வழியாக அமல்படுத்தி, ஊழியர்களுக்கும் 'குடி’மகன்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது அ.தி.மு.க. அரசு. 

கடந்த 11-ம் தேதியன்று மதியம் 3 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை ஊழியர் களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. குவாட்டர் பாட்டிலுக்கு

சுர்ர்ர்ர்ர்ர்ர்ருனு ஏறுது!

5, ஆஃப் பாட்டிலுக்கு  

சுர்ர்ர்ர்ர்ர்ர்ருனு ஏறுது!

10, ஃபுல் பாட்டி லுக்கு  

சுர்ர்ர்ர்ர்ர்ர்ருனு ஏறுது!

20, பீருக்கு  

சுர்ர்ர்ர்ர்ர்ர்ருனு ஏறுது!

5 என விலை உயர்த்தி விற்க உத்தரவு வந்துள்ளது. அப்போது, 'காலை 10 மணியில் இருந்து விற்பனையான சரக்குகளுக்கும் சேர்த்து, இந்தக் கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டும்.

சுர்ர்ர்ர்ர்ர்ர்ருனு ஏறுது!

இல்லையெனில், பணி விடுவிப்பு செய்யப்படுவீர்கள்’ என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வேறு வழி இல்லாமல் பற்றாக்குறைத் தொகையை அங்கும் இங்கும் புரட்டிக் கட்டினார்கள். இதற்கிடையே, திடீர் விலை உயர்வால் 'குடி’மகன்களும் கடை ஊழியர்களும் ஆங்காங்கே மல்லுக்கட்டியது தனிக் கதை!

இது குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி) மாநிலத் தலைவர் சவுந்திரபாண்டி

சுர்ர்ர்ர்ர்ர்ர்ருனு ஏறுது!

யனிடம் பேசி னோம். ''தமிழகத் தில் 75 லட்சம் பேர் தினமும் மது குடிப்பவர்களாக இருக்கிறார்கள். இதில், 80 சதவிகிதம் பேர் நடுத்தர வகுப்பு மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள். அதுவும் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்கள், தங்களது தினசரி வருமானத்தின் 90 சதவிகிதத்தை மதுவில்தான் இழக்கிறார்கள். இந்த விலை ஏற்றம்தான் ஏழைகளுக்கு நல்லது செய்வது என்பதா?

இந்த விலை ஏற்றத்திலும் அநியாயக் கணக்கு. ஒரு பீருக்கு  

சுர்ர்ர்ர்ர்ர்ர்ருனு ஏறுது!

5 விலை ஏற்றம் என்கிறது அரசு. ஆனால் எங்களி டம் மில்லி லிட்டர் கணக்கில் கூடுதல் பணம் கட்டச் சொல்கிறார்கள். இந்த விலை ஏற்றம், குடி மக்களுக்கு சுமை, அதைவிட சுமை டாஸ்மாக் ஊழியர்களுக்கு! இது ஒரு பக்கம் இருக்க... மதியம் 3 மணிக்கு மேல் விலை உயர்வை அறிவித்துவிட்டு, காலையில் இருந்தே விற்றதற்கு பணத்தை கட்டச் சொல்கிறார்கள். இல்லை எனில், பணி நீக்கம் அல்லது இரண்டு மடங்குத் தொகை அபராதம் என்று மிரட்டுகிறார்கள். எங்கள் சங்கம் சார்பில் டாஸ்மாக் அதிகாரிகளிடம் காட்டமாகப் பேசிய பிறகுதான், மதியம் 12.30 மணிக்கு மேல் விற்ற சரக்குகளுக்குப் பணம் கட்டினால் போதும் என்று இறங்கி வந்துள்ளார்கள்...'' என்றார்.

    - டி.எல்.சஞ்சீவிகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு