Published:Updated:

`10 ஆண்டுகளில் 84 காவல்நிலைய மரணங்கள்; அதிகபட்சமாக 2018-ல் 18" - டிஜிபி சைலேந்திரபாபு

டிஜிபி சைலேந்திரபாபு

தமிழ்நாடு காவல்துறை சிறைகளில் ஏற்படும் மரணங்கள் குறித்து, டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.

`10 ஆண்டுகளில் 84 காவல்நிலைய மரணங்கள்; அதிகபட்சமாக 2018-ல் 18" - டிஜிபி சைலேந்திரபாபு

தமிழ்நாடு காவல்துறை சிறைகளில் ஏற்படும் மரணங்கள் குறித்து, டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.

Published:Updated:
டிஜிபி சைலேந்திரபாபு

காவல்நிலையங்களில் மரணம் ஏற்படாத சூழல் ஏற்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தமிழ்நாடு காவல்துறை மற்றும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு சேர்ந்து கருத்தரங்கம் நடத்தியது. மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராஜர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உட்பட பல்வேறு காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

டிஜிபி சைலேந்திரபாபு
டிஜிபி சைலேந்திரபாபு

இந்த நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, ``காவல்துறை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே காவல்துறை துன்புறுத்தல் புகார்கள் இருந்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 950 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை 84 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 2018-ம் ஆண்டு மட்டும் 18 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுதான் அதிகபட்சம். 2021-ம் ஆண்டு நான்கு பேரும், 2022-ல் இரண்டு பேரும் இறந்துள்ளார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாட்டில் காவல்நிலையத்தில் மரணங்கள் நடக்கவே கூடாது என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தவறு எதுவும் செய்யாமலேயே சில சமயத்தில் காவலர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 80 மரணங்களில் 12 வழக்குகளில் மட்டுமே காவல்துறையினரின் மீது குற்றம் இருப்பதாக சி.பி.சி.ஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில் சம்பந்தப்பட்ட 48 அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் உடல்நலக் குறைவு காரணமாகவும், தற்கொலை செய்துகொள்பவர்களும் இருக்கிறார்கள். அதற்கும் காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தப்படும்.

கருத்தரங்கம்
கருத்தரங்கம்

காவலர்கள் உளவியல், அறிவியல் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருசிலர் தற்கொலை எண்ணத்தில் இருப்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். காவல்நிலையத்தில் குற்றவாளியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நிகழ்கிறது. அதுவும் நடக்காமல் இருக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை பாரம்பரியம் மிக்கது. சட்டத்துக்கும், மனசாட்சிக்கும் உட்பட்டுக் காவல் கோட்பாடுகளுக்கு உட்பட்டு காவல்துறை செயல்படவேண்டும்" என்று பேசியிருந்தார்.