Published:Updated:

டி.எஸ்.பி-யைத் தொடர்ந்து சிக்குகிறாரா ஐ.ஜி.?

திருப்பூர்

பிரீமியம் ஸ்டோரி
##~##

திருப்பூரைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்ட 'பாசி ஃபோரெக்ஸ்’ நிதி நிறுவனத்தில் சுமார்

டி.எஸ்.பி-யைத் தொடர்ந்து சிக்குகிறாரா ஐ.ஜி.?

500 கோடி மோசடி நடந்துள்ளதாகக் கடந்த 2008-ம் ஆண்டு புகார் எழுந்தது. 

அந்த நிறுவனத்துக்கு தமிழ்நாடு முழுவதும் பரவ லாகக் கிளைகள் இருந்ததால், அந்தந்த மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாரே பாசி மோசடிப் புகாரை வாங்கிக்கொள்ளும்படி அறிவுறுத் தப்பட்டது. இந்த வழக்கைக் கையில் எடுத்த திருப்பூர் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார், நிறுவனத்தின் இயக்குனர்களான கதிரவன், மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி ஆகியோரை விசாரித்தனர்.

இந்த நிலையில், அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்த கமலவள்ளி, 'திருப்பூர் கிரைம் பிராஞ்ச் போலீஸ்காரங்க என்னைக் கடத் திட்டுப் போய் மிரட்டி னாங்க.

டி.எஸ்.பி-யைத் தொடர்ந்து சிக்குகிறாரா ஐ.ஜி.?

2 கோடியே 95 லட்சத்தைப் பிடுங்கிட்டாங்க...’ என்று கண்ணீர் விட்டார். அதை அடுத்து போலீஸார் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம். விசா ரணைக்குப் பிறகு திருப்பூர் மத்தியக் குற்றப் பிரிவு டி.எஸ்.பி-யான ராஜேந்திரன், இன்ஸ் பெக்டர்கள் சண் முகையா, மோகன்ராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சில நாட்களிலேயே இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டார். பாசி இயக்குனர்கள் மூன்று பேரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர்கள் தலைமறைவானார்கள். 'பாசி வழக்கில் செல்வாக்கான நபர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர், அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்கள் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்’ என்று பல மட்டங்களில் இருந்து கோரிக்கை எழுந்ததால், சி.பி.ஐ-யின் கைகளுக்குள் வந்தது பாசி.

டி.எஸ்.பி-யைத் தொடர்ந்து சிக்குகிறாரா ஐ.ஜி.?

இப்போது தமிழகத்தில் ஆட்சி மாறி இருப்பதால், பாசி விசாரணையும் எக்ஸ்பிரஸ் வேகத்தில்

டி.எஸ்.பி-யைத் தொடர்ந்து சிக்குகிறாரா ஐ.ஜி.?

ஆரம்பித்திருக்கிறது. இதன் விளைவால், தலைமறைவாக இருந்த கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி. ராஜேந்திரனை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது. கோவையில் முகாமிட்டு இருக்கும் சி.பி.ஐ-யின் மூவ்கள் குறித்து அவர்களுக்கு வழக்கில் உதவி வரும் மாநகர உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம், ''கமலவள்ளி கொடுத்த ரகசிய வாக்குமூலத்தின்படி, இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி. தூக்கப் பட்டது சாதாரண விஷயம்தான். இதில் எஸ்.பி., ஐ.ஜி-யின் பெயர்களும் அடிபடுவதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். கமலவள்ளி கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் காலத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி-யாக இருந்தவர் பிரமோத் குமார். இவர் மீதும் அந்தப் பெண், வலுவான சில புகார்களைச் சொல்லி இருந்தாங்க. சி.பி.ஐ. இந்த விஷயத்தை அப்போதே கவனித்தும், பிரமோத் குமாருக்கு எதிரான ஆதாரங்களைத் துல்லியமாகத் திரட்டுவதில் குறியா இருந்தாங்க. கமலவள்ளியைக் கடத்தி, 'இந்த வழக்கை எங்க ரீதியில் கையாண்டால்,

டி.எஸ்.பி-யைத் தொடர்ந்து சிக்குகிறாரா ஐ.ஜி.?

உங்க நிறுவனத்துக்குப் பெரிய பிரச்னை வராமல் காப்பாத்துறோம். பதிலுக்கு எங்களுக்கு இவ்வளவு பணம் கொடுத்துடு’ என்று சொல்லி

டி.எஸ்.பி-யைத் தொடர்ந்து சிக்குகிறாரா ஐ.ஜி.?

20 கோடி கேட்டு இருக்காங்க. முதல் கட்டமா, சுமார்

டி.எஸ்.பி-யைத் தொடர்ந்து சிக்குகிறாரா ஐ.ஜி.?

3 கோடியை வாங்கி இருக்காங்க. பணத்தை வாங்கிய பிறகும்கூட கமலவள்ளிக்கு சாதகமா ஒரு மூவ்கூட எடுக்காத அப்போதைய கிரைம் பிராஞ்ச் டீம், மீதிப் பணத்தையும் செட்டில் பண்ணச் சொல்லி பல விதமா டார்ச்சர் கொடுத்தது. ஒரு பக்கம் முதலீட்டாளர்கள், மறு பக்கம் போலீஸ்னு நடுவில் மாட்டித் தவித்த கமலவள்ளி, ஒரு கட்டத்தில் டென்ஷனாகி, கிரைம் பிராஞ்ச் போலீஸ் குழு பத்தி வாக்குமூலம் கொடுத்தாங்க. இதைத் துருவி எடுத்த சி.பி.ஐ-க்கு, போலீஸ் ஐ.ஜி-யான பிரமோத் குமார், இந்த மிரட்டல் விவகாரத்தில் நேரடியாவே சம்பந்தப்பட்டதற்கான ஆதாரம் கிடைச்சதாத் தெரியுது.  கூடவே, அப்போ திருப்பூர் மாவட்ட எஸ்.பி-யா இருந்த சாந்தியையும் விசாரணைக்கு இழுக்க முடிவு பண்ணி இருக்கு சி.பி.ஐ. இதை எல்லாம் தாண்டி, கமலவள்ளியை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி பண்ணிய விவகாரத்தில், மாஜி அமைச்சர் ஒருத்தர் பெயரையும் சி.பி.ஐ. முணுமுணுக்கிறது!'' என்றார்.

இப்போது ஆயுதப் படை ஐ.ஜி. ஆக இருக்கும் பிரமோத் குமார், மத்திய அமைச் சரவை புரோட்டோகாலில் பிரதமருக்கு அடுத்த நிலையில் இருக்கும் மனிதருக்கு மிக மிக நெருங்கிய மனிதராம். . அதுதான் சி.பி.ஐ-யின் கவலை. ''நான் அங்கு பணியாற்றியபோது நடந்த மோசடி விவகாரத்தில் சில போலீஸ் காரர்கள் தப்பு பண்ணியதற்கு, நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? டீச்சர் தப்புப் பண்ணினா, ஹெட்மாஸ்டரையும் சேர்த்து அரெஸ்ட் பண்ணுவாங்களா?'' என்று தன் தரப்பை நியாயப்படுத்துகிறாராம் பிரமோத்.

கடத்தல், மிரட்டல், பணம் பறிப்பு ஆகிய வற்றைத் தாண்டி 'செக்ஸ் டார்ச்சர்’ என்ற கூடுதல் குற்றச்சாட்டையும் லேட்டஸ்டாக சி.பி.ஐ. அண்டர்லைன் செய்திருப்பதால் இந்த விவகாரம் மினி சுனாமியைக் கிளப்பி இருக்கிறது!

- எஸ்.ஷக்தி

படங்கள்: 'ப்ரீத்தி, கார்த்திக். வி.ராஜேஷ், தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு