Published:Updated:

'தற்கொலை முயற்சி குற்றமல்ல!' புதிய மசோதா தாக்கல்

ராகினி ஆத்ம வெண்டி மு.
'தற்கொலை முயற்சி குற்றமல்ல!' புதிய மசோதா தாக்கல்
'தற்கொலை முயற்சி குற்றமல்ல!' புதிய மசோதா தாக்கல்

'மனநல ஆரோக்கிய மசோதா 2016' அறிக்கையின்படி, மனநலம் பாதித்தோருக்கு முறையான சிகிச்சையும், தற்கொலை முயற்சிக்கு குற்றவிலக்கும் அளிப்பதற்கான மசோதா, மக்களவையில் தாக்கல்செய்யப்பட்டது.

'தற்கொலை முயற்சி குற்றமல்ல!' புதிய மசோதா தாக்கல்

2016-ம் ஆண்டு, ’மனநல ஆரோக்கிய மசோதா’ மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, தற்போது மக்களவையில் தாக்கலானது. இதைத் தொடர்ந்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ''இந்தச் சட்டத்தின்படி, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மனநல சிறப்பு சிகிச்சைகள் அரசின் நிதியில் மேற்கொள்ளப்படும். மனநலம் பாதித்தோர் தற்கொலை முயற்சி செய்தால், சட்டப்படி தண்டிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு மன அழுத்தம் உள்ளது என்பதால், இது சட்டப்படி குற்றமாகாது.

தேசிய அளவிலும் மாநில அளவிலும் மனநல ஆரோக்கிய மையம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தனிநபரின் மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்க, அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தற்கொலை எண்ணங்கள் தொடர்ந்து ஏற்படாமல் இருப்பதற்கான முயற்சியாகவும் மனநல ஆரோக்கியம் பேணவும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்