Published:Updated:

தீவிரவாதி சுட்டுக்கொலை! முடிவுக்கு வந்தது புட்கம் என்கவுன்டர்!

தீவிரவாதி சுட்டுக்கொலை!  முடிவுக்கு வந்தது புட்கம் என்கவுன்டர்!
தீவிரவாதி சுட்டுக்கொலை! முடிவுக்கு வந்தது புட்கம் என்கவுன்டர்!

ஜம்மு-காஷ்மீர், புட்கம் மாவட்டத்தின் சதுரா பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கிச்சூட்டில்,  ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளார். 

தீவிரவாதி சுட்டுக்கொலை!  முடிவுக்கு வந்தது புட்கம் என்கவுன்டர்!


 

பட்காம் மாவட்டத்தில் உள்ள சதுரா பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நள்ளிரவில் அப்பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தனர். அதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள வீட்டை தீவிரவாதிகள் கைப்பற்றி, அங்கு பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர் பாதுகாப்புப் படையினர்.

பின்னர், நள்ளிரவில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டை இன்று மதியம் வரை தொடர்ந்தது. முடிவில், பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படையினர் சிலர், காயம் அடைந்துள்ளனர். என்கவுன்டர் முடிந்துவிட்டதாகவும், அப்பகுதியில் தற்போது தீவிரவாதிகள் இல்லை, எனவே பதற்றம் தேவையில்லை என்றும் ராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.