Published:Updated:

இந்தியாவில் ஆண்டுக்கு 12,000 விவசாயிகள் தற்கொலை - மத்திய அரசு

குருபிரசாத்
இந்தியாவில் ஆண்டுக்கு 12,000 விவசாயிகள் தற்கொலை - மத்திய அரசு
இந்தியாவில் ஆண்டுக்கு 12,000 விவசாயிகள் தற்கொலை - மத்திய அரசு

விவசாயிகள் தற்கொலை தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தன்னார்வ அமைப்பு தாக்கல்செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.
 

இந்தியாவில் ஆண்டுக்கு 12,000 விவசாயிகள் தற்கொலை - மத்திய அரசு


அப்போது, விவசாயிகள் தற்கொலை தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்று  நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு மத்திய அரசு, 'விவசாயிகள் மரணத்துக்குத் தீர்வு காண, நிதி ஆயோக்கிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என்று பதில் அளித்தது. அதற்கு உச்சநீதிமன்றம், 'எத்தனை பணியைத்தான் நிதி ஆயோக்கிடம் வழங்குவீர்கள்? என்று கேள்வி எழுப்பியது.


தொடர்ந்து வாதம்செய்த மத்திய அரசு, 'ஏழை விவசாயிகளின் பிரச்னைகளைக் கேட்டறிந்து வருகிறோம். 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த 2015-ம் ஆண்டு, நாடு முழுவதும் 12,602 விவசாயிகள் தற்கொலைசெய்துகொண்டனர்.


அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில் 4,291 விவசாயிகள், கர்நாடகாவில் 1,569 விவசாயிகள், தெலங்கானாவில் 1,400 விவசாயிகள், மத்தியப்பிரதேசத்தில் 1,290 விவசாயிகள், தமிழகத்தில்  606 விவசாயிகள் தற்கொலைசெய்துள்ளனர். குறிப்பாக, கடந்த 2013-ம் ஆண்டு முதலே இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 12,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.' என்று கூறியது.

நன்றி: Times of India