'நூலகம் இல்லாத ஊரை நான் ஊராகவே ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்கிறார் லெனின். ஆனால், தமிழகத்தின் பொது நூலகங்கள், நூலகம் என்ற பெயரில் பழைய காகிதங்களை அடைத்துவைக்கும் குப்பைக் கிடங்குகளாக மாறிக்கொண்டிருப்பதுதான் வேதனை.

''பொது நூலகங்கள் வந்த பிறகுதான் தமிழகத்தில் வாசிப்பு அதிகரித்தது. இந்த நூலகங்களுக்குத் தமிழகத்தின் அனைத்துப் பதிப்பகங்களிடம் இருந்தும் தரமான புத்தகங்கள் பொது நூலகத் துறை சார்பில் வாங்கப்படும். எந்தெந்த தலைப்பிலான புத்தகங்களை வாங்கலாம் என்பதை பொது நூலகத் துறை சார்பில் அமைக்கப்பட்ட தேர்வுக்குழு முடிவுசெய்யும். பொது நூலகத் துறையின் இந்தத் திட்டத்தால், மொத்தமாகப் புத்தகங்கள் விற்பனையாவதால் கொள்முதல் பட்டியலில் இடம்பெற பதிப்பாளர்களுக்குள் போட்டி நிலவுகிறது.

''இந்த வாய்ப்பைப் தவறாகப் பயன்படுத்த நினைக்கும் நூலகத் துறை அதிகாரிகள், ஒவ்வொரு பதிப்பக உரிமையாளரிடமும் அவர்களுடைய புத்தகத்தைக் கொள்முதல் செய்ய வேண்டுமானால், தனக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். அதற்காக சில புரோக்கர்கள் அலைகின்றனர்'' - புலம்பினார் ஒரு பதிப்பக உரிமையாளர்.

அவரே தொடர்ந்து, ''கமிஷன் கொடுக்க சம்மதிக்கும் பதிப்பகங்களின் புத்தகங்களை மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். பதிப்பாளர்களைப் பொது நூலகத் துறை ஒரு பக்கம் வதைக்கிறது என்றால், பதிப்புத் தொழிலில் பெரும் முதலைகளாக உள்ள சிலர் வேறு வேறு பெயர்களில் விண்ணப்பித்து ஒரே புத்தகத்தைப் பொது நூலகத் துறைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களை ஏறத்தாழ அனைத்துப் பதிப்பகங்களும் வெளியிடுகின்றன. அவற்றை அனைத்துப் பதிப்பகங்களில் இருந்தும் பொது நூலகத் துறை கொள்முதல் செய்கிறது. நூலகங்களுக்கு அரசாங்கம் ஒதுக்கிய நிதி, ஒரே புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாங்கி விரயமாக்குகிறது'' என்றார்.

இதுகுறித்து கிரியா பதிப்பகத்தின் உரிமையாளர் ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். ''பதிப்பாளர்கள் நூறு ரூபாய் பணம் செலுத்தி, புத்தகங்களைத் தேர்வுக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பிவைக்கிறோம். ஆனால், அந்தப் புத்தகம் நூலகங்களுக்குத் தேர்வாகி உள்ளதா, இல்லையா என்ற அடிப்படை விவரங்களைக்கூட எங்களுக்குச் சொல்வது இல்லை. தேர்வுக்குழு தேர்வுசெய்த புத்தகங்களைத்தான்

பொது நூலகத் துறை இயக்குனர் வாங்குகிறாரா... அல்லது, அவர் இஷ்டத்துக்கு வாங்குகிறாரா என்பதும் புரியாத புதிராகவே உள்ளது. அச்சு செலவை வைத்து புத்தகத்தை மதிப்பிடக் கூடாது என்று நான் 1975-ம் ஆண்டில் இருந்தே சொல்லி வருகிறேன். இன்று வரை அதற்குத் தீர்வு ஏற்படவில்லை'' என்றார்.

உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் மனுஷ்யபுத்திரனிடம் பேசினோம்.

''கடந்த நான்கு வருடங்களாக உயிர்மை பதிப்பகத்தின் ஒரு புத்தகத்தைக்கூட பொது நூலகத் துறை தேர்வு செய்யவில்லை. அறிவுச் சொத்தாக விளங்கும் புத்தகங்களில் பாரபட்சம் காட்டுவதால், நல்ல தரமான படைப்புகள் வாசகர்களை சென்றடைவது இல்லை'' என்றார்.

பாரதி புத்தகாலயம் நாகராஜன், ''விண்ணப்பித்துள்ள புத்தகங்கள் மற்றும் பதிப்பகங்களின் பட்டியல் தெளிவாக வெளியிடப்பட வேண்டும். தேர்வு செய்யப்படாத தலைப்புகளுக்கான காரணங்களைச் சொல்ல வேண்டும். அந்தத் தலைப்புகளுக்கு மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும். அரசின் நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதும் வெளிப்படையாகச் சொல்லப்பட வேண்டும். அதுதான் தீர்வு'' என்றார்.

இதுபற்றி பொது நூலகத் துறை இயக்குனர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனித்துக்கொள்ளும் ராமேஸ்வரம் முருகனிடம் பேசினோம். ''தேர்வுக்குழு பரிந்துரையின் அடிப்படையில்தான் நூல்கள் வாங்கப்படுகின்றன. நான் வெளியூரில் இருப்பதால், பிறகு விளக்கமாகப் பேசுகிறேன்'' என்று துண்டித்தார்.

அறம் பேசும் புத்தக விவகாரங்களிலுமா அற மீறல்கள்?!

- ஜோ.ஸ்டாலின்

தமிழின் விலை குறைவு!

பொது நூலகத் துறை சார்பில் கொள்முதல் செய்யப்படும் தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் பாரபட்சம் உள்ளது.

பொது நூலகத் துறை விலை நிர்ணயம் செய்யும்போது, 16 பக்கங்களுக்கு ஐந்து ரூபாய் 43 பைசா என்று விலை வைக்கிறது. இதன்படி 160 பக்கம் கொண்ட புத்தகத்தைப் பொது நூலகத் துறை 54 ரூபாய்க்கு வாங்கிவிடுகிறது. ஆனால், மார்க்கெட் விலை 120 ரூபாய். ஆனால், ஆங்கிலப் புத்தகத்துக்கு இந்த வரையறை கிடையாது. அது எந்த சைஸ் புத்தகமாக இருந்தாலும் சரி, எத்தனை பக்கங்கள் கொண்டதாக இருந்தாலும் சரி, அதன் மார்க்கெட் விலையில் 25 சதவிகிதத்தை தள்ளுபடி செய்துவிட்டு, பொது நூலகத் துறை கொள்முதல் செய்கிறது. இதனால், மார்க்கெட்டில் 120 ரூபாய்க்கு விற்கப்படும் 160 பக்கம் கொண்ட ஆங்கிலப் புத்தகத்தை நூலகத் துறை 90¢ ரூபாய்க்கு வாங்குகிறது.

தமிழுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை?