கடந்த 11-ம் தேதி... முசிறி அருகேயுள்ள கோட்டூர், ஆமூர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 'கடந்த 4-ம் தேதியில் இருந்து கோட்டூர் மணல் குவாரி பக்கம் மாடு மேய்க்கச் சென்ற தமிழ்ச்செல்வியைக் காணவில்லை. இதைப்போல் சில மாதங்களுக்கு முன்னர், அந்த குவாரி பக்கம் போன பாஞ்சாம் பட்டியைச் சேர்ந்த ரெங்கசாமி மனைவி சித்ரா, ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரஞ்சிதா ஆகியோரும் என்ன ஆனார்கள் எனறே தெரியவில்லை’ என்று கலெக்டர் ஜெயஸ்ரீ முரளி தரனிடம் கதறினர். மறுநாள் காலை... முக்கொம்பு காவிரி ஆறு அருகே உள்ள புதரில், உடல் சிதைந்த நிலையில் தமிழ்ச்செல்வி பிணமாக மிதக்க... அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தமிழ்ச்செல்வியின் கணவர் ரவிச்சந்திரன், ''எங்க ஊரில் உள்ள மாடுகளை காவிரி ஆற்றுப்படுகையில் மேய்ச்சலுக்கு விடுவதும், மாலையில் அவற்றை வீட்டுக்கு ஓட்டி வருவதும் வழக்கம். அப்படித்தான் கடந்த 4-ம் தேதி சாயங்காலம், மேய்ச்சலுக்குப் போன மாடுகளைப் பிடிக்க தமிழ்ச்செல்வி போனுச்சு. போனவ, ராத்திரி ஏழரை மணி ஆகியும் வரவே இல்லை. பதறிப்போன நாங்க, அன்னைக்கு ராத்திரி முழுக்க ஆறெல்லாம் தேடினோம். கிடைக்கவே இல்ல. ஆனால், மணல் குவாரிக்குப் பக்கத்துல அவளோட செருப்பு மட்டும் கிடைச்சது. பிறகுதான் வாத்தலை போலீஸில் புகார் கொடுத்தோம். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீஸ்காரங்களும் தீயணைப்புத் துறை வீரர்களும் ஆற்றில் இருக்கும் ஷட்டரை மூடிட்டு, ஆற்றில் இறங்கித் தேடினாங்க. மூணு நாளா தேடியும், தமிழ்ச்செல்வி கிடைக்கல. தமிழ்ச்செல்வி தண்ணியில மூழ்கி இறந்திருக்க வாய்ப்பே இல்லைன்னு போலீஸ்காரங்க சொன்னாங்க. பிறகு, குவாரிக்காரங்க மேல சந்தேகப்பட்டு, குவாரியை முற்றுகையிட்டோம். அங்கு வந்த முசிறி தாசில்தார் மலர்கொடி தலைமையிலான அதிகாரிங்க, பேச்சுவார்த்தை நடத்தினாங்க. அப்ப, 'குவாரியில தினமும் ஆயிரம் லாரிகள் வருதுபோகுது. அவங்களை எல்லாம் எப்படி எங்களால் விசாரிக்க முடியும்’னு எங்களிடமே எதிர்க்கேள்வி கேட்டாங்க. ஒரு கட்டத்துல எங்களையே மிரட்ட ஆரம்பிக்கவும், திருச்சி கலெக்டரைச் சந்திச்சு புகார் கொடுத்தோம். அதுக்கு அடுத்த நாள், தமிழ்ச்செல்வியை பிணமாத்தான் பார்த்தோம்.

அவளோட உடம்பில் அங்கங்க தீக்காயங்கள் இருந்துச்சு. தலையில் முடியே இல்ல. எட்டு நாள் தண்ணியிலேயே கிடந்தா... உடம்பு ஊதிப் போய், சிதைஞ்சிருக்கும். அப்படி எதுவும் இல்லை. ஆனா, தமிழ்ச்செல்வி தண்ணியில மூழ்கி இறந்ததா சொல்லி, வழக்கை போலீஸ் முடிக்கப் பார்க்குது. காவிரி

ஆத்துல ஷட்டர் மூடிட்டா... சொட்டு தண்ணிகூட அந்தப் பக்கம் போகாது. ஆனா, அவளோட உடல் ஷட்டருக்கு அந்தப் பக்கம் திடீர்னு கிடந்ததுதான் சந்தேகமா இருக்கு'' என்று கதறினார்.

ரவிச்சந்திரனின் தம்பி மனைவி பிரியா, ''அக்காவைப் போல் கடந்த சில மாதங்களுக்கு முன், அந்த குவாரி பக்கம் போன பாஞ்சாம்பட்டி சித்ராவும், ஆமூர் ரஞ்சிதாவும் என்ன ஆனாங்கன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியல. கலெக்டர்கிட்ட புகார் கொடுத்தப்ப, 'கோட்டூர் குவாரியை மூட உத்தரவு போட்டு ஆறு மாசம் ஆகுது. இன்னமுமா குவாரி இயங்குது?’னு கேட்டார். பிறகு, ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டார். எங்க ஊர்க்காரங்களுக்கும் குவாரி காரர்களுக்கும் ஏற்கெனவே குவாரி நடத்துறதுல தகராறு இருந்துச்சு. அவங்கதான் அக்காவை ஏதாவது பண்ணியிருக்கணும். அதிகாரிகளும் காவல்

துறையும் குவாரிகாரங்களுக்கு சாதகமா நடக்குறாங்க. அதனால்தான், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாத்தணும்னு கோரிக்கை வைக்கிறோம்'' என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன், ''திருச்சி மாவட்டத்தில் மட்டும் அங்கீகாரம் பெறாத மணல் குவாரிகள் ஏழு இருக்கு. இந்த குவாரிகளில் உச்ச நீதிமன்றம் மணல் அள்ள விதித்துள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவது இல்லை. பொக்லைன் உள்ளிட்ட கனரக இயந்திரத்தின் மூலம் 24 மணி நேரமும் மணல் அள்ளப்படுகிறது. இதையெல்லாம் தடுக்க வேண்டிய அதிகாரிகள், கண்டுகொள்வதே இல்லை. மணல் அள்ளுவதால் ஏற்படும் பெரிய பெரிய குழிகளில் சிக்கி, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த குவாரிகளால் நிலத்தடி நீரும் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது'' என்றார் காட்டமாக.

இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி. ராஜேஸ்வரியிடம் கேட்டதற்கு, ''எங்களின் முதற்கட்ட விசாரணையில் தமிழ்ச்செல்வி தண்ணீரில் மூழ்கி இறந்ததாகத் தெரிகிறது. மற்ற இரு பெண்களும் குவாரியில் வேலை செய்தவர்களோடு ஓடிப்போயிருப்பது தெரிய வந்திருக்கிறது. அந்த மணல் குவாரி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ளது. நாங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் வழக்கை நடத்தி வருகிறோம் என்பதே உண்மை'' என்றார்.

அனைத்து அதிகாரிகளும் அப்படி நடந்தால் பிரச்னை இல்லையே!

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்