Published:Updated:

மும்பை: சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை! - மருத்துவர், 7 பெண்கள் உட்பட 9 பேர் கைது

மருத்துவமனையில் குழந்தைகள்
மருத்துவமனையில் குழந்தைகள்

இந்தக் கும்பல் ஏழு குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்திருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவர்களில் ஆறு குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அரசுக் குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பது வழக்கம். முறைப்படி குழந்தைகளைத் தத்தெடுக்க வேண்டுமானால் அதற்கு அதிகப்படியான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இதனால், சிலர் குழந்தைகளைச் சட்டவிரோதாக தத்தெடுத்துவிடுகின்றனர். இதற்காகவே சில ஏஜென்ட்டுகளும் வேலை செய்துவருகின்றனர்.

குழந்தை
குழந்தை

பொருளாதாரரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளை அடையாளம் கண்டு, அந்தக் குழந்தைகளைத் தத்துக் கொடுத்துவிடலாம் என்றும், இதன் மூலம் பணமும் கிடைக்கும் என்றும் குழந்தையின் தாயிடம் பேசி சம்மதிக்க வைத்துவிடுகின்றனர். இதற்காக, மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் சில ஊழியர்கள் ஏஜென்ட்டுகளாகப் பணியாற்றுகின்றனர்.

சமீபத்தில் மும்பை பாந்த்ரா பகுதியில் சட்டவிரோதமாக குழந்தை ஒன்று விற்பனை செய்யப்படுவதாக சப் இன்ஸ்பெக்டர் யோகேஷ் சவானுக்குத் தகவல் கிடைத்தது. உடனே அவரும் மணீஷா பவாரும் இது குறித்து ரகசியமாக விசாரித்தனர். இதில் குழந்தையை விற்பனை செய்த பெண் ருக்‌ஷர் ஷேக் என்று தெரியவந்தது. இந்தப் பெண் தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளைச் சட்டவிரோதமாக ரூபாலி வர்மா என்ற பெண் மூலம் ஒரு பெண் குழந்தையை 60 ஆயிரம் ரூபாய்க்கும், ஆண் குழந்தையை 1.50 லட்சத்துக்கும் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஷேக், ஜோகில்கர், ரூபாலி வர்மா ஆகிய மூன்று பேரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையில் ஜோகில்கர் தனது ஒரு குழந்தையை ரூ.1.50 லட்சத்துக்கு புனே தம்பதிக்கும், மற்றோர் ஆண் குழந்தையை தாராவியிலுள்ள தம்பதிக்கு ரூ.60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்திருந்தார். உடனே, குழந்தையின் தாயை அழைத்துக்கொண்டு தாராவிக்குச் சென்ற போலீஸார் குழந்தையை மீட்டனர். குழந்தையை விலைக்கு வாங்கிய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய ஆர்த்தி சிங், நிஷா அஹிரே, ஹீனாகான், ஜீதாஞ்சலி கெய்க்வாட், சஞ்சம் பதம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ஆர்த்தி, லேப் டெக்னீஷியனாகப் பணியாற்றுகிறார். ரூபாலி வர்மா, ஹீனா கான், நிஷா ஆகியோர் ஏஜென்ட்டாகப் பணியாற்றியிருப்பதோடு வாடகைத்தாய் மையத்திலும் பணியாற்றியிருக்கிறார்கள். வாடகைத்தாய் கேட்டு வரும் தம்பதிகளைக் குறிவைத்து இவர்கள் தங்களது வேலையைக் காட்டியிருக்கிறார்கள்...

மருத்துவமனையில் குழந்தைகள்
மருத்துவமனையில் குழந்தைகள்

இந்தக் கும்பல் ஏழு குழந்தைகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்திருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவர்களில் ஆறு குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அரசுக் குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகப்படியான குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படும் போலீஸார் இதற்காகக் கைதுசெய்யப்பட்டவர்களின் போனை பறிமுதல் செய்து அவர்களின் வாட்ஸ்அப் பதிவுகளையும், போன் கால் விவரங்களையும் ஆய்வு செய்துவருகின்றனர். இந்த மோசடியில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திவரும் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. ஒர்லியில் கிளினிக் நடத்திவரும் டாக்டர் தனஞ்சே என்பவரும் குழந்தை விற்பனை தொடர்பாக பிடிபட்டிருக்கிறார். இவர் குழந்தை விற்பனைக்காக கமிஷனாக 30 ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்கிறார். மொத்தம் கைது செய்யப்பட்டிருக்கும் ஒன்பது பேரில் ஏழு பேர் பெண்கள். ``மும்பையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இது போன்று சட்டவிரோத குழந்தை விற்பனை பிடிபடுவது, இது மூன்றாவது முறை’’ என்று போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு