Published:Updated:

ஜம்மு-காஷ்மீரில் எட்டு தீவிரவாதிகள் சுட்டு கொலை!

அஸ்வினி.சி
ஜம்மு-காஷ்மீரில் எட்டு தீவிரவாதிகள் சுட்டு கொலை!
ஜம்மு-காஷ்மீரில் எட்டு தீவிரவாதிகள் சுட்டு கொலை!

ஜம்மு-காஷ்மீரின் ராம்பூர் பகுதியில் இன்று காலை தீவிரவாதிகள் நான்கு பேர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் எட்டு தீவிரவாதிகள் சுட்டு கொலை!


 

எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப்படையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். இதனிடையே சைம் ட்ரல் மாவட்டத்தில் மூன்று தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாகவும், அவர்களை என்கவுன்டர் செய்யப்போவதாகவும் ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி ஷெஷ் பால் வைட் நேற்று அறிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று காலை ராம்பூர் பகுதியில் பதுங்கி இருந்த நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டு கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையே காஷ்மீரில், பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில்,ஹிஸ்புல் முகாஜிதின் தீவிரவாத இயக்கத்தின், தளபதியான சப்ஸார் பாத்தும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.