அரசியல், அதிகாரம், சாதிகளின் பெயரால் ஒருவரின் உரிமைகள் பறிக்கப்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று போராடுவது மனித உரிமை ஆணையத்தின் பணி. ஆனால், அந்த ஆணையமே, அதன் உரிமைகளைப் பெற தமிழகத்தில் திண்டாடிக்கொண்டிருக்கிறது.

அதற்காகத் தொடர்ந்து போராடிவரும் வழக்கறிஞர் சுந்தரவதனத்திடம் பேசினோம்.

''மனித உரிமை ஆணையம் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள். ஆனால், மனித உரிமை அமைப்புகள் என்று தெருவுக்குத் தெரு இருக்கிறதே?''

''மனித உரிமை அமைப்புகள் வேறு. மாநில மனித உரிமை ஆணையம் என்பது வேறு. மனித உரிமை அமைப்புகளை யார் வேண்டுமானாலும் ஆரம்பித்துக் கொள்ளலாம்.

மத்திய அரசு தொடர்புடைய இடங்களில் மனித உரிமை மீறப்படும்போது அதில் தலையிட தேசிய

மனித உரிமை ஆணையமும், மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்களுக்கு மாநில மனித உரிமை ஆணையமும் ஏற்படுத்தப்பட்டன. இதில், தேசிய மனித உரிமை ஆணையம் ஓரளவுக்கு சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள மாநில மனித உரிமை ஆணையம் செயல்படவே இல்லை.

இதனால்தான் தனி நபர்கள் சிலர், தங்கள் இஷ்டத்துக்கு மனித உரிமை ஆணையம், மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் போர்டுகளை வைத்துக்கொண்டு, ஆயிரக்கணக்கில் பணத்தை வசூலித்துக்கொண்டு போலி உறுப்பினர் அட்டை வழங்குவது, போலீஸ்காரர்களுடன் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என்று மனித உரிமைகளை அவர்களால் முடிந்த அளவு கேவலப்படுத்திவருகின்றனர். இவர்களால்தான் பொதுமக்களுக்கு எது உண்மையான மனித உரிமை அமைப்பு என்பதில் குழப்பம் ஏற்படத் தொடங்கியது.’

''தமிழகத்தில் உள்ள மாநில மனித உரிமை ஆணையம் செயல்படவே இல்லை என்று குற்றம்சாட்டுகிறீர்களா?''

''செயல்படுவதற்கான கட்டமைப்பே இங்கு இல்லையே? பிறகு எப்படி செயல்பட முடியும். மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அதன் உறுப்பினர்களாக மாவட்ட நீதிபதிகள் இரண்டு பேரும், ஒரு ஆண் மனித உரிமை ஆர்வலரும், ஒரு பெண் மனித உரிமை ஆர்வலரும் என மொத்தம் ஐந்து பேர் நியமனம் செய்யப்பட வேண்டும். மாநிலத்தின் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து ஆலோசித்து இவர்களை நியமனம் செய்ய வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள மனித உரிமை ஆணையத்தில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜெயந்தி என்பவரையும், மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பாஸ்கரன் என்பவரையும் நியமித்துள்ளனர். இவர்களை என்ன பொறுப்பில் நியமித்துள்ளார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. தலைவர் இல்லாமலும் சரியான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லாமலும் மாநில மனித உரிமை ஆணையம் செயல்படுகிறது. அங்கு அனுப்பப்படும் புகார்கள் எதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. இவர்களுக்குப் பொதுமக்கள் அனுப்பும் புகார்களை, இந்த ஆணையம் விசாரிப்பதே இல்லை. போலீஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மனித உரிமை ஆணையத்துக்குப் புகார் அனுப்பினால், அவர்கள் அந்தப் புகாரை போலீஸ்காரர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் புகார் அனுப்பியவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடுகிறார்கள். இதுதான் இப்போது மாநில மனித உரிமை ஆணையம் செய்யும் வேலை.''

''இது தொடர்பாக நீங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தீர்களே?''

''மாநில மனித உரிமை ஆணையத்துக்கு முறையாக தலைவரை நியமிக்க அரசாங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி வழக்குத் தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் தலைவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், அரசாங்கம் அதைச் செய்யவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தேன். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'ஆறு வாரங்களுக்குள் மாநில மனித உரிமை ஆணையத்துக்குத் தலைவரை அரசாங்கம் நியமிக்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது மீண்டும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளேன். வாய்தா மேல் வாய்தா வாங்கி அந்த வழக்கையும் இழுத்தடிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.''

- ஜோ.ஸ்டாலின், படம்: ஆ.முத்துக்குமார்