காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் வெறிக்கு மேஜர் முகுந்த் தனது உயிரை அர்ப்பணித்த அதே

நேரத்தில், தர்மபுரிக்கு அருகில் அரசியல் அதிகாரப் பசிக்கு தனது உயிரைத் தாரைவார்த்துள்ளார் போலீஸ் இளைஞர் வினோத்குமார். இரண்டு தியாகங்களுமே மகத்தானதுதான்!

தேர்தலில் பணப் பட்டுவாடா நடந்துவிடக் கூடாது என்று பம்பரமாக வேலைபார்த்தார் சிறப்பு இளைஞர் காவல் படையைச் சேர்ந்த வினோத்குமார். பணப் பட்டுவாடா கும்பலை துரத்தி பிடிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்த வினோத்குமார் உயிரை இழந்துவிட்டார்!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நேர்மையான முறையிலும் அமைதியான முறையிலும் நடத்தி முடிக்க, காவல் துறையோடு சிறப்பு இளைஞர் காவல் படையை சேர்ந்த இளைஞர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் பயிற்சி பெற்றுகொண்டிருந்த சிறப்பு இளைஞர் காவல் படையைச் சேர்ந்த வினோத்குமாரும் அவர்களில் ஒருவர். தர்மபுரி மாவட்டம் முருக்கம்பட்டி புதூர் என்ற கிராமத்தில் பணியில் இருந்தார் வினோத்குமார். ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்ற தகவல் வினோத்குமாருக்கு கிடைத்தது. போலீஸைப் பார்த்ததும் அந்தக் கும்பல் ஓடியது. அவர்களைப் பிடிக்கப் பறந்தார் வினோத்.

அங்கே நடந்ததை வினோத்குமாருடன் ஸ்பாட்டில் இருந்த சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த செந்தில் என்பவர் விவரித்தார். ''முருக்கம்பட்டி கிராமத்துல ஓட்டுக்குப் பணம் கொடுக்குறதா ஸ்டேஷனுக்கு தகவல் வந்தது. உடனே இன்ஸ்பெக்டர் கண்ணையன் தலைமையில நானும் பாரதியார் மற்றும் வினோத்குமாரும் அங்கே போனோம். நான்தான் ஜீப் ஓட்டிகிட்டு போனேன். அங்கே உள்ள ஒரு வாட்டர் டேங்க் பக்கத்துல ஒரு கும்பல் பணப் பட்டுவாடா செஞ்சுகிட்டு இருந்துச்சு. தூரமாவே வண்டியை நிறுத்திட்டு மறைஞ்சு மறைஞ்சு போனோம். போலீஸ் வருவதைப் பார்த்துட்டு அந்த கும்பல் ஓட்டம் எடுத்தது. நாங்களும் துரத்த ஆரம்பிச்சோம். ரோடு வழியா பாரதியார் துரத்திகிட்டுப் போனார். இன்ஸ்பெக்டரும் நானும் ஆளுக்கு ஒரு பக்கம் ஓடினோம். வினோத்குமார் வயகாட்டுப் பக்கம் ஒருத்தனைத் துரத்திகிட்டு ஓடினார். எவ்வளவோ துரத்தியும் எல்லோரும் இருட்டுல ஓடி மறைஞ்சுட்டாங்க. இன்ஸ்பெக்டர் மட்டும் ஒருத்தனைப் பிடிச்சு வெச்சிருந்தாரு. நானும் பாரதியாரும் ஜீப் இருக்கும் இடத்துக்கு வந்துட்டோம். ஆனா வினோத்குமாரை மட்டும் ஆளையே காணோம்.

நானும் பாரதியாரும் அவரைத் தேடிகிட்டு திரும்பவும் போனோம். அவர் ஓடின திசையிலே நான் போனேன். அந்தப் பக்கம் ஓரு கூரை வீட்டைத் தவிர வேறு எதுவும் இல்ல. எவ்வளவோ சத்தம் போட்டும் வினோத்கிட்ட இருந்து பதில் இல்ல. கொஞ்ச தூரம் போய் பார்த்தேன். அந்த வீட்டுக்குப் பக்கத்துல ஒரு கிணறு இருந்துச்சு. வினோத் வேற எங்கும் போறத்துக்கு வழி இல்லையேன்னு யோசிச்சப்ப, அந்தக் கிணத்துக்குள்ள விழுந்திருப்பான்னு எனக்குத் தோணுச்சு. கிணத்துல பாதி தூரம் இறங்கிப் பார்த்தேன். இருட்டுல ஒண்ணும் தெரியல. இன்ஸ்பெக்டர் ஊர் ஆளுங்களைத் திரட்டி அந்த கிணத்துல இறங்கித் தேடச் சொன்னாரு. அப்போதான் உள்ளே வினோத் இருந்ததைக் கண்டுபிடிச்சாங்க. ஓடி வந்த வேகத்துல உள்ளே விழுந்து, கிணத்துப் பாறையில அடிபட்டு வினோத் இறந்துட்டான்'' என்றார் சோகமாக.

வினோத்குமாருக்கு சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் வீரணகுப்பம் கிராமம். வினோத்குமாரின் அப்பா மர வேலையும் அம்மா கூலி வேலைக்கும் போகிறார்கள். வினோத்துடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள். வினோத்குமாரின் அப்பா அண்ணாதுரையிடம் பேசினோம். ''வினோத்க்கு சின்ன வயசுல இருந்தே போலீஸ்காரன் ஆகணும்னுதான் கனவு. பிப்ரவரி மாசத்துலதான் வேலை கிடைச்சுது. அதுக்குள்ள இப்படி ஆவான்னு நாங்க யாரும் நினைக்கலைங்க...'' - மேற்கொண்டு பேசவே முடியாமல் உடைந்து அழுகிறார்.

அருகில் இருந்த வினோத்தின் அம்மா சுமதி, ''கார்த்தி நடிச்ச 'சிறுத்தை’ படத்தைப் பார்த்துட்டு, 'இது மாதிரி போலீஸ்காரனாகத்தான் நான் ஆகணும். நான் சாகும்போது என் கண்ணுல பயம் இருக்காது. என் உசுரே இந்த யூனிஃபார்ம்தான்’னு அடிக்கடி சொல்லிட்டு இருப்பான்ய்யா... இப்படி பாதியிலயே தவிக்கவிட்டுட்டுப் போவான்னு நினைச்சுகூடப் பார்க்கலை. அவன் இல்லாம நாங்க எப்படி வாழப்போறோம்னு தெரியலையே...'' என்று பெருங்குரலெடுத்து அழுகிறார்.

ஓட்டுக்குப் பணம் கொடுத்தவர்கள் ஜெயிக்கலாம். ஆனால், ஒரு இளைஞனின் கனவு முளையிலேயே தோல்வியைத் தழுவிவிட்டது. இந்த உண்மையான 'தியாகி’ குடும்பத்துக்கு அரசு செய்யப்போவது என்ன?

- எம்.புண்ணியமூர்த்தி

படம்: ரமேஷ் கந்தசாமி