'காதலித்த காரணத்துக்காக என் மகனை கொலை செய்துள்ளனர். அவன் மரணத்துக்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும்’ - என்று போராடிக்கொண்டிருக்கிறார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தந்தை. நல்லறிக்கை என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மர்மமான முறையில் தூக்கில் தொங்க... அவரது தந்தை ஆறுமுகம் ஊர்மக்கள் துணையுடன் போராடிக்கொண்டிருக்கிறார்.

செல்வராஜியின் தந்தை ஆறுமுகத்தைச் சந்தித்தோம். ''என் மகன் செல்வராஜ், ஐ.டி.ஐ. முடிச்சுட்டு, சென்னையில் ஒரு கம்பெனியில அப்ரன்டிஸா வேலை பார்த்து வந்தான். ஓட்டுப் போட ஊருக்கு வந்தப்பதான் இந்தக் கொடுமை. அவன் ரெண்டு வருஷமாவே இதே பகுதியைச் சேர்ந்த செங்குட்டுவனின் மகள் தனலெட்சுமியைக் காதலித்து வந்திருக் கான். இது எனக்கு சத்தியமா தெரியாது.

கடந்த 26-ம் தேதி சாயந்திரம் 6.30 மணியளவுல தனலெட்சுமிகிட்ட இருந்து என் மகனுக்கு போன் வந்திருக்கு. 'நாம் சென்னைக்குப் போயிடுவோம். இவங்க நம்மை வாழ விடமாட்டாங்க. பிரிச்சிடுவாங்க’ன்னு அந்தப் பொண்ணு சொல்லியிருக்கு. ரெண்டு பேரும் சென்னைக்குப் போறதுக்காக பஸ் ஸ்டாண்டுக்குப் போயிருக்காங்க. இந்த விஷயம் தெரிஞ்சு பெண்ணோட அண்ணன் பாண்டியன், என் மகனை அடிச்சு அவங்க வீட்டுக்கு இழுத்துட்டுப் போயிருக்கான்.

ராத்திரி அவங்க வீட்டு வழியா போனப்ப, என் மகன் அவங்க முன்னாடி கையைக் கட்டி தலைகுனிஞ்சு நின்னுகிட்டிருந்தான். நான் பதறிப்போய், 'ஏன்டா இங்க நிக்குற?’ன்னு கேட்டேன். அதுக்கு அவன்,

'ஒண்ணுமில்லைப்பா... நீ வீட்டுக்குப் போப்பா’ன்னு சொன்னான். செங்குட்டுவன் என்கிட்ட, 'உனக்கு ஒண்ணுமே தெரியாதா? சும்மா நடிக்காத...’னு சொல்லி அடிக்க ஆரம்பிச்சார். இந்த விஷயம் கேள்விப்பட்டு, என் மூத்த மகன் மருதமுத்து அந்த இடத்துக்கு வந்தான். பிரச்னை முத்திப்போகவே, 'இங்க பிரச்னை பண்ணாதீங்க. கண்டிப்பா என் மகளை உங்க பையனுக்குத் தர்றேன்’னார் செங்குட்டுவன். உடனே நாங்க எல்லாரும் அங்க இருந்து கிளம்பிட்டோம்.

மறுநாள் அதிகாலை 3.30 மணியளவுல தனலெட்சுமிகிட்ட இருந்து என் மகனுக்குப் போன் வந்திருக்கு. அப்ப வீட்டுல இருந்து கிளம்பினவனை, மரத்துல தூக்குல தொங்குற தைதான் பார்க்க முடிஞ்சது. பிணத்தைப் பார்த்த உடனே அவன் கொலைதான் செய்யப் பட்டிருக்கான்னு அப்பட்டமா தெரிஞ்சது.

வீட்டுல இருந்து கிளம்பும்போது, வெள்ளை நிறத்துல பழைய கைலி கட்டியிருந்தான். ஆனா, தூக்குல தொங்கும்போது அவன் உடுத்தியிருந்தது ஊதா நிற புது கைலி. அவன் தொண்டைக் குழி, மார்புப் பகுதிகள்ல காயம் இருந்தது. அவனோட கை, கால் முழுக்க புழுதி மண்ணா இருந்தது. அவன் போட்டிருந்த ஜட்டி முழுக்க ரத்தக் கறையாவும், அவனோட ஆண் உறுப்பு வீங்கியும் ரத்தம் வடிஞ்சுகிட்டும் இருந்தது. 30 அடி உயரம் கொண்ட வேப்பமரத்துல, ஒரு அடிக்கும் குறைவாக கயித்துல அவன் தூக்குல தொங்கிட்டு இருந்தான். அதனால, அவனா ஏறி அங்க தூக்குல தொங்கியிருக்க முடியாது. அந்தப் பொண்ணைப் பார்க்கப்போன இடத்துல செங்குட்டுவனும் அவனோட மகனும் சேர்ந்து என் மகனை அடிச்சு கொன்னு தூக்குல தொங்கவிட்டு இருக்காங்க.

இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ. காசிநாதன் ரெண்டு பேர்கிட்டேயும், நடந்த விஷயங்களை எல்லாம் எடுத்துச் சொன்னோம். ஆரம்பத்துல கொலைதான்னு சொன்ன அவங்க, இப்ப மாத்திச் சொல்றாங்க.

இந்த வழக்கை போலீஸ்காரங்க மூடி மறைக்க நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சதும், மறுநாள் காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் பிரேதத்தை அரியலூர் - திட்டக்குடி சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டோம். சப் கலெக்டர் மதுசூதன ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தி, 'சம்பந்தப்பட்டவங்க மீது கண்டிப்பா நடவடிக்கை எடுக்குறோம்’னு உறுதியளிச்சார். ஆனா, இப்ப வரைக்கும் நடவடிக்கை எடுக்கல'' என்றபடி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதார் ஆறுமுகம்.

தனலெட்சுமியின் தந்தை செங்குட்டுவன், ''என் மகன் மீதும் என் மீதும் சொல்லும் குற்றச்சாட்டுகள் பொய்யானது. அந்தப் பையனுக்கு என் மகளைக் கொடுக்க எனக்கு முழு சம்மதம்தான். எங்க ஊரில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவே, என்னைப் பிடிக்காதவர்கள் சூழ்ச்சியில் சிக்கவைக்க நினைக்கின்றனர். என்னிடம் விசாரணை நடத்திய போலீஸார், எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்றுதான் அமைதியாகச் சென்றுவிட்டார்கள்'' என்றார்.

இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் எஸ்.ஐ-யான காசிநாதனிடம் பேசினோம். ''செல்வராஜின் தந்தை சொல்லும் குற்றச்சாட்டுகள், எந்தவித முகாந்திரமும் இல்லாதது. செல்வராஜ் வீட்டுத் தரப்பில்தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார்கள். மரணம் நிகழ்ந்தது எப்படி என்பது விரைவில் தெரிய வரும்'' என்றார். எஸ்.பி-யான ஜோனல் சந்திராவிடம் பேசினோம். ''இதற்கென்று தனி குழு அமைத்து விசாரித்து வருகிறோம். விரைவில் நல்ல முடிவு தெரிய வரும்'' என்றார் சுருக்கமாக.

'செல்வராஜின் மரணத்துகான காரணத்தைக் கண்டுபிடிப்பதோடு, அதுபோன்று இந்தப் பகுதிகளில் காதல் காரணமாக நடந்துவரும் பல மர்ம மரணங்கள் பற்றியும் விசாரணை நடத்த தனி குழு அமைக்க வேண்டும்’ என்பது அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கை!

- எம்.திலீபன்