நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரம் என்று கட்சி வட்டாரத்தில் வர்ணிக்கப்படுபவர் பக்கநாடு மாதேஸ். எடப்பாடி யூனியன் சேர்மேனாக இருக்கும் இந்த மாதேஸின் மகன் சங்கர் என்பவர்தான் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தப்பட்டார் என்பது சேலத்தில் பரபரப்பு டாக். அவர் உண்மையில் கடத்தப்பட்டாரா, அல்லது ஏதாவது நாடகமா என்ற முடிச்சு இன்னும் அவிழவில்லை.

சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் அருகே உள்ளது பக்கநாடு. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸுக்கும் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் பல வருடங்களாக நட்பு. மாதேஸுக்கு சாந்தி, சத்யா, சங்கர் என்று மூன்று வாரிசுகள். மூவருக்கும் திருமணமாகிவிட்டது. மாதேஸ் அரசியலில் பிஸியாகிவிட, அவரது மகன் சங்கர் அதே ஊரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

25-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு மாதேஸுக்கு ஒரு போன் கால் வருகிறது. ''நாங்க சொல்லப்போற விசயத்தைக் கேட்டு பதற்றப்படாதீங்க மாதேஸ்... உங்க பையனை நாங்க கடத்திட்டோம். ரெண்டு கோடி

ரெடி பண்ணி வை. எங்கே கொண்டு வரணும்ங்குறதை நானே திரும்ப போன் பண்ணிச் சொல்றேன்...'' என்று பேசிவிட்டு இணைப்புத் துண்டிக்கப்படுகிறது.

மகன் பெட்ரோல் பங்கில் இருக்கிறாரா என்று விசாரித்துவிட்டு, போலீஸுக்குப் போகிறார் மாதேஸ். அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் போலீஸாரை முடுக்கிவிட, மாவட்ட எஸ்.பி தலைமையில் 12 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டைத் தொடங்குகிறது. மறுநாள் விடியற்காலை சங்கர் தானாகவே வந்து வீட்டுக் கதவைத் தட்டுகிறார்.

வீடு திரும்பிய சங்கரை நாம் சந்தித்தோம். ''காலையில எனக்கு ஜலகண்டபுரத்துல இருந்து ஒருத்தரு போன் பண்ணி, 'கூரியர் ஆபீஸ்ல இருந்து பேசுறோம். உங்களுக்கு ஒரு கூரியர் வந்திருக்கு. வந்து வாங்கிக்க முடியுமா?’னு கேட்டாங்க. எங்கே வரட்டும்னு கேட்டேன். அவங்க சொன்ன இடத்துக்குப் போனேன். அங்கே ஒரு ஆம்னி கார் நின்னுட்டு இருந்துச்சு. நான் அந்த இடத்துல போய் பைக்கை நிறுத்தியதும், ஒரு போர்வையை என் மேலபோட்டு மூடிட்டாங்க. 'விடுங்கடா..’னு நான் கத்தினேன். அதுக்குள்ள கார்ல தூக்கிப் போட்டுட்டு கிளம்பிட்டாங்க.

ஒரு மணிநேரம் கார் போய்ட்டே இருந்துச்சு. அதுக்கப்புறம் ஒரு ரூமுக்குள்ள போட்டு என்னை அடைச்சுட்டாங்க. அந்த ரூம் இருட்டா இருந்தது. மதியம் சாப்பாடு வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க. எதுக்கு என்னை இங்கே தூக்கிட்டு வந்தீங்கனு கேட்டேன். 'உங்க அப்பன் எங்களுக்கு 25 லட்சம் தரணும். எத்தனையோ தடவை கேட்டுட்டோம். அவரு கொடுக்கலை. அதான் உன்னைத் தூக்கிட்டோம். அவனுக்கு போன் பண்ணிருக்கோம். பணம் கொடுத்துட்டா உன்னை விட்டுறோம்’னு சொன்னாங்க. அதுக்கப்புறம் என்ன நடத்துச்சுன்னு எனக்குத் தெரியாது. ரொம்ப நேரத்துக்கப்புறம் என்னை மறுபடியும் கார்ல எங்கேயோ கூட்டிட்டுப் போனாங்க. இருட்டா இருந்துச்சு. ஒரு இடத்துல என்னை இறக்கிவிட்டுட்டுப் போயிட்டாங்க. அந்த இடத்துல என்னோட பைக்கையும் கொண்டுவந்து நிறுத்தியிருக்காங்க. அது எந்த இடம்னு எனக்குத் தெரியலை. ரொம்ப நேரம் அங்கேயே நின்னுட்டு இருந்தேன். அந்த வழியா வந்த ஒருத்தர்கிட்ட விசாரிச்சப்போ, ஆட்டையாம்பட்டின்னு சொன்னாங்க. அங்கிருந்து வழி கேட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்'' என்று மிரட்சி விலகாமல் பேசினார்.

''யாரோ வந்து கடத்தினாங்களாம்... அப்புறம் அவங்களே கொண்டுட்டு வந்து விட்டுட்டாங்களாம். இதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே!'' என்பதுதான் இப்போது அந்தப் பகுதிகளில் டீக்கடைகளில் முக்கிய விவாதமாக இருக்கிறது.

''இந்த சம்பவத்துக்கும் சங்கருக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பு இல்லை. அந்தப் பையன் ரொம்பவும் வெகுளி. யாருகிட்டயும் சத்தமாகூட பேச மாட்டான். பையனை வேலைக்கு அனுப்பினா சரியா வராதுன்னுதான் அவனுக்கு, மாதேஸ் பெட்ரோல் பங்க் வெச்சு கொடுத்துட்டாரு. மாதேஸுக்கு கட்சிக்குள்ள நிறையவே எதிரிங்க இருக்காங்க. அமைச்சர்கூட ஆரம்ப காலத்துல இருந்தே இருக்காரு. அமைச்சரோட நல்லது கெட்டது எல்லாத்தையும் மாதேஸ்தான் கவனிச்சுக்குறாரு. அமைச்சரோட நிழல் என்று மாதேஸை சொல்லுவங்க.

பக்கநாடு ஏரியாவுல மலைபோல குவிஞ்சிருக்கும் செம்மண் அள்ளுவதற்கு கலெக்டர்கிட்ட பெர்மிஷன் வாங்கித் தருவதாக பலரிடமும் மாதேஸ் பணம் வாங்கியிருக்காரு. தர்மபுரி பக்கம் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்தபோது, ஒருத்தருக்கு பணம் 25 லட்சம் தரணும்னு சொல்றாங்க. அவங்களுக்கு பணம் கொடுக்காம ரொம்ப நாளா மாதேஸ் இழுத்தடிச்சதாகவும், அவங்கதான் ஆளுங்களை வெச்சு பையனைக் கடத்திட்டதாகவும் சொல்றாங்க. இதுல தனக்கு எதுவும் சிக்கல் வந்துடுமோ என்ற பயத்துல அமைச்சர் பழனிசாமியும் ரொம்பவே ஆடிப்போயிருக்காரு'' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மாதேஸிடம் பேசினோம். ''நடந்த சம்பவத்தால் நாங்க ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கோம். என் மகனைக் கடத்தியது யார் என்பது இதுவரைக்கும் எனக்குத் தெரியாது. யாரா இருக்கும்னு யோசிச்சு குழம்பிப் போயிருக்கேன். நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செஞ்சதும் இல்லை. கொடுக்கல் வாங்கல்ல யாருகிட்டயும் எந்தப் பிரச்னையும் கிடையாது. தர்மபுரி பக்கம் நான் ரியல் எஸ்டேட் பிசினஸும் செய்தது இல்லை, அந்தப் பக்கம் நான் போனதும் இல்லை. அப்புறம் ஏன் இப்படி சொல்றாங்கன்னு தெரியலை'' என்று மட்டும் சொன்னார்.

சேலம் எஸ்.பி சக்திவேலிடம் பேசினோம். ''கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் சங்கர் எங்களிடம் தெளிவாகப் பேச மறுக்கிறார். அவர் எங்களுக்குச் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அவருக்கு வந்த போன் அழைப்புகளை செக் செய்து வருகிறோம். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க இரண்டு டி.எஸ்.பி-க்களை நியமித்து இருக்கிறேன். இந்தக் கடத்தல் சம்பவத்துக்கான காரணத்தை விரைவில் கண்டுபிடித்து விடுவோம்'' என்று உறுதியாகச் சொன்னார்.

கடத்தியவர்கள் பணம் கேட்டது உண்மையாக இருந்தால், அதனை வாங்காமல் விட்டிருக்க மாட்டார்கள். அப்படியானால் எவ்வளவு பணம், எந்த இடத்தில் வைத்து கொடுக்கப்பட்டது என்பதும் இன்னும் தெரியவில்லை. ஆளுங்கட்சி பிரமுகர், அதுவும் அமைச்சருக்கு வேண்டியவர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அதிகாரிகளும் அடக்கியே வாசிக்கிறார்கள். கடத்தலுக்கான உண்மையான காரணத்தை காவல் துறை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும்!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி