'குடிகாரர்’ என கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் விஜயகாந்த் மீது ஜெயலலிதா முன்வைத்த விமர்சனம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. 'பக்கத்திலிருந்து ஊற்றிக் கொடுத்தவர் மாதிரி பேசுகிறாரே..?’ என்று விஜயகாந்த் எதிர் அறிக்கை வெளியிட அப்போது மிகப்பெரும் விவாதப்பொருளாக மாறியது அந்த தனிமனிதத் தாக்குதல்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு விஜயகாந்த் மீது அதே போன்றதொரு விமர்சனம்... இந்த முறை முன்வைத்தவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். ஆனால், பதில் எதிர்ப்பு

அறிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மாறாக, தனக்கு தே.மு.தி.க எம்.எல்.ஏ பார்த்தசாரதி போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார் தமிழருவி மணியன்.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்திய தமிழருவி மணியன், செய்தியாளர்களிடம் பேசும்போது, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க தவிர்த்து மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து மதுவிலக்குக்கு எதிராகக் கூட்டுப்போராட்டம் நடத்தப்படும்' என அறிவித்தார். 'அது ஏன் தே.மு.தி.க-வை தவிர்த்து...?’ என செய்தியாளர்கள் கேட்க, அதற்கு தமிழருவி மணியன் சொன்ன பதில்தான் சர்ச்சையின் தொடக்கம்.

''மதுவின் வாசனை அறியாத மனிதர்களை மையப்படுத்தி நடத்தினால்தான் போராட்டம் அர்த்தமுள்ளதாக இருக்கும்!''- இதுதான் தமிழருவி மணியன் தந்த பதில்.

விஜயகாந்த் மீது அப்படி என்ன பகை? தமிழருவி மணியனை சந்தித்துக் கேட்டோம்.

'எனது 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில் தரம் தாழ்ந்து தனிமனித தாக்குதலில் ஈடுபட்ட பழக்கமே இல்லாதவன் நான். எழுத்திலும் பேச்சிலும் வன்மம் இல்லாமல் எதிலும் மென்மையான விமர்சனங்களை வைக்கப் பழக்கப்பட்டவன். தமிழகத்தில் குடிக்கு அடிமை ஆகுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் தமிழகத்தில்தான் அதிக சாலைவிபத்து நடக்கிறது. பாலியல் பிறழ்வு, கொலைகள், கொள்ளை போன்றவை தமிழகத்தில் அதிகரித்திருக்க முதல் காரணம் மதுவின் ஆதிக்கம்தான். எனவே தமிழக

முதல்வருக்கு மதுக்கடைகளை மூட வேண்டிய அவசியத்தைத் தெரிவிக்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தேன். அப்போது, 'ஏன் தே.மு.தி.க-வை அழைக்கமாட்டீர்களா?’ என செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு, 'மதுவின் வாசம் அறியாத மனிதர்களை வைத்து மதுவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தப்போகிறோம்’ என்றுதான் சொன்னேன். விஜயகாந்த் பெயரைச் சொல்லி, அவர் குடிகாரர். அதனால் அவரை இணைத்துக் கொள்ளவில்லை என நான் சொல்லவில்லை.

அன்று இரவு 7.28 மணிக்கு தே.மு.தி.க எம்.எல்.ஏ பார்த்தசாரதி என்னை தொடர்பு கொண்டார். ''என்ன ஐயா இந்த மாதிரி சொல்லி இருக்கிறீர்கள்?’ என ஆரம்பத்தில் இணக்கமாகத்தான் பேசத் தொடங்கினார். 'மதுவின் வாசம் அறியாதவர்களை வைத்துதான் மது எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்றுதானே சொன்னேன். அதனால் விஜயகாந்த்துக்கு என்ன?’ என நான் கேட்டேன். 'நீங்கள் விஜயகாந்த் குறித்த கேள்விக்குத்தானே அப்படி பதில் சொன்னீர்கள்’ என்றார்.

சிறிது நேரத்தில் திடீரென ஆவேசமடைந்த அவர், 'மாட்டுத் தரகன்னு நீ கேப்டனை சொன்னபோதே உன்னை கவனிச்சிருக்கணும். மத்தவங்களை மாதிரி நினைச்சுடாதே. கேப்டனை பத்தி பேசினா நீ எங்க போனாலும் கையை, காலை உடைச்சு, உன்னை உண்டு இல்லைனு பண்ணாம விடமாட்டோம்’ என மிகத் தரக்குறைவான வார்த்தையில் பேசினார். நானும் அவருக்கு பதில் அளித்தேன். இது அப்பட்டமான கொலை மிரட்டல். இதுபற்றி காவல் துறைக்கு புகார்செய்ய முடிவு செய்தேன்.

இதைத்தொடர்ந்து டி.ஜி.பி ராமானுஜத்துக்கு போன் செய்தேன். மூன்று முறை அழைத்தும் அவர் எடுக்கவில்லை. பின்னர் எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை. முதல்வர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டபோது, 'சென்னை கட்டட இடிபாடு நடந்த இடத்தில் எல்லா அதிகாரிகளும் உள்ளனர்’ என்றனர். அதன் பின்னர் திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தேன். விஜயகாந்த் பக்கத்தில் இருந்து கொண்டுதான் பார்த்தசாரதி பேசினார் என என்னால் அனுமானிக்க முடிகிறது. ஆனால், விஜயகாந்த் தூண்டுதலின் பேரில் இந்த மிரட்டல் நடந்ததாக நான் புகார் கொடுக்கவில்லை. இதை தே.மு.தி.க-வுக்கு எதிராகவோ, அந்தக் கட்சி தொண்டர்களுக்கு எதிராகவோ நான் பார்க்கவில்லை. இது பார்த்தசாரதிக்கு எதிராக எடுத்த சட்ட நடவடிக்கை அவ்வளவுதான்!''

''மதுவாடை அறிந்தவர் என்ற விமர்சனத்தை விஜயகாந்த்தை மையப்படுத்தித்தானே வைத்தீர்கள்?''

''நான், 'மதுவின் வாசனை அறியாதவர்களோடு இணைந்து போராடுவேன்’ என்றுதான் சொன்னேன். நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? என் வார்த்தையை திரும்பப்பெற நான் விரும்பவில்லை. மது வாசனை அறிந்தவர் யார், அறியாதவர் யார் என்று மக்களுக்குத் தெரியும். இப்படி சொன்னதில் தவறு இல்லை.

எம்ஜி.ஆர் முதலைமைச்சராக இருந்தபோது அவரை விமர்சித்திருக்கிறேன். ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞரை விமர்சித்திருக்கிறேன். மூன்றாவது முறை முதல்வராக உள்ள ஜெயலலிதா தவறு செய்தால் அவரையும் விமர்சித்து வருகிறேன். எனக்கென சொந்த விருப்பு வெறுப்பு அடிப்படையில்

யாரையும் விமர்சித்துப் பழக்கம் இல்லாதவன் நான். மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து, மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக இருந்தால் விமர்சிப்பேன்.

ஆனால், இன்று வரை யாரிடம் இருந்தும் எனக்கு மிரட்டல் வந்ததில்லை. என் 45 ஆண்டு பொதுவாழ்வில் எனக்கு கீழ்த்தரமான அச்சுறுத்தலை தந்தவர் பார்த்தசாரதி மட்டும்தான். இவரைப் போன்றவரை அருகில் வைத்துக்கொள்வது என்பது கட்சித் தலைவருக்கு அழகில்லை. இதுபோன்ற தவறான நடைமுறைகளால்தான் 10 சதவிகிதத்தில் இருந்த தே.மு.தி.க வாக்கு வங்கி, 5 சதவிகிதத்துக்கு கீழே போய்விட்டது. இதேநிலை நீடித்தால் அரை சதவிகிதமாக மாறிவிடும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதே இப்படி என்றால், இவர் முதல்வரானால் தமிழகத்தின் கதி என்ன ஆகும்?

2016 சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் இருக்கும் 14 தொகுதியில் எந்தத் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடத் தயார். என்னைவிட ஒரு வாக்கு அதிகமாக விஜயகாந்த் வாங்கினாலும், அரசியலில் இருந்து முழுமையாக விலகி விடுகிறேன். என் சவாலை ஏற்க விஜயகாந்த் தயாரா?' என ஆவேசமாக முடித்தார்.

விமர்சனம் எனும் பெயரில் தடித்த சொற்களைப் பயன்படுத்துவதும், தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதும் தமிழக அரசியலில் ஒன்றும் புதிதல்ல. அந்தப் பட்டியலில் தமிழருவி மணியனின் விமர்சனத்தையும் அதற்கு எதிரான தே.மு.தி.க எம்.எல்.ஏ-வின் மிரட்டலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

- ச.ஜெ.ரவி