''அடங்கு.... அடங்கு... இப்போ அடங்கப் போறியா இல்லையா....!'' என்ற சப்தம் கேட்டு நான் நின்ற இடம் மெரினா கடற்கரை!

நள்ளிரவு நேரக் கடற்கரையில் ஒரு பக்கம் கூட்டம் கலைய ஆரம்பித்திருந்தது. இன்னொரு பக்கம் பாய் தலையணையுடன் மணல் பரப்பை குப்பத்து மக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஜில்லென்ற காற்று முகத்தில் அறைய... கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

யாரைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு ஜோடி முகத்தில் முகம் பதித்திருந்தது. அந்த ஜோடியைத் தாண்டி சற்று தூரத்தில் சம்மணக்கால் போட்டு ஒருவர் உட்கார்ந்து, கைகளை உயர்த்தியபடி ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். அவரை நெருங்கினேன். ''அடங்கு... அடங்கு.... சூட்சும தேவதைகளா இப்போ அடங்கப்போறீங்களா இல்லையா... பிரத்யங்கிரா... சூழினி துர்கா... ராஜரட்சினி...'’ என்று உரக்கக் கத்தினார். இவரது கத்தல்தான் என்னை நிறுத்தியது!

அவருக்கு அருகே உட்கார்ந்தேன். ''ஐயா...'' என்று நான் அழைத்ததுதான் தாமதம், ஆந்தை விழிகளுக்குப் போட்டியாக கண்களை உருட்டியபடி என்னைப் பார்த்தார். ''யாரு நீ... ஆந்தைதானே?'' என்றார். தலையாட்டினேன். அவர் கையில் இருந்த சோழியை மணலில் உருட்டினார். ''நல்ல பிரசன்னம் வந்திருக்கு... உன்னோட பேசலாம்'' என்று அவர் முடிக்கும் முன்... ''ஆமா... யாரு நீங்க. இந்த ராத்திரி நேரத்துல கடலைப் பார்த்து ஏதோ கத்திட்டு இருக்கீங்க?'' என்று கேட்டேன்.

''நான் என்ன செய்யுறேன் தெரியுமா? நில தேவதையும், கடல் தேவதையும் சென்னையில் ஏனோ ரொம்ப உக்கிரமா இருக்காங்க. அவங்களை ஆசுவாசப்படுத்திட்டு இருக்கேன். அப்படியே விட்டா கடல் தேவதை பொங்கி எழுந்து சென்னையை இருக்கிற இடம் தெரியாம ஆக்கிடுவா. அதுமட்டுமில்ல, சென்னை முழுக்கவே பிரேத அலைகள் தலைவிரிச்சு ஆட்டம் போடுதுங்க. அதுங்களை ஒரளவு அடக்கும் முயற்சியாகத்தான் நான் இங்கே வந்திருக்கேன். என்னோட பேரு ஸ்ரீவேங்கடசர்மா. பூர்விகம், பாலக்காடு. தமிழகத்துலதான் இப்போ இருக்கேன். அப்பப்ப வெளியூர்களுக்கு ராத்திரி வலம் போவேன். பிரசன்னம் பார்த்து ஜெபம் செய்து ஆவிகளை அடக்குவேன். உலக அமைதிக்காக இப்படி என்னை செய்யச் சொல்றது என்னோட குருநாதர் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள்'' என்று சொல்ல, எனக்கு லேசான உதறல்.

''அதென்ன சாமி பிரேத அலைகள்?'' என்று கேட்டேன்.

''தெருவுல நீ பார்க்கிறதெல்லாம் மனுஷங்களோட நடமாட்டத்தை மட்டும்தான். ஆனா, நான் பார்க்கிறது பிரேத அலைகளோட நடமாட்டத்தை! இன்னைக்கு சென்னையில இருக்கற மக்கள்தொகை மாதிரி ரெண்டு மடங்கு ஆவிங்க அலைஞ்சுகிட்டு இருக்கு. அல்ப ஆயுசுல செத்துப்போறவங்களோட ஆவி, ரோடு ஆக்ஸிடென்ட்ல சாகுறவங்களோட ஆவின்னு ஏராளமான ஆவிங்க இங்கே சுத்துது. இவைகளைத்தான் நான் பிரேத அலையின்னு சொல்கிறேன். சென்னையில் கரு கலைப்புங்குறது சாதாரணமாகிடுச்சு. அதுவும் ஒரு உசிருதானே... அந்த ஆவிங்க ருத்ர தாண்டவமாடுதுங்க!'' என்று சீரியஸாக சொன்னார்.

''எனக்கு ஒரு பிரேத அலையை (அதாங்க ஆவி!) காட்டமுடியுமா சாமி?'' என்று கேட்டேன்.

''ஆவியைப் பார்க்குறது அவ்வளவு சாதாரண சமாசாரம் இல்லை. ஆவிகளோட கொடூரத்தைத்தான் இப்போ சென்னை மக்கள் அனுபவிச்சிட்டு இருக்காங்க. மவுலிவாக்கம் ஞாபகம் இருக்கா? பாரீஸ் கார்னர்ல பழமையான வங்கிக்கட்டடம் தீப்பிடிச்சி இருக்கே... இது எல்லாமே பிரேத அலையோட அட்டகாசம்தான்! அடுத்தடுத்து சென்னை இன்னும் பல விபரீதங்களை சந்திக்கப்போவுது. கடல் தேவதை திடீர்னு பொங்கி கோபத்தை கொப்பளிக்கப் பார்த்துச்சு. இதை என் குருநாதர் சொல்லி என்னை போகச் சொன்னாரு. நான் இங்கே வந்து வேத மந்திரங்களை உச்சரிச்சு அதை கூல் பண்ணிட்டு இருக்கேன்...'' என்று சொல்லியபடி எழுந்து நடக்க ஆரம்பித்தார். நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். கண்ணகி சிலைக்கு அருகே சென்று நின்றவர் ஒரு ஆட்டோவை நிறுத்தி, ''மவுலிவாக்கம் போகணும்!'' என்றார். டிரைவரோ பேய் அறைந்த மாதிரி 'எஸ்' ஆனார்.

அடுத்தடுத்து வந்த ஆட்டோக்களும் டாடா சொல்லிவிட்டுச் சென்றன. நான் ஒருகட்டத்தில் அவருக்கு உதவியாக நின்று ஆட்டோ பிடித்துக்கொடுத்தேன். ''நீயும் வருகிறாயா?'' என்று சாமியார் கேட்டதும், தொற்றிக்கொண்டேன்.

ஆட்டோ அண்ணா சாலையைக் கடந்தபோது, ஒரு கட்டடத்தை எட்டிப்பார்த்தார். ''இந்த ஏரியாவுல பிரேத கூட்டங்களுக்கு எல்லாம் தலைமை வகிக்கும் ஜூரும்பிகா பிசாசு குடிகொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இங்கே நிறைய பேர்களின் உடல் புதைக்கப்பட்டதால், ஆவிகள் நடமாடுகின்றன. இந்த கட்டடத்துக்குள்ள ஒரு திகில் அரசியல் இருக்கு. ஆனால் அதுக்குள்ள நான் போக விரும்பலை. ஒரே வரியில் சொல்றேன். ஜூரும்பிகா பிசாசின் தாண்டவத்தால், இங்கே வேலை செய்கிற மனிதர்களின் மூடு அடிக்கடி மாறும்'' என்று ஒரே போடாகப் போட்டார்.

மவுலிவாக்கத்தில் ஆட்டோ நுழைந்தது. வழிநெடுகிலும் ஆங்காங்கே போலீஸ் தலைகள். ஆட்டோவை நிறுத்தி, டிரைவரை ஊதச் சொன்னார்கள். நிறைய கேள்விகளைக் கேட்டார்கள். சுவாமி மட்டும் ஆட்டோவில் இருந்து இறங்கி, தரைமட்டமாகக் கிடந்த 11 மாடி கட்டட ஏரியா பக்கம் நடந்து போனார். ''சரி... இன்னைக்கு விடிய விடிய இங்கே ஜெபம் செய்யப்போகிறார் போலிருக்கிறது'' என்று நினைத்தபடி ஆட்டோவில் அமர்ந்திருதேன். சில நிமிடங்களில் ஏதோ ஷாக் அடித்தவர்போல ஓடிவந்தார் சுவாமி.

''சீக்கிரம் ஆட்டோவை எடு... இங்கிருந்து போயிடலாம்'' என்று பரபரத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. டிரைவரும் என்னமோ ஏதோவென பதற்றத்துடன் ஆட்டோவை விரட்டினார். ''என்னாச்சு சுவாமி?'' என்று நான் கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாமல், போரூர் ஜங்ஷனை தாண்டும் வரை ஏதோ மந்திரங்களை மட்டுமே உச்சரித்தபடி வந்தார் சாமி.

''அந்தக் கட்டடம் இடிஞ்ச இடத்துல ஒரே அழுகுரல்கள். அல்ப ஆயுசுல இறந்தவர்களின் ஆவிகள் ஆத்ம சாந்தி அடைய நான் ஜெபம் செய்யப்போனேன். ஆயிரக்கணக்கான பிரேத அலைகள், ரௌத்திர யட்சினி என்கிற பிசாசு தலைமையில் என்னைத் தடுத்தன. அவற்றை மீறி என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ரிட்டர்ன் ஆகிவிட்டேன்!'' என்று அவர் சொல்லச் சொல்ல, எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. இதுக்கு மேல ஆவி விளையாட்டு போதும் என்று நான் கிண்டியில் இறங்கிக்கொண்டேன்.

அங்கிருந்து இன்னொரு ஆட்டோ பிடித்து கோயம்பேடு நோக்கிப் போனேன். வடபழனி சிக்னல் தாண்டியதும் ஒரு காபி ஷாப் கண்ணில் பட்டது. ஆட்டோவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே போனேன். நள்ளிரவை தாண்டியிருந்தாலும் ஏதோ பகல் நேரத்து ஹோட்டல் போல உள்ளே கூட்டம் இருந்தது. எல்லாமே இளசுகள். நானும் ஒரு ஸீட் பிடித்து உட்கார்ந்தேன். 'காபச்சினோ’ ஒன்று ஆர்டர் சொல்லிவிட்டு, நிமிர்ந்தபோது, என் எதிரே காலியாக இருந்த ஸீட்களை ஒரு ஜோடி ஆக்கிரமித்திருந்தது. அவர்கள் இருவரும் சம்பந்தமே இல்லாமல் இருந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு வயது 25 சொச்சம் இருக்கும். உடன் வந்தவரோ 40-களில் இருந்தார். என்னைப் பார்த்து அந்தப் பெண் லேசாக சிரித்தார். நானும் சிரித்து வைத்தேன். அவர்களும் ஏதோ ஆர்டர் செய்தார்கள். அந்தப் பெண்ணின் கண்கள் திரும்பத் திரும்ப என்னை மொய்க்க ஆரம்பித்தது. ''ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்துடுறேன்...'' என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணுடன் வந்தவர் எழுந்து போனார்.

அவர் போனதும், ''ஹலோ... தனியாவா வந்திருக்கீங்க?'' என்று கேட்டார் அந்தப் பெண். நான் தலையாட்டியதும், ''என்னோட நம்பர் நோட் பண்ணிக்கோங்க... அப்புறம் பேசுங்க!'' என்று சொல்லி, என் பதிலுக்கு காத்திருக்காமல் டேபிள் மீது இருந்த என் செல்போனை எடுத்து அவரது நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு வைத்தார். அதற்குள் 'காபச்சினோ’ வந்தது.