''மவுலிவாக்கம் பகுதியில் இரண்டு கட்டடங்களுக்கு ஜி.ஓ. வழங்கப்பட்டிருக்கிறது. அரசாணையும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அரசாணையில் எந்தவித விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், எந்த நிபந்தனையோடு அதைக் கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை'' -தமிழக கவர்னர் ரோசய்யாவிடம் மனு கொடுத்துவிட்டு மு.க.ஸ்டாலின் பேட்டி அளிக்கும்போது இப்படிச் சொன்னார்.

மவுலிவாக்கம் கட்டடம் இடிந்து 61 பேர் இறந்த சம்பவத்துக்கு சி.எம்.டி.ஏ-வைக் குற்றம்சாட்டி தி.மு.க-வினர் பிரசாரம் செய்துவரும் நிலையில், இதில் என்ன மாதிரியான விதிமுறை மீறல் நடந்துள்ளன என்று தி.மு.க வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவிடம் கேட்டோம்.

''ஒரு அரசாணைதான் இத்தனை பேரின் வாழ்க்கையைக் கறுப்பாக்கி இருக்கிறது. இந்த விபத்து நடந்த அன்று முதலமைச்சர் ஜெயலலிதா சம்பவ இடத்தைப் பார்வையிட்டுவிட்டு, 'இங்கு கட்டடம் கட்ட அனுமதி அளித்து பிறப்பித்த அரசாணையில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட குழப்பம்தான் விபத்துக் காரணம்’ என்றார்.

ஆனால், அரசு தன்னிச்சையாகப் பிறப்பித்த ஒரு அரசாணையால்தான் இந்த விபத்து நடந்துள்ளது.

ஓர் அரசாணை வெளியிடும்போது,

1. எதற்காக இந்த அரசாணை வெளியிடப்படுகிறது.

2. யாருடைய வேண்டுகோளின்படி வெளியிடப்படுகிறது.

3. எந்த அதிகாரத்தில் வெளியிடப்படுகிறது.

4. இந்த அரசாணை வெளியிடுவதற்கான மக்கள்சார் முக்கியத்துவம் என்ன?

5. இந்த அரசாணை வெளியிடும்போது பெயர் குறிப்பு, கருத்துரை பெறப்பட்ட குறிப்பு எண் (ஸிமீரீ.ஸீஷீ) உள்ளிட்டவை இடம்பெற வேண்டும்.

ஆனால், தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் 28.5.2013 அன்று வெளியிடப்பட்ட இந்த அரசாணையில், தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக அமைப்பு வளர்ச்சித் திட்டம் சட்டம் பிரிவு 113-ன் கீழ் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வளர்ச்சி விதி 28(வ)(நீ)-ன் கீழ் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என்று, அந்தச் சம்பவ இடத்தின் சர்வே எண்ணைக் குறிப்பிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த அரசாணை யாருடைய வேண்டுகோளின்படி வெளியிடப்பட்டது? என்ன நோக்கத்துக்காக வெளியிடப்பட்டது? இந்த அரசாணையில் பொதுமக்களுக்கான நோக்கம் என்ன? இந்த ஏரி பகுதியில் இரண்டு அடுக்குமாடி கட்டடங்கள் கட்ட அவசர அவசரமாய் அனுமதி அளித்ததன் பின்னணி என்ன? இதற்கான எந்த விவரமும் இந்த அரசாணையில் இல்லை. குறைந்தபட்ச தேவைகளைக்கூட பூர்த்திசெய்யாத ஓர் ஆணையை எப்படி அரசாணையாக ஏற்றுக்கொள்ள முடியும்?

இப்படி இந்த அரசாணை வெளியிட வேண்டும் என்றால், என்ன நடைமுறையைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

இந்த இடம் இருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேரூராட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையில் லோக்கல் அண்ட் பிளானிங் அதிகாரியிடம் சென்று, பிறகு அந்த மண்டலத்தில் உள்ள மண்டல இயக்குநரிடம் சென்று, பிறகு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உயர் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த இடத்தில் இவ்வளவு பெரிய கட்டடம் கட்ட அனுமதி அளிக்க முடியுமா, முடியாதா என அவர்கள் ஆராய்ந்து, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதன் பிறகு வீட்டுவசதித் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளருக்கு அனுப்பி, வீட்டுவசதித் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை ஆகியவற்றின் கருத்து கேட்கப்பெற்று அரசாணை வெளியிடப்பட வேண்டும்.

அரசாணையின் இறுதியில் மேற்கண்ட துறைகளிடம் இருந்து ஒப்பம் பெற்று வெளியிடப்படுகிறது என்ற குறிப்புடன் வெளியிட வேண்டும். இந்த நடைமுறைகள் எதுவுமே பின்பற்றப்படவில்லை. ஊராட்சி மன்றம் தொடங்கி, கீழ்நிலை திட்ட அதிகாரி, மண்டல இயக்குநர், பெருநகர வளர்ச்சி குழுமம், துறை செயலாளர்கள் இதற்கும் மேலாக முதலமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டு வெளியிடப்பட வேண்டும். முதல்வரின் கூற்றுப்படி அரசாணை வழங்கியதில் எந்த முறைகேடும் இல்லை என்றால், இத்தனை அதிகாரிகள் பார்த்து இவ்வளவு தீர்மானம் போட்டு ஒரு நீர்நிலை பகுதியில் அதுவும் 26 அடி ஆழத்துக்கு களிமண் உள்ள பகுதியில் 11 மற்றும் 12 மாடி கட்ட அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது சரியா?

விதிவிலக்கு அளிக்கும் பிரிவான 113-ஐ சாதாரணமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் மிக முக்கியமான மிகத் தேவையான கால கட்டத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அப்படி விதிவிலக்கு அளித்தால் அதன் காரணத்தைப் பதிவுசெய்ய வேண்டியது அரசின் கடமை என்றும் சட்டம் சொல்கிறது. இவை எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்காது. மேலும் அமைச்சர் வைத்திலிங்கம் சட்டமன்றத்தில் பதிவுசெய்த பதிவின்படி 'மண்ணின் தன்மைக்கும் கட்டட உறுதித் தன்மைக்கும் அரசு பொறுப்பு இல்லை’ என்கிறார்.

விண்ணப்பத்தின் முதல் தேவையே கட்டடம் கட்டப்படும் இடத்தின் மண் கட்டடத்தை தாங்கும் தன்மை உடையதா, இல்லையா என்பதுதான். கட்டட உறுதித் தன்மைக்கு அனுமதி வழங்கிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள்தான் கட்டடம் கட்டப்படும் விதத்தை ஒவ்வொரு கால இடைவெளிக்குள் பகுதி பகுதியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துக்கு அனுமதி கொடுப்பதும் கட்டடத்தைப் பார்த்து அதன் தன்மை குறித்துப் பதிவு செய்வதும் அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளின் பணி என்றால், அதனை மேற்பார்வை இடுகின்ற அமைச்சர் அதற்குப் பொறுப்பில்லையா? அந்த அமைச்சரை மேற்பார்வையிடும் முதலமைச்சருக்குப் பொறுப்பில்லையா?'' -அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் கேள்விகளை முன்வைக்கிறார் தமிழன் பிரசன்னா.

நீதிபதி ரெகுபதி விசாரணையில்தான் பதில் கிடைக்க வேண்டும்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி