சகாயம் கிளப்பிவிட்ட கிரானைட் பூதம்... தமிழகத்தை உலுக்கி உச்ச நீதிமன்றம் வரை வழக்கு சென்றது. இப்போது சில அரசியல் புள்ளிகளின் திரைமறைவு பேரங்களால் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

கிரானைட் வழக்குகளை தனி நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவரும், நீர்பாசனத் துறை மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவருமான சோமசுந்தரத்திடம் இதுபற்றி பேசினோம். ''கிரானைட் வழக்குகள் அனைத்தும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும்போது, பி.ஆர்.பி குடும்பத்தினர் குவாரிக்குள் சென்றுள்ளனர். மேலூர் குற்றவியல் நீதிமன்றமும் அவர்களின் இயந்திரங்கள், பொக்லைன் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதி வழங்கியிருப்பதால், வேறு தொழிற்சாலைகளில் பினாமி பெயரில் பயன்படுத்தி வருகின்றனர். போலியான ஆவணங்கள் மூலம் வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, கற்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யபட்டுள்ளன. நாட்டின் இயற்கை வளம் தனி நபரால் சுரண்டப்பட்டுள்ள்து. கொள்ளை அடித்த பணத்தை எல்லாம் என்ன செய்தார்கள் என்று தேசிய வருவாய் புலனாய்வு துறை விசாரிக்கவேண்டும். இப்படி பல கோரிக்கைகள் வைத்தும், வழக்குகள் அப்படியே நிலுவையில் கிடக்கின்றன.

மதுரைக்கு புதியதாக வந்த எஸ்.பி விஜேயேந்திர பிதாரி கிரானைட் வழக்குகளை விஞ்ஞான முறையில் பதிவுசெய்யவில்லை என்று சொல்லியுள்ளார். இதுவரை போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்துக்கும் போலீஸ் துறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில், அதற்கான வேலைகளை போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் வைத்தே பார்த்து வந்தனர். ஆனால், இப்போது அந்த வேலைகள் அனைத்தையும் மேலூர் காவல் நிலையத்தில் வைத்தே பார்க்கின்றனர்.

பி.ஆர்.பி நிறுவனத்தின் ஆவணங்கள், பட்டா, ஆக்கிரமிப்பு இடங்களின் கோப்புகளை சரிசெய்யும் வேலையும், படுவேகமாக நடந்து வருகிறது. இதற்கென்றே பி.ஆர்.பி நிறுவனத்தில் தனியாக ஆட்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு வருவாய் மற்றும் காவல் துறையில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர்கள். இவர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பேரம் பேசி, கச்சிதமாக வழக்கை நீர்த்துப்போக வைக்கும் பணிகளில் மும்மரமாக உள்ளனர். இவர்களுக்குப் பணியாத அரசு ஊழியர்களைத் தனிப்பட்ட முறையில் மிரட்டியும் காரியம் செய்து வருகின்றனர். மீண்டும் அவர்கள் நிறுவனத்தை நடத்த அமைச்சர்களை அடிக்கடி சந்தித்து, நிறுவனத்தை திறக்க அனுமதி வாங்கிவிட மறைமுக பேரங்களும் நடந்துள்ளன'' என்றார்

முதல்வரின் கவனத்துக்கு!

- சண்.சரவணக்குமார்

படங்கள்: பொன்குன்றம்