Published:Updated:

சிலை கடத்தலில் சிக்கிய அறநிலையத்துறை அதிகாரிகள்! #VikatanExclusive

இ.லோகேஷ்வரி
சிலை கடத்தலில் சிக்கிய அறநிலையத்துறை அதிகாரிகள்! #VikatanExclusive
சிலை கடத்தலில் சிக்கிய அறநிலையத்துறை அதிகாரிகள்! #VikatanExclusive

கும்பகோணம், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் சிலைகள் கடத்தப்படுவது தொடர்பாக 3.1.2017 தேதியிட்ட சக்தி விகடன் இதழில் பதிவு செய்திருந்தோம். இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறையின் நான்கு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிலை கடத்தலில் சிக்கிய அறநிலையத்துறை அதிகாரிகள்! #VikatanExclusive

கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பாதுகாப்பற்ற கோயில்களின் சிலைகளை, பசுபதீஸ்வரர்  கோயிலின் சிலைகளோடு மற்ற கோயில்களின் சிலைகளையும் வைத்திருக்கிறார்கள். தற்போது, பிரகாரத்தில் சுரங்கப்பாதை போன்ற பாழடைந்த இடத்தில் சிலை பாதுகாப்பு மையம் அமைத்து, அங்கே சிலைகளை வைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் சிலைகள் பற்றிய முழுமையான விவரங்கள் இல்லை. ஏதேனும் சிலைகள் கணக்கில் குறைந்திருந்தால்கூட கண்டுபிடிப்பது சிரமம்தான். கிட்டத்தட்ட 200-க்கும் அதிகமான சிலைகள் இருந்ததாகவும் அவற்றில் சில காணாமல் போயிருக்க வாய்ப்பிருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, 31.12.16 அன்று பசுபதீஸ்வரர் கோயிலில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார், அறநிலையத்துறை ஆணையர் வீர சண்முகமணி.

சிலை கடத்தலில் சிக்கிய அறநிலையத்துறை அதிகாரிகள்! #VikatanExclusive

சிலைகள் காணாமல் போவதுகுறித்து வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரியாக, பொன்.மாணிக்கவேல் பொறுப்பேற்றதும் தஞ்சை மாவட்டக் கோயில்களில் நடக்கும் சிலை கடத்தல்களை விசாரிக்கத் தொடங்கினார். இந்நிலையில், தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் ஶ்ரீபசுபதீஸ்வரர் கோயிலில் கடத்தப்பட்ட ஆறு உலோகச் சிலைகள் வழக்கில்,  நான்கு அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை இணை ஆணையர் கஜேந்திரன், கும்பகோணம் துணை ஆணையர் ஞானசேகரன், கோயில் செயல் அலுவலர் காமராஜ் மற்றும் கோயிலின் தலைமை எழுத்தர் ராஜா ஆகிய நான்கு அறநிலையத்துறை அலுவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.