சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கலங்கரை விளக்கத்துக்கு அருகே மெரினா போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. அதாவது, ஒட்டுமொத்த தமிழ்நாடு போலீஸையும் கட்டுக்குள் வைத்திருக்கும் டி.ஜி.பி ஆபீஸுக்கு எதிரில்! ஊர் அடங்கியதும் என் பயணத்தைத் தொடங்கியபோது, திடீரென வந்த மழையால் அந்த ஸ்டேஷனில் ஒதுங்கினேன். ஆஸ்பெட்டாஸ் ஷீட் கட்டடத்தில் இருந்தது அந்தக் காவல் நிலையம். சாரல் உள்ளே வரை வந்தது. வாசலில் மழை நீரோடு, சாக்கடையும் தேங்கி நின்றது. டாய்லெட் வசதி எதுவும் இல்லை. ஆத்திர அவசத்துக்குக்கூட அங்கிருக்கும் போலீஸார் ஒதுக்குப்புறமான இடம் தேடித்தான் ஓடுகிறார்கள். ''போயஸ்கார்டனில் இருந்து கோட்டைக்குப் போகும் முதல்வர், பீச் ரோடு வந்ததும் இடது பக்கம்தான் எப்போதும் திரும்புவார். வலது பக்கம் திரும்பியிருந்தால், எங்க நிலைமை புரிஞ்சிருக்கும்...'' என்று வருத்தப்பட்டார் ஒரு காக்கிச்சட்டை. பரிதாபம்தான்!

செல் அலற, ரெய்ன் கோட்டுக்குள் மறைத்து வைத்திருந்த போனை எடுத்தேன், ஹாசினி. ''சேலத்துக்கு ஒரு முஸ்லிம் வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அங்கே எனக்குத் தெரிஞ்ச ஒருத்தன் வந்திருந்தான். ராத்திரி ட்ரெய்ன் ஏத்திவிடுறதுக்கு அவன்தான் ஸ்டேஷன் வந்தான். அப்போ அவன்கூட ஒரு பொண்ணு வந்திருந்தா. அவளை எனக்கு அறிமுகப்படுத்தி வெச்சான். அந்தப் பொண்ணோட நிலைமை ரொம்பவும் கொடுமையா இருந்துச்சு. ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஓமலூர் போற வழியிலதான் அந்தப் பொண்ணு தங்கியிருக்கா. வசதியில்லாத குடும்பம். பையன் ரெண்டாவது படிக்கிறான். வீட்டுக்குத் தினமும் யாராவது ரெண்டு பேரை அவ புருஷனே கூட்டிட்டு வந்துடுவானாம். ஆரம்பத்துல அந்தப் பொண்ணு இதுக்கு சம்மதிக்கலை. அப்புறம் வேற வழியில்லாம புருஷன் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டியதாகிடுச்சு. புருஷனை விட்டுட்டு வந்துடலாம்னு அந்தப் பொண்ணு யோசிக்குது. ஆனா, பையன் இருக்கானேன்னு எல்லாத்தையும் சகிச்சுகிட்டு இருக்குது. இந்த விஷயத்தை எப்படியோ போலீஸ் மோப்பம் பிடிச்சுட்டு, தேட ஆரம்பிச்சுட்டாங்க. அதனால, அடிக்கடி அந்தப் பொண்ணு, வீட்டை மாத்த ஆரம்பிச்சுட்டாங்களாம்!'' என்று ஹாசினி என்னிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே, கால் வெய்ட்டிங்கில், 'ரவிச்சந்திரன் பண்ணாரி’ என்று வந்தது.

''ஹாசினி... ஒரு அர்ஜென்ட் கால் வருது... நான் திரும்பக் கூப்பிடவா?'' என்று லைனை கட் செய்துவிட்டு, சத்தியமங்கலம் ரவிச்சந்திரனை அழைத்தேன். ''சிவபூஜையில கரடி புகுந்துட்டேனா?'' என்று சிரித்த ரவிச்சந்திரன், ''நீங்க வந்துட்டுப்போன மலைப்பாதையில் மாடு மேய்க்கப்போன ஒருத்தரைக் காணோம். ஊரே சிறுத்தை பயத்துல இருக்கு... நீங்க வர்றீங்களா?'' என்று கேட்டார். உடனே கிளம்பினேன்.

காளிதிம்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கோயில் பூசாரி ரேசன் என்பவர் (அவர் பெயரே அதுதான்!)

மாடு மேய்ப்பதற்காக திம்பம் காட்டுப் பகுதிக்குப் போயிருக்கிறார். அவரைக் காணாமல்தான் தேடிக்கொண்டு இருந்தார்கள். நான் அங்கே சென்றபோது ரேசன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்தார். சிறுத்தையின் கொடூரத் தாக்குதலில் ரேசன் உயிரிழந்துள்ளார். வனத்துறையினர் பிடித்த திம்பனின் ஜோடியான பெண் சிறுத்தைத்தான் ரேசனை வேட்டையாடியதாக அங்கே பேசிக்கொண்டனர்.

பண்ணாரி அம்மன் கோயிலில் தங்கள் மலைக் கிராமத்து மக்களை சிறுத்தையின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க இரவு நேர பூஜையில் பிஸியாக இருந்தனர். ''சத்தியமங்கலம் வனப்பகுதிகளை உள்ளடக்கிய புலிகள் காப்பகம் இது. புலித்தடங்களில் சிலசமயம் மனிதர்கள் தெரியாத்தனமாக போய் மாட்டிக்கொள்கிறார்கள். ரேசனை கொன்றது சிறுத்தை அல்ல... வேற ஏதோ புது மிருகம். அநேகமாக, கரடியாகக்கூட இருக்கும். அவரது உடலை மட்டும் போட்டுவிட்டு போய்விட்டது. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், ரேசனை கொன்றது எந்த மிருகம் என்பது தெரியும்'' என்றார் அங்கிருந்த வனத்துறை ஊழியர் ஒருவர்.

நான் வனத்துறை ஊழியரிடம் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்த அந்தக் கிராமத்து மக்கள் சிலர் என்னை ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்றனர். ''வனத்துறை ஆட்கள் சொல்றதை நம்பாதீங்க. அவங்க அப்பட்டமா பொய் சொல்றாங்க. மூணாவது தடவையாவும் சிறுத்தை அடிச்சு இன்னொருத்தர் செத்துட்டாருன்னு வெளியில தெரிஞ்சா அரசாங்கத்துக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதனாலதான் கரடி, புலின்னு சொல்லிட்டு இருக்காங்க. இதோ பாருங்க இவர்தான் கரடி கடிச்சு தப்பிச்சு வந்தவர்'' என்று ஒருவரை நம்முன் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர் உடல் முழுக்க காயத்தின் தழும்புகள்.

''கரடிகிட்ட இருந்து தப்பிக்கிறது ஈஸிங்க. கடிபட்டு ரத்தம் வந்தாலே, அது மிரண்டு ஓடிடும். இப்போ ரேசனை அடிச்சது கண்டிப்பா சிறுத்தைதான். இதுக்கு முன்னாடி சிறுத்தை அடிச்சு இறந்துபோனவங்க மாதிரிதான் ரேசனின் உடலிலும் காயங்கள் இருந்தன...'' என்று சாட்சியம் சொன்னார் கரடியிடம் கடி வாங்கியவர்.

27-வது ஹேர்பின் வளைவில் நாம் சந்தித்தது மலை கிராமவாசி ஒருவரை. அவர் நம்மிடம் சொன்ன தகவல்கள் அத்தனையும் புலியைப் பற்றியது. ''மெய்தாளபுரத்தில் இதுவரை ஏழு கன்றுகுட்டிகளை ராத்திரியில புலி காட்டுக்குள்ள தூக்கிட்டு போயிடுச்சு. காணாமல்போன நாய்கள் நூறுக்கும் மேல் இருக்கும். மான்கள் புழங்கும் இடம், தண்ணீர் வசதியுள்ள பகுதிகளை மையமாக வைத்து புலி தன்னோட எல்லையை நிர்ணயம் செஞ்சுக்கும். மருத மரத்துல தன்னோட கால் நகத்துல கீறி வெச்சுடும். ஒண்ணுக்குவிட்டு (யூரின்) வட்டம் போட்டு வைக்கும். இது மற்ற விலங்குகளுக்கு நல்லா தெரியும். புலி வட்டம்போட்ட இடத்துக்குள்ள சிறுத்தை வரக்கூடாது. அப்படி வந்தால், பெரிய சண்டை ஆகிடும். அதனாலேயே, புலி பாதையில் இருந்து சிறுத்தை விலகிப்போகும். அதனாலதான், காட்டுல சுத்த இடம் இல்லாம இப்படி ரோட்டுப் பகுதிக்கு சிறுத்தை வர ஆரம்பிக்குது. இப்போ இந்தக் காட்டுப்பகுதியில மிருகங்களுக்குள்ளே எல்லைச் சண்டை நடக்குது'' என்று சொல்லியபடி நகர்ந்தார். ஆனால், எனக்கு காலில் படபடப்பு அதிகம் ஆனது!