Published:Updated:

'இன்னைக்கு நீ எங்க வீட்டுலயே தங்கிக்கோ சோமு...'

'இன்னைக்கு நீ எங்க வீட்டுலயே தங்கிக்கோ சோமு...'

'இன்னைக்கு நீ எங்க வீட்டுலயே தங்கிக்கோ சோமு...'

'ஊரும் நீயேதான் உறவெல்லாம் நீயேதான்

உயிருடல் எல்லாமே நீயேதான்

அந்த தேக சுகம் வாழ்க்கையின்னு எண்ணாதே...

இப்போ தாலாட்டும் தாயானேன் உன்னாலே...

முகம் வாடாம பார்த்திருப்பேன் முன்னாலே...

பட்டு வண்ண ரோசாவாம்... பார்த்த கண்ணு மூடாதாம்!’ - ஹாசினியின் போனை அட்டன் செய்ததும் இந்தப் பாட்டுதான் கேட்டது. பாட்டு முடிந்த பிறகுதான் ஹலோ சொன்னார் ஹாசினி. போன் பண்ணிட்டு என்ன பாட்டை ஓடவிட்டுருக்கே என்று கேட்டேன். ''இப்போ நான் சொல்லப்போற விஷயத்துக்கும் இந்தப் பாட்டுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. நேர்ல வா... நான் எக்மோர் ஸ்டேஷனுக்கு எதிர்ல வசந்தபவன் ஹோட்டல்கிட்ட வெய்ட் பண்றேன்!'' என்று சொல்ல... நானும் பக்கத்துலதான் இருக்கேன் என்று அடுத்த சில நிமிடங்களில் ஹாசினி முன்பு ஆஜரானேன்.

'இன்னைக்கு நீ எங்க வீட்டுலயே தங்கிக்கோ சோமு...'

எக்மோர் ஸ்டேஷனில் ஏழாவது பிளாட்பாரத்துக்குள் இறங்கி நடந்தோம். சேலம் எக்ஸ்பிரஸ் கிளம்பத் தயாராக இருந்தது. அதிக கூட்டம் இல்லாத அந்த பிளாட்பாரத்தில் உட்கார்ந்தோம்.  'கன்னிப்பருவத்திலே’ படத்தோட பாட்டைப் போட்டு ஏதோ சொல்ல வந்த... என்று ஆரம்பித்தேன்.

''அந்தப் படத்துல வடிவுக்கரசி - ராஜேஷ் புதுமணத் தம்பதி. ஒரு விபத்துல ராஜேஷ§க்கு ஆண்மை போயிடும். இதைத் தெரிஞ்சுக்கிட்டு வடிவுக்கரசியை அடைய பயங்கரமா ரூட் போடுவாரு பாக்யராஜ். சம்பவங்கள் எல்லாமே விறுவிறுன்னு இருக்கும். கிட்டத்தட்ட அதே முக்கோண கேரக்டர்ஸ்தான் நான் சொல்லப்போறதும். எனக்குத் தெரிஞ்ச போலீஸ் ஆபீஸரைப் பார்க்க சோமுங்குற ஐ.டி இன்ஜினீயர் ஒருத்தர் வந்திருக்காரு. 'ஈ.சி.ஆர் ரோட்டுல அடுக்குமாடி குடியிருப்புல இருக்கிற விஸ்வா- சங்கீதா தம்பதி தனக்கு 'நெட்'டுல ஃப்ரெண்ட் ஆனதாகவும் தன்னை ஏமாத்தி பல லட்ச ரூபாய் பணத்தைப் பிடுங்கிட்டதாகவும், அதுக்கப்புறம் அவுங்களைத் தொடர்புகொள்ளவே முடியலை’னு வாய்மொழியாகப் புகார் சொல்லியிருக்கார். சோமுகிட்ட தனியா விசாரிச்சப்போ... பல திடுக்கிடும் விஷயங்கள் தெரியவந்துச்சாம். அதான், உன்னை வரவழைச்சேன்'' என்று நிறுத்தினார்.

''அப்படியா... ஏதாவது கள்ளக்காதல் விவகாரமா... இதுக்குத்தான் இவ்வளவு பில்ட்அப் கொடுத்தியா'' என்று எழுந்தேன்.

''இல்லைப்பா... இது வேற. சொல்றேன் கேளேன்'' என்று ஆரம்பித்தாள். ''விஸ்வா - சங்கீதா தம்பதி, சினிமா ஸ்டார்ஸ் மாதிரி இருப்பாங்க. சென்னை தொழில் அதிபர்கள் புடைசூழ அவங்களோட மேரேஜ் கோலாகலமா நடந்திருக்கு. ரெண்டு பேரும் ரொம்பவும் அந்யோன்யமா இருந்திருக்காங்க. தெனமும் விஸ்வா கிளம்பும்போது பார்க்கிங் வரைக்கும் வந்து அனுப்பிட்டுதான் சங்கீதா கிளம்புவாங்க. கொஞ்ச நாளைக்குப் பிறகுதான் விஸ்வா 'ஹோமோ’ என்பது தெரிஞ்சிருக்கு. அவங்க ரெண்டு பேருக்குள்ள எந்த நல்லதும் நடக்கலை. ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாவே புரிஞ்சு வெச்சிருந்தாங்க. ரெண்டு பேரோட குடும்பத்துலயும் 'என்ன சங்கீதா எதாவது விசேஷமா...’ என விசாரிக்க ஆரம்பித்ததும்தான் சங்கீதாவுக்கு உறைத்தது.

விஸ்வாவிடம் சண்டை போட்டிருக்கிறார் சங்கீதா. அதற்குப் பிறகு, விஸ்வா போட்ட பிளானைக் கேட்டதும் நான் ஆடிட்டேன். அதுக்கு அந்தப் பொண்ணையும் சம்மதிக்க வெச்சிருக்கான். பெரிய கொடுமையா இருக்கு...'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே டீ விற்கும் பையன் வந்தான். அவனிடம் இரண்டு டீ வாங்கினோம்.  டீயை உறிஞ்சியபடியே ஹாசினி தொடர்ந்தார்.

''இன்டர்நெட்ல இதுமாதிரி ஆட்களுக்காகவே இருக்கும் வெப்-சைட் ஒண்ணுல 'திரீ சம்'ங்கிற ரகசிய பாஷையில விளம்பரம் கொடுத்திருக்கார் விஸ்வா. 'எனக்கும் என் மனைவிக்கும் ஆட்கள் தேவை!’ என்ற அர்த்தத்தில் அந்த விளம்பரம் ஆங்கிலத்தில் இருந்திருக்கு. அதைப் பார்த்த சோமுங்ற அந்த ஐ.டி இன்ஜினீயர் போன்ல பேசியிருக்கார். அவரை ஒரு ஹோட்டலுக்கு வரவழைச்சாங்களாம். அவருக்கிட்ட விஸ்வாவும், சங்கீதாவும் நிறைய பேசியிருக்காங்க. முதல் சந்திப்பில் எதுவும் பேசலை. அவரைப் பற்றிய தகவலை மட்டும் விசாரிச்சுட்டு அனுப்பிட்டாங்க. அதுக்குப் பிறகு சங்கீதா மட்டும் அவர்கூட நிறைய தடவை போன்ல பேசியிருக்காங்க. எதாவது ஒரு ஹோட்டலுக்கு சங்கீதா வரச் சொல்வாராம். அங்கே போனால் தன் கணவரோடு வந்திருப்பார். மூவரும் உட்கார்ந்து பேசி, சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவார்களாம். இப்படி மூணு மாசம் ஓடியிருக்கு.

அதுக்குப் பிறகு ஒருநாள் ராத்திரி வெளியே சாப்பிட்டுவிட்டு திரும்பிவர லேட் ஆகியிருக்கு. 'இன்னைக்கு நீ எங்க வீட்டுலயே தங்கிக்கோ சோமு...’ என்று சொல்லியிருக்கிறார் விஸ்வா. சோமுவும் அங்கே தங்க... அன்று இரவுதான் அத்தனை அசிங்கமும் அரங்கேறியிருக்கிறது. அவர்களின் பெட்ரூமில் சோமுவை படுக்கச் சொல்லியிருக்கிறார்கள். சோமு படுத்த பிறகு சங்கீதா ஒரு பக்கமும், விஸ்வா இன்னொரு பக்கமுமாக வந்து படுத்துக் கொண்டார்களாம். அதுக்குப் பிறகு என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியாதுப்பா...'' என்று வெட்கப்பட்டார் ஹாசினி.

''வெட்கப்பட்டது போதும்... விஷயத்தைச் சொல்லு!'' என்று செல்ல கோபம் காட்டினேன். ''இப்படியே பல நாள் ஓடியிருக்கு. அதுக்குப் பிறகு ஒருநாள் ராத்திரியோட ராத்திரியாக விஸ்வா வீட்டை மாத்திட்டுப் போயிட்டாராம். அவங்க ரெண்டு பேரோட செல்போனும் ஆஃப் செய்யப்பட்டு இருந்திருக்கு. அவங்க குடியிருந்த அபார்ட்மென்ட்ல விசாரிச்சப்போ, 'அந்தப் பொண்ணு கர்ப்பமா இருக்கு... செக் அப்க்காக அம்மா வீட்டுக்குப் போயிட்டாங்க...’ என்று சொல்லியிருக்காங்க. விஸ்வா வேலை பார்த்த கம்பெனியோட போன் நம்பரைப் பிடிச்சு, சோமு பேசியிருக்காரு. 'இனிமே எங்கப் பக்கம் வராதே... வேற ஏதாவது ட்ரை பண்ணினே நடக்குறதே வேற. உனக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் எதிர்காலத்துல இருக்கக் கூடாது. அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது!’ என்று சோமுவை பேசவே விடாமல் பேசியிருக்கிறார் விஸ்வா. சோமுவால சங்கீதாவைப் பார்க்காம இருக்க முடியலையாம். அந்த வருத்தத்துலதான் போலீஸுக்கு வந்திருக்காரு. சங்கீதாவோட வயித்துல வளரும் குழந்தை என்னோட குழந்தை என்றெல்லாம் சொல்லியிருக்காரு.''

அந்த போலீஸ் ஆபீஸர் என்ன சொன்னாராம் என்று கேட்டேன்.

''என்ன சொல்வார்? 'அவங்க புகார் கொடுத்தா உன்னைத்தான் தூக்கி உள்ளே வைக்க வேண்டியிருக்கும். இதெல்லாம் உனக்குத் தேவையாடா...’னு திட்டி அனுப்பியிருக்காரு. அப்போ, 'கன்னிப் பருவத்திலே’ படத்துல புருஷனுக்குப் பிரச்னை என்று தெரிஞ்சும், வேலி தாண்டாத தமிழ்ப் பெண்ணைக் காட்டியிருப்பாங்க. ஆனா, இப்போ எப்படியெல்லாம் நடக்குது பாரு...'' என்று ஹாசினி சொல்லி முடித்தார்.

தர்மபுரி பக்கத்துல நிதி நிறுவனம் நடத்திட்டு இருந்த ஒருத்தர் தன்னிடம் கடன் வாங்கிய பெண்கள்கிட்ட தப்பா நடந்த விஷயம் பற்றி பேப்பர்ல வந்துட்டு இருக்கு இல்லையா... அந்த நிதி நிறுவன அதிபரோட லீலைகள், இப்போ அந்த மாவட்டத்துல சி.டி-யாக விற்பனைக்கு வந்திருக்கு. ஒரு சி.டி 300 ரூபாய் வரைக்கும் விற்குறாங்களாம். மொத்தத்துல நம்ம ஊரு இப்போ ரொம்ப கெட்டுப்போச்சு... என்று நான் சொன்னதும், ''அதனாலதான் சொல்றேன்... மணி 12 ஆகிடுச்சு. என்னை வீடு வரைக்கும் டிராப் பண்ணிட்டு கிளம்பு...'' என்று ஹாசினி எழ... நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.

-அலைவோம்!