Published:Updated:

ஓசூர்: 14 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்; போக்சோ பாயுமென அச்சத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நபர்!

மரணம்

தந்தை வழி உறவினரான முனிரத்தினம் 14 வயது சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியிருக்கிறார்.

ஓசூர்: 14 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்; போக்சோ பாயுமென அச்சத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நபர்!

தந்தை வழி உறவினரான முனிரத்தினம் 14 வயது சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியிருக்கிறார்.

Published:Updated:
மரணம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள கிராமத்தில், 14 வயது சிறுமி அரசுப் பள்ளியில் பயின்றுவருகிறார். சிறுமியின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், அவரை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் சென்ற அவருடைய பெற்றோருக்கு, தன்னுடைய மகள் 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. அவர்கள் தங்கள் மகளிடம் விசாரித்தபோது, தந்தை வழி உறவினரான கூலித்தொழிலாளி முனிரத்தினம் (44), சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதுடன், வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில், ‘போக்சோ வழக்கு பாயும், கைதுசெய்யப்பட்டுவிடுவோம்’ என்ற அச்சத்தில் முனிரத்தினம் தலைமறைவாகிவிட்டார் எனக் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை.
பாலியல் வன்கொடுமை.

போலீஸார் அவரைத் தேடி வந்த நிலையில், குற்ற உணர்வில், கர்னூர் அருகிலுள்ள வனப்பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அந்தக் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராணியிடம் பேசினோம், ‘‘தந்தை வழியில் நெருங்கிய உறவினரான முனிரத்தினம், சிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி மிரட்டியிருக்கிறார்.

விஷயம் வெளியில் வந்ததும், வழக்குக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டார். அந்தச் சிறுமியும், முனிரத்தினத்தின் மகனும் ஒரே பள்ளியில்தான் படிக்கின்றனர். தற்போது, சிறுமியை மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பிவைத்திருக்கிறோம். அவருக்கு உரிய மருத்துவ ஆலோசனை, மனநல ஆலோசனை வழங்கப்படும்’’ என்றார்.