Published:Updated:

பெங்களூரு: பைக் டாக்ஸியில் பயணித்த கேரள இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பெண் உட்பட மூவர் கைது

இளம்பெண் பாலியல் வன்கொடுமை

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸார் நம்மிடம் கூறுகையில், ‘‘சஹாபுதீன், அக்தார் கேரளப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும்போது, அந்த அறையில் அக்தாரின் தோழியும் இருந்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை செய்ய அப்பெண்ணும் இவர்களுக்கு உதவியிருக்கிறார்’’ என்றனர்.

பெங்களூரு: பைக் டாக்ஸியில் பயணித்த கேரள இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பெண் உட்பட மூவர் கைது

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸார் நம்மிடம் கூறுகையில், ‘‘சஹாபுதீன், அக்தார் கேரளப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும்போது, அந்த அறையில் அக்தாரின் தோழியும் இருந்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை செய்ய அப்பெண்ணும் இவர்களுக்கு உதவியிருக்கிறார்’’ என்றனர்.

Published:Updated:
இளம்பெண் பாலியல் வன்கொடுமை

நாடு முழுவதிலும், குறிப்பாக சென்னை, மும்பை, பெங்களூரு உட்பட பெருநகரங்களில், ‘ஓலா’, ‘ரேபிடோ’ என பல வாடகை பைக், கார் சேவைகள் உள்ளன. இவற்றில் பயணிக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பில்லை. பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன எனப் பல பெண்கள் புகார் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரில் ‘ரேபிடோ’ பைக் சர்வீஸ் மூலம் புக் செய்து பயணித்த பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பைக்
பைக்

கேரளாவைச் சேர்ந்த, 22 வயது பெண் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் தங்கி, பி.எம் லேஅவுட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். கடந்த, 24-ம் தேதி இதே பகுதியிலுள்ள தன் நண்பர் வீட்டுக்குச் சென்று அவர் மது அருந்தியதாகச் சொல்லப்படுகிறது. பிறகு, அங்கிருந்து நீலாத்திரி பகுதியிலுள்ள தன் வீட்டுக்குச் செல்ல, ’ரேபிடோ’ பைக் டாக்ஸி புக் செய்தபோது, டிரைவர் சஹாபுதீன் (26) என்பவர், அந்தப் பெண்ணை பிக்அப் செய்து அவரின் இடத்துக்கு பைக்கில் கூட்டிச் சென்றார்.

குற்றவாளிகள் சஹாபுதீன், அக்தார்.
குற்றவாளிகள் சஹாபுதீன், அக்தார்.

அப்போது, அந்தப் பெண் மது போதையில் ‘சிகரெட் வாங்க வேண்டும்’ எனக் கேட்டிருக்கிறார். அவர் போதையில் இருப்பதைத் தெரிந்துகொண்ட சஹாபுதீன், தன் நண்பரான அக்தருக்கு (24) போன் செய்து தகவலைச் சொன்னதும், பெண்ணை வன்கொடுமை செய்ய இருவரும் திட்டமிட்டனர். சஹாபுதீன் அந்தப் பெண்ணை தான் வசிக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்று, இருவரும் அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மயக்க நிலையிலிருந்த அந்தப் பெண் கண்விழித்ததும் வலியை உணர்ந்து, நண்பர்களிடம் இந்தச் சம்பவத்தைக் கூறிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். பிறகு, எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். விசாரணை நடத்திய போலீஸார், சஹாபுதீன், அக்தார், அவரின் தோழி ஒருவர் என, மூவரைக் கைதுசெய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மூவரும் பீஹாரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸார் நம்மிடம் கூறுகையில், ``சஹாபுதீன், அக்தார் கேரளப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்யும்போது, அந்த அறையில் அக்தாரின் தோழியும் இருந்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை செய்ய அந்தப் பெண்ணும் இவர்களுக்கு உதவியிருக்கிறார். இவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. சஹாபுதீன், அக்தார் இதற்கு முன்பு இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டார்களா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்படுகிறது’’ என்றார்.