Published:Updated:

`அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூடாது; பேசக்கூடாது'-பெரியப்பாவின் காலைத் துண்டித்த இளைஞர்

Muthupandi
Muthupandi

அவர்களிடம் பேசக்கூடாது, பழகக்கூடாது எனப் பலமுறை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், முருகனை சட்டை செய்யாத முத்துபாண்டி தொடர்ந்து தன் நண்பர்களுடன் பேசிவந்துள்ளார்.

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் முத்துபாண்டி. 68 வயதான இவரும், இவரின் சகோதரர் குடும்பமும் கேரளாவின் மலைப்பகுதியான மறையூர் பகுதியில் உள்ள காந்தளூர் பகுதியில் தங்கி டீ எஸ்டேட்டில் வேலைபார்த்து வந்துள்ளனர். இதற்கிடையே, முத்துபாண்டி அங்குள்ள மற்ற தமிழ் மக்களுடன் சகஜமாகப் பழகிவந்ததாகக் கூறப்படுகிறது. இதர சமுதாய மக்கள் என்றாலும் அவர்கள் வீட்டுக்குச் செல்வது, உணவு உண்பது என நட்புடன் அவர் பழகி வந்துள்ளார்.

Crime
Crime

இதனால் முத்துபாண்டியைத் தேடி சிலர் அவ்வப்போது அவரது வீட்டுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முத்துபாண்டி மற்ற சமுதாய மக்களிடம் பேசுவது, அவர்கள் வீட்டில் சாப்பிடுவது, அவரின் சகோதரரின் மகன் முருகன் (28) என்பவருக்குப் பிடிக்கவில்லை. இதனால், அவர்களிடம் பேசக் கூடாது, பழகக் கூடாது எனப் பலமுறை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், முருகனை சட்டைசெய்யாத முத்துபாண்டி தொடர்ந்து தன் நண்பர்களுடன் பேசிவந்துள்ளார்.

Vikatan

இதனால், ஆத்திரத்துடன் இருந்துள்ளார் முருகன். இதற்கிடையே நேற்று காலை 10 மணியளவில் தேண்டிக்கொம்பு பகுதியில் உள்ள கடையில் முத்துபாண்டி அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கு கத்தியுடன் வந்த முருகன், `மற்ற சாதியினர் வீட்டுக்கு போகாதே என்றால் கேட்க மாட்டாயா' என்று கூறிக்கொண்டே அவரது வலது காலை துண்டாக வெட்டியுள்ளார். வலியில் முத்துபாண்டி அலறியுள்ளார். பொதுமக்கள் முன்னிலையில் இந்தக் கொடூர சம்பவம் நடந்தபோதிலும், பயத்தில் அவரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

Crime
Crime

பின்னர் முருகன் அங்கிருந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் அறிந்துவந்த மறையூர் போலீஸ் முத்துபாண்டியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உரிய சிகிச்சை மூலம் அவரை குணமாக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேல்சிகிச்சைக்காக முத்துபாண்டி கோயம்புத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின்பேரில் முருகனை போலீஸார் தேடிவருகின்றனர்.

 `குல்லா போடும் போலீஸ் நான் கிடையாது!'- ஆளும்கட்சி பிரமுகரைத் தெறிக்கவிட்ட கேரள எஸ்.ஐ!
அடுத்த கட்டுரைக்கு