Published:Updated:

புதுக்கோட்டை: தைலமரக்காட்டுக்குள் கிடந்த இளம்பெண் சடலம்... பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா?

பஸ் மறியல்

பழனியம்மாளின் உடலைப் பார்த்து மகள்கள் 4 பேரும் கதறி அழுத காட்சி, அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை: தைலமரக்காட்டுக்குள் கிடந்த இளம்பெண் சடலம்... பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா?

பழனியம்மாளின் உடலைப் பார்த்து மகள்கள் 4 பேரும் கதறி அழுத காட்சி, அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Published:Updated:
பஸ் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன் பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் திருச்செல்வம். இவர் மலேசியாவில் வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி பழனியம்மாள் (35). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் பழனியம்மாள் கிடைக்கவில்லை. இதையடுத்து பழனியம்மாளின் தந்தை தங்கவேல், கறம்பக்குடி போலீஸில் புகார் அளித்தார். கறம்பக்குடி போலீஸார் வழக்கு பதிவுசெய்து பழனியம்மாளை தேடிவந்தனர். 

இந்த நிலையில் தான், பல்லவராயன் பத்தை ஊராட்சி தொம்பரான்பட்டி கிராமத்திலுள்ள தைலமரக்காட்டில் உடைகள் அலங்கோலமாக, அழுகிய நிலையில் ஒரு பெண் சடலமாகக் கிடப்பதாக கறம்பக்குடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.  அந்தச் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், காணாமல்போன பழனியம்மாள்தான் அது என்பது தெரியவந்தது.

பழனியம்மாள்
பழனியம்மாள்

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பழனியம்மாளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவருடைய உடலைப் பார்த்து உறுதிசெய்தனர். பழனியம்மாளின் உடலைப் பார்த்து மகள்கள் நான்கு பேரும் கதறி அழுத காட்சி, அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பழனியம்மாளின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம், குற்றவாளிகளை  உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையிலுள்ள புதுப்பட்டியில் அவருடைய  உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

சம்பவ இடத்துக்கு வந்த ஆலங்குடி டி.எஸ்.பி தீபக் ரஜினி,  உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பழனியம்மாள் இறப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியதையடுத்து, அவர்கள் மறியலைக் கைவிட்டுச் சென்றனர்.

காவல்துறை
காவல்துறை

இதையடுத்து, பழனியம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மலேசியாவிலிருநது வந்த திருச்செல்வம், மனைவியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்வதோடு குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். இதற்கிடையே, பழனியம்மாள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

மேலும் ஆத்தங்கரைவிடுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இவரின் வீட்டுக்கு வந்ததாகவும், அடிக்கடி தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. அவரைப் பிடித்து போலீஸ் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அதோடு, சந்தேகத்தின் பேரில் வெண்ணவால்குடியைச் சேர்ந்த மற்றோர் இளைஞரையும் பிடித்து விசாரித்துவருகின்றனர்.