Published:Updated:

6 மாத நாய்க்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த உணவு டெலிவரி ஊழியர்! - மும்பையில் அதிர்ச்சி

கைது ( சித்திரிப்புப் படம் )

மும்பையில் தெருநாயைப் பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.

6 மாத நாய்க்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த உணவு டெலிவரி ஊழியர்! - மும்பையில் அதிர்ச்சி

மும்பையில் தெருநாயைப் பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
கைது ( சித்திரிப்புப் படம் )

வளர்ப்பு பிராணிகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. குறிப்பாக, தெருநாய்களை அடித்து துன்புறுத்துவது அதிக அளவில் நடந்துவருகிறது. மும்பையில் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. மும்பை பவாய் பகுதியில் மினு சேத் என்ற பெண் தெருநாய்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார். இவருக்கு மும்பை விலங்குகள் நலத் தலைவர் விஜய் வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் வாலிபர் ஒருவர் நாய் ஒன்றைப் பாலியல் வன்கொடுமை செய்வது இடம்பெற்றிருந்தது. இது குறித்து விசாரித்தபோது, பவாய் ஹிரா பென்னா மாலின் பால்கனியில் இந்தக் கொடுமையான சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. பிறந்து ஆறு மாதங்களேயான நாய்க்குட்டியை உணவு டெலிவரி செய்யும் ஆகாஷ் (25) என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அந்த மாலில் ரெஸ்டாரன்ட் ஒன்று இருக்கிறது. இந்த ரெஸ்டாரன்ட்டில் பணிபுரியும் ஊழியர்கள் நாய் ஒன்றை வளர்த்துவந்தனர்.

6 மாத நாய்க்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த உணவு டெலிவரி ஊழியர்! - மும்பையில் அதிர்ச்சி

அந்த நாய் அவர்கள் கொடுக்கும் சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தங்கிக்கொண்டது. அந்த ரெஸ்டாரன்ட்டுக்கு உணவை டெலிவரி எடுத்துச்செல்ல வரும் வாலிபர் ஒருவர் இந்த நாயைப் பார்த்தார். அவர் அந்த நாயை ரெஸ்டாரன்ட்டின் பால்கனிக்கு கூட்டிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதை மற்றொரு டெலிவரி பாய் பார்த்து அதை வீடியோ எடுத்து சக ஊழியர்களுக்கு அனுப்பிவைத்தார். அந்த வீடியோ ஒவ்வொருவருக்காகப் பகிரப்பட்டு இறுதியில் மும்பை விலங்குகள் நல ஆர்வலர்கள் சங்கத் தலைவர் விஜய்க்கு வந்தது. சம்பவம் பவாயில் நடந்ததால் அந்த வீடியோவை மினு சேத்துக்கு அனுப்பி போலீஸில் புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அந்த வீடியோவைப் பார்த்த பிறகுதான் தெரு நாய்களுக்கு சாப்பாடு போடும்போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நாய்க்கும் மினு சேத் உணவளித்தது தெரியவந்தது.

கைது
கைது

மேலும், அந்த வாலிபர் பல நாள்களாக அந்த நாயைப் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து அந்த வாலிபரைக் கைதுசெய்தனர். இது குறித்து மினு, ``டெலிவரி பாய்களை நாம் நம்பி நமது வீட்டு வாசல் வரை அனுமதிக்கிறோம். இது போன்ற டெலிவரி பாய்களின் நடத்தையை முழுமையாக ஆய்வு செய்து பணியில் சேர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார். இதே பகுதியில் கடந்த ஆண்டும் ஒரு நாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது.