Published:Updated:

குளிக்கச் சென்ற இளைஞர்கள்... உறை கிணற்றில் பச்சிளம் குழந்தை! -தேனி அதிர்ச்சி

பச்சிளம் குழந்தை
பச்சிளம் குழந்தை

வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணற்றில், பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் கிடந்த சம்பவம், தேனி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது குன்னூர் கிராமம். வைகை ஆற்றின் நடுவே, குடிநீர் தேவைக்காக சில உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆற்றில் குளிப்பது வழக்கம்.

குழந்தையின் சடலத்தை மீட்டுக் கொண்டுவரும் தீயணைப்புத் துறையினர்
குழந்தையின் சடலத்தை மீட்டுக் கொண்டுவரும் தீயணைப்புத் துறையினர்

இன்று காலை, ஆற்றில் குளிக்கச் சென்ற சிலர், உறைகிணறு ஒன்றினுள், இறந்த நிலையில் குழந்தை கிடப்பதைப் பார்த்துள்ளனர். உடனே, ஊர்க்காரர்களிடம் இந்த விசயத்தைத் தெரியப்படுத்தவே, கானாவிலக்கு காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

`குட்கா வாங்கப்போறேன்!’ - தேனி போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த மதுரை நபர்

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர், கிணற்றின் உள்ளே இறங்கி குழந்தையின் சடலத்தை எடுப்பதற்காக, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தேனி தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து, உறைகிணற்றின் உள்ளே இறங்கி குழந்தையின் சடலத்தை மீட்டனர்.

குழந்தையின் சடலத்தை மீட்டுக் கொண்டுவரும் தீயணைப்புத் துறையினர்
குழந்தையின் சடலத்தை மீட்டுக் கொண்டுவரும் தீயணைப்புத் துறையினர்

இது தொடர்பாக கானாவிலக்கு போலீஸார் கூறும்போது, “பிறந்து இரண்டு நாள்களே ஆன ஆண் குழந்தை. குழந்தையின் தொப்புள் கொடியில் கிளிப் இருந்தது. அப்படியென்றால், தொப்புள்கொடி காயும் முன்னரே குழந்தையை உறைகிணற்றில் வீசியுள்ளனர். நல்ல ஆரோக்கியமான குழந்தை. எப்படி கிணற்றில் போட மனம் வந்ததோ தெரியவில்லை. இதை யார் செய்தது... ஏன் செய்தனர், குழந்தையின் பெற்றோர் யார் என விசாரணை செய்துவருகிறோம்” என்றனர்.

`சோதனைக்காக வாகனத்தை நிறுத்திய போலீஸார்; பேரிகார்டில் முட்டிக்கொண்ட இளைஞர்!’- தேனி அதிர்ச்சி
அடுத்த கட்டுரைக்கு