Published:Updated:

தென்காசி: அசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை! - மாணவி எழுதிய கடிதம் சிக்கியது

தற்கொலை

கல்லூரியில் படிக்கும் மாணவியை ஆசிரியர் தேவையின்றி திட்டியதால் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது

தென்காசி: அசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை! - மாணவி எழுதிய கடிதம் சிக்கியது

கல்லூரியில் படிக்கும் மாணவியை ஆசிரியர் தேவையின்றி திட்டியதால் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது

Published:Updated:
தற்கொலை

கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கடந்த 2000 ஆண்டு முதல் மனோ கல்லூரி மற்றும் உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அதன்படி, தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மனோ கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்தக் கல்லூரியில் ஒரு மாணவி தற்கொலை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கல்லூரியில் தென்காசி மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் பிரியா, பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அந்த மாணவியிடம் செல்போன் கிடையாது. ஆனால் சக மாணவி ஒருவரின் செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செல்போன் விவகாரம் தொடர்பாக மாணவி பிரியாவைக் கண்டித்த கல்லூரியின் ஆசிரியர், பேராசிரியை அவரை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார்கள். மாணவி பிரியா தன்னிடம் செல்போன் கிடையாது என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஆசிரியர்கள் கேட்கவில்லை என சொல்லப்படுகிறது.

தற்கொலை
தற்கொலை

அதனால் அவரை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்குமாறு மறுபடியும் வற்புறுத்தியுள்ளனர். அதனால் அவர் ஆசிரியர்களிடம் தான் தவறு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், ஆசிரியர்கள் அவரை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்காததற்காகக் கண்டித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாணவியை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்குமாறு ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் இன்று கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். பின்னர் அவர் வீட்டிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி எழுதிய கடிதத்தின் ஒருபகுதி
மாணவி எழுதிய கடிதத்தின் ஒருபகுதி

தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில், தனது மரணத்துக்குக் கல்லூரியின் ஆசிரியரும் ஆசிரியையுமே காரணம் என அவர்களது பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் புளியங்குடி போலீஸார், மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவியின் தற்கொலை பற்றி அறிந்ததும் அந்த பேராசிரியர்கள் இருவரும் இன்று கல்லூரிக்கு வருகை தரவில்லை. ஆனாலும், கல்லூரி மாணவ, மாணவிகள், உயிரிழந்த மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் புளியங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism