Published:Updated:

``அமானுஷ்யத்தில் நம்பிக்கை இல்லை!'' - 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் குடியேறிய தில் டாக்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்த வீட்டில் குடியேறிய டாக்டர்
டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்த வீட்டில் குடியேறிய டாக்டர்

டெல்லியில் பூத் பங்களா என்று அழைக்கப்பட்ட 11 பேர் தற்கொலை செய்த வீட்டில் டாக்டர் குடும்பம் தைரியமாகக் குடியேறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லி, சாந்த் நகரிலுள்ள புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். இவரின் சகோதரர் லலித் பாட்டியா. இவர்கள் குடும்பத்தினர் அனைவருமே மெத்தப் படித்தவர்கள். ஆயினும் மூடநம்பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இவர்கள் குடும்பத்தில் உள்ள 11 பேருமே தற்கொலை செய்துகொண்டனர். 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தனர். நாராயணிதேவி என்ற மூதாட்டி மட்டும் தரையில் படுத்தநிலையில் இறந்து கிடந்தார்.

தற்கொலை செய்துகொண்டவர்கள்
தற்கொலை செய்துகொண்டவர்கள்
`பேய்கள் ஆய்வு பற்றிய படிப்பு;  ஆயுர்வேத முறைகள்!’ - அறிமுகப்படுத்தும் பனாரஸ் பல்கலைக்கழகம்

தற்கொலை செய்துகொண்ட இவர்கள் அனைவருமே வித்தியாசமான வழிபாட்டு பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். வீட்டுக்குள்ளேயே பல சின்னஞ்சிறிய கோயில்களைக் கட்டிவைத்து வழிபட்டு வந்துள்ளனர். இவர்களது வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியிலிருந்து பல அமானுஷ்ய விஷயங்களை, இந்தக் குடும்பம் நம்பிக்கொண்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, குடும்ப உறுப்பினர் அனைவரும் மோட்சத்தை அடைவதற்காகத் தற்கொலை முடிவு எடுத்துள்ளனர். அதற்காக 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்தே ஒட்டு மொத்தமாகத் தற்கொலை செய்துகொள்ள தயாராகி வந்துள்ளனர்.

இறந்துபோனவர்களின் அறையிலிருந்து வீட்டின் வெளிப்புறத்தை நோக்கி 11 குழாய்கள் அமைக்கப்பட்டருந்தன. இந்தக் குழாய்களின் வழியே 11 பேரின் ஆன்மாக்களும் மோட்சத்துக்குச் செல்லும் என்றும் அவர்கள் நம்பியுள்ளனர். மேலும், இறந்தவர்களின் கண்கள் கறுப்புத்துணி கொண்டு கட்டப்பட்டிருந்தது. வாயிலும் டேப் கொண்டு ஒட்டப்பட்டிருந்தது. இறந்தவர்களில் இருவர் சிறார்கள். இவர்களின் கால்கள் கயிற்றால் ஒருசேர கட்டப்பட்டிருந்தன. போலீஸார் விசாரணையில், "தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில், பூவுலக வாழ்வை முடித்துக்கொண்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருசேர மோட்சத்தை அடைவதற்கான முயற்சியாகவே இந்தத் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது'' என்பதும் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்படவில்லை என்பது உறுதியானது.

11 பேர் தற்கொலை செய்த வீடு
11 பேர் தற்கொலை செய்த வீடு

ஒரே வீட்டில் 11 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அதற்குப் பிறகு அந்த வீட்டுக்குக் குடியேற யாரும் முன் வரவில்லை. இந்த வீட்டை 'பேய் வீடு' என்று அக்கம்பக்கத்தினர் அழைத்தனர். அதோடு, இரவு நேரத்தில் வீட்டின் அருகேகூட செல்லவும் மக்கள் பயந்தனர். இறந்துபோனவர்களின் உறவினரான தினேஷ் சாவந்த் என்பவரின் பராமரிப்பில் தற்போது இந்த வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு டாக்டர் மோகன்சிங் என்பவர் தற்போது குடி வந்துள்ளார். வீட்டின் அடித்தளத்தில் மருத்துவமனையையும் திறந்துள்ளார். நேற்று அதற்கான பூஜைகளும் நடத்தப்பட்டன. ஆவி நடமாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பிரத்யேக பூஜையும் நடத்தப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து டாக்டர் மோகன்சிங் கூறுகையில், ''எனக்கு மூட நம்பிக்கை இல்லை. 11 பேரும் தற்கொலை செய்துகொண்ட பிறகு, மக்கள் இந்த வீட்டைப் பற்றி பல வதந்திகளைக் கிளப்பி வருகின்றனர். இந்த வீட்டருகேதான் நான் ஏற்கெனவே மருத்துவமனை நடத்தி வந்தேன். என் குழந்தைகளுக்கும் இங்கு நடந்த விஷயங்கள் அனைத்தும் தெரியும். என் குழந்தைகளும் இந்த வீட்டை வாங்குவதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அவர்களும் ஆர்வத்துடன் வந்து வீட்டைப் பார்த்துச் சென்றார்கள். என்னை பார்க்க வரும் நோயாளிகளும் பயப்படத் தேவையில்லை. வீட்டில் தேவையான மாற்றங்களைச் செய்து எங்கள் குடும்பம் மகிழ்ச்சியுடன் வாழும்'' என்கிறார் நம்பிக்கையுடன்.

`காபி டே' சித்தார்த்தா தற்கொலை முதல் தீபிகாவின் அழுகை வரை! - 2019-ன் உளவியல் சிக்கல்கள்

சமூக ஆர்வலர் வீரேந்திர தியாகி என்பவர்தான் டாக்டர் மோகன்சிங்குக்கு இந்த வீட்டில் வசிக்கும் ஐடியாவை கொடுத்துள்ளார். இது குறித்து வீரேந்திர தியாகி கூறுகையில், ''இந்த வீட்டில் வசிக்க பயம் வேண்டாம் என்று நான்தான் மோகன்சிங்கிடத்தில் கூறினேன். ஏதாவது சந்தேகப்படும்படி இருந்தால், உடனடியாக என்னை அழையுங்கள். நான் உங்களுடன் வந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளேன். மக்களும் மீடியாக்களும்தான் தேவையில்லாமல் இந்த வீட்டைப் பற்றி வதந்தியைக் கிளப்புகிறார்கள். இறந்துபோனவர்கள் நல்ல மனிதர்கள். இங்கே, வாழ்ந்த வரை யாருக்கும் தொந்தரவு தந்ததில்லை. இறப்புக்குப் பிறகும் அவர்கள் யாருக்கும் தொந்தரவு தர மாட்டார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு