Published:Updated:

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: `கனடாவிலிருந்தே ஆட்டிப்படைக்கும் கிரிமினல்’| மினித் தொடர் 6

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்:

கனடாவில் தங்கியிருக்கும் கோல்டி பிரர் பஞ்சாப்பில் தனது அடியாட்கள் மூலம் தனி ராஜ்யம் நடத்திவருகிறார். அவரைக் குறித்தும் அவரின் கூட்டம் குறித்தும் பார்க்கலாம்!

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: `கனடாவிலிருந்தே ஆட்டிப்படைக்கும் கிரிமினல்’| மினித் தொடர் 6

கனடாவில் தங்கியிருக்கும் கோல்டி பிரர் பஞ்சாப்பில் தனது அடியாட்கள் மூலம் தனி ராஜ்யம் நடத்திவருகிறார். அவரைக் குறித்தும் அவரின் கூட்டம் குறித்தும் பார்க்கலாம்!

Published:Updated:
பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்:
பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: கான்ஸ்டபிள் மகன் கிரிமினல்களின் தலைவனான கதை | மினித் தொடர் 5

பஞ்சாப் கிரிமினல் லாரன்ஸ் பிஸ்னோய் தன்னுடைய ஆட்கள் மூலம் சிறையில் இருந்துகொண்டே ஐந்து மாநிலங்களில் தனி ராஜ்யம் நடத்திவருகிறார். அவருக்கு உதவியாக இருப்பவர் கோல்டி பிரர். லாரன்ஸ் சிறைக்குச் சென்ற பிறகு அவரது கூட்டத்தை முன்னின்று நடத்திவரும் கோல்டி பிரர், பஞ்சாப் காங்கிரஸ் பிரமுகர் குர்லால் சிங்கைக் கடந்த ஆண்டு கொலைசெய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார். தன் உறவினரைக் கொலை செய்ததற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த கொலையை கோல்டி பிரர் செய்தார்.

இந்தக் கொலைக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் கனடாவுக்கு தப்பிச்சென்றார். கனடாவில் இருந்துகொண்டு லாரன்ஸ் கூட்டத்தினரை வழிநடத்திவரும் கோல்டி, பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலாவைக் கொலை செய்யப்பட்டதில் முக்கியப் பங்கு வகித்தார். இவர்தான் சிறையிலிருக்கும் லாரன்ஸுடன் சேர்ந்துகொண்டு மூஸ்வாலா கொலைக்குத் திட்டம் தீட்டினார். சத்விந்தர்ஜித் சிங் என்ற உண்மையான பெயரைக்கொண்ட கோல்டி பிரர் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோல்டி பிரர்
கோல்டி பிரர்

பஞ்சாப்பில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் கோல்டி பிரர் மீது நிலுவையில் இருக்கின்றன. பஞ்சாப்பில் பரித்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த கோல்டி, கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்று தனது குடும்பத்தோடு தங்கியிருக்கிறார். அவரைக் கைதுசெய்ய பஞ்சாப் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்திருக்கிறது. பஞ்சாப்பில் கொலை வழக்கு ஒன்றில் கோல்டி தண்டிக்கப்பட்டதால் போலீஸ் அதிகாரியான அவரின் தந்தைக்கு அரசு கட்டாய ஓய்வு கொடுத்தது. பஞ்சாப் கள்ளச்சாராய சந்தையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்பதற்காக சிறையிலிருக்கும் கவுசல் என்ற கிரிமினலின் இரண்டு கூட்டாளிகளை கோல்டி பிரர் தனது ஆட்கள் மூலம் கொலைசெய்தார்.

இந்தக் கொலை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேர் இந்தக் கொலையில் கோல்டி பிரருக்குத் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தினர். கோல்டி பிரரை எப்படிக் கைதுசெய்து கொண்டுவருவது என்று தெரியாமல் பஞ்சாப் போலீஸார் திணறிவருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பஞ்சாப்பை ஆட்டிப்படைத்த மற்றொரு கிரிமினல் தேவிந்தர் பாம்பியா. கபடி வீரரான தேவிந்தர் சிங் சித்து, தனது பெயரை தேவிந்தர் பாம்பியா என்று மாற்றிக்கொண்டர். பாம்பியா என்பது அவரது கிராமத்தின் பெயர். உள்ளூரில் நடந்த கொலை ஒன்றில் சிறைக்குச் சென்ற தேவிந்தருக்கு சிறையில் பல கிரிமினல்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களால் கவரப்பட்டு தனது 21-வது வயதிலேயே தனிக் கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார். மிகவும் குறுகிய காலத்தில் தேவிந்தரும், அவரின் ஆட்களும் பிரபலமானார்கள். தேவிந்தர் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு அதைச் சமூக வலைதளத்தில் குறிப்பிடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார். `உங்களது பகுதியில் கொலை எதுவும் நடக்கவில்லையெனில் அங்கு எனது பெயரை குறித்துக்கொள்ளுங்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது கூட்டத்தினர் மற்ற கிரிமினல் கும்பலோடு தொடர்பு எதுவுமின்றி தனி அணியாகச் செயல்பட்டனர்.

தேவிந்தர்
தேவிந்தர்

அதே சமயம் விக்கி கவுண்டர் கூட்டத்தினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு குற்றங்களில் ஈடுபட்டுவந்தார். லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டத்தினரும், தேவிந்தர் கூட்டத்தினரும்தான் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருந்தனர். அவர்களின் சண்டையில் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் கேங்வாரில் இந்த ஆண்டு சந்தீப் அம்பியா என்ற கபடி வீரர் கடந்த மார்ச் 14-ம் தேதி விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்தபோது பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

தேவிந்தர் கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டாலும், அவனுடைய கூட்டத்தினர் இன்னும் தனி அணியாகச் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களை இப்போது அர்ஜென்டினாவில் இருக்கும் கௌரவ் லக்கி என்பவர் வழிநடத்திவருகிறார்.

இது இல்லாமல் டெல்லியில் நீரஜ் பாவனா கூட்டத்தினருடனும், ஹரியானாவில் தில்லு என்பவரின் கூட்டத்தினருடனும் சேர்ந்து செயல்பட்டுவருகின்றனர். பஞ்சாப் போலீஸார் எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், கேங்வாரை அவர்களால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் அருகில் பஞ்சாப் இருப்பதால் ரெளடிகள் குற்றங்களைச் செய்துவிட்டு அண்டை மாநிலங்களுக்குச் சில மணி நேரத்தில் சென்றுவிடுகின்றனர். இந்த கேங்வாருக்கு பயந்துதான் பஞ்சாப் அரசு 400-க்கும் அதிகமானோருக்கு பாதுகாப்பு கொடுத்துவருகிறது. இடையில் பாதுகாப்பு விலக்கிக்கொண்டதால்தான் பாடகர் மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்டார். பஞ்சாப்பையும் கேங்வாரையும் பிரிக்க முடியாத நிலை தொடர்கிறது!